செவ்வாய், 24 ஏப்ரல், 2012

சிலைகள் என்ன செய்யும் ?

சிலைகள் என்ன செய்யும் ?


ஆத்திகராய்    இருந்த  ஈரோடு  ராமசாமியை 
சாதியை  எதிர்த்து  போராடும்  பெரியாராக  மாற்றி 
போராட்ட பாதையில்  செலுத்தியது  யார்  தெரியுமா ?
விக்டோரியா  மகாராணியோ  அல்லது  
வேல்ஸ்  இளவரசரோ  அல்ல 
உழைக்கும்  மக்களை  ஊருக்கு  வெளியே  
ஒதுக்கி  வைத்து  கேடு விளைவித்த  
இங்குள்ள  ஒரு   சில  பிரிவினரே .

பெரியார்  சிலை  வைத்தால்  ஏன்  பதறுகிறீர்?
சிலைகளால்  என்ன  செய்ய  முடியும்  ?
நீர்  கொண்ட  கொள்கைகளில்  உறுதியாய்  இருந்தால் 
சிந்திப்பீர் .அழிவு  செயல்களில்  ஈடுபட்டு  பிறருக்கு 
துன்பம்  விளைவிக்கும்  எண்ணங்களை  விட்டோழிப்பீர் .


பெரியார் சிலைகலாகட்டும்  அல்லது
பெருமாள்  சிலைகலாகட்டும் 
அவைகள்  ஒன்றும்  செய்வதில்லை  
வைத்த இடத்தில  அப்படியேதான்  இருகின்றன 





















அதை  வைப்பவர்கள்தான்  ஒருவரைஒருவர்  
அறிவில்லாமல் அடித்துக்கொள்கிறார்கள்  
அவரவர்கள் தங்கள்  கொள்கைகளை 
 நிலை  நாட்டும்  பொருட்டு 

சிலைகள்  சிலையாய்  இருக்கும்போது  
தோன்றாத  பிரச்சினைகள்   அதை  
உடைக்கும்போது மட்டும் தோன்றுவதேன்  ?
ஏனெனில்  அச்செய்கை  அதை நிறுவிய 
மனிதர்களின்  உணர்வுகளை 
பாதிப்பதினால்தான் 

உணவோடு  விளையாடினால்  
உடல்நலம்  பாதித்து 
உயிர் போவது போல்  
மக்களின் உணர்வோடு விளையாடினால் 
பலியாகும் பல உயிர்கள் 

அவரவர்  கருத்துக்கு  மதிப்பளித்து  
ஆக்குவோம்  இந்த  உலகை 
அமைதிபூங்காவாக 

புதன், 18 ஏப்ரல், 2012

இன்றைய வள்ளுவம்


இன்றைய  வள்ளுவம் 

வள்ளுவந்தன்னை உலகினுக்கே  தந்து 
வான்  புகழ்  கொண்ட  தமிழ்நாடு 
என்று  பாரதி  முழங்கிய  இந்நாட்டில் 
வள்ளுவன்  கொள்கைகளை  
குழி  தோண்டி  புதைத்துவிட்டு  அதன்  மீது  
வானுயர  சிலைகளை  அமைத்து  விட்டனர் 
மென்மொழி  பேசும்  வன்மனம்  கொண்ட
தமிழ் நாட்டை ஆண்ட
ஆட்சியாளர்கள் இங்கு 


கள்ளுண்ணாமையையும்  புலால்  மறுத்தலையும்
வலியுறித்திய  வள்ளுவன்  ஏனோ  திருக்குறளை 
முடிப்பதற்குள்  அது  எதிர்காலத்தில்  சாத்தியமில்லை 
என்று  எண்ணியே  சொல்லுதல்  யார்க்கும்  எளியவாம் 
அரிதாம்  சொல்லியவண்ணம்  செயல்  என்று  ஒரு  
குறளை  சேர்த்து  விட்டான்போலும் 

தற்கால  ஆட்சிகளின்  மாட்சி 

காலையில்  குடிநீருக்காய் குடங்களுடன்  
அலையும்  பெண்கள்  கூட்டம் 
மாலையில்  நாள்  முழுதும்  உழைத்து  கிடைத்த 
காசை  தன்னை  நம்பியிருக்கும்  குடும்பத்திற்கு 
கொடுக்காமல்  ஆண்கள்  அரசு  மதுக்கடைக்கு  சென்று 
தொலைத்துவிட்டு  இரவு  வீட்டிற்கு  சென்று  பெண்களை 
கண்ணீரை  வரவழைக்கும்  தினசரி  காட்சி 
இதுவே  தற்கால  தமிழக   கட்சிகளின்  ஆட்சியின்  மாட்சி 

பூவும் பொட்டும்

கணவனால்  பூவும்  பொட்டும்  நிலைக்கும்  என்று  நம்பியே 
தமிழ்  பெண்கள்  காயும்  வெய்யிலில்  பூ  கட்டி  விற்று 
கணவனுக்கும்  குழந்தைகளுக்கும்  சோறு  போடும் 
நிலைமையை  உருவாக்கி  விட்ட    ஆள  வந்த  சுரண்டல் 
பேர்வழிகள்  என்று  பெருமை   படைத்தது  கொண்டிருக்கிறது 
இன்றைய  தமிழ்நாடு 

கட்சி  அடிமைகள் 

கட்சி  தொண்டர்கள்  என்று  பெயர்  சூட்டி 
அவர்களை  நிரந்தரமாக  அடிமைகளாக்கி 
அவர்கள்  உழைப்பில்  சுகம்  காணும் 
அரசியல்  கட்சி  தலைவர்கள் 
கட்சி  தொண்டர்கள்  மூலம்  பல  கோடி  வசூலித்து 
ஏப்பம்  விடும்  அதன் தலைவர்கள்  
ஆட்சிக்கு  வந்தவுடன்  மக்கள் 
வரிபணத்தில்  சில  ஆயிரம்  பேருக்கு 
மட்டும்  இலவசமாக  சிலவற்றை  
அளித்துவிட்டு  அதிலும் கமிஷன்  பெற்றுக்கொண்டு 
மக்களை  ஏமாற்றும்  வித்தையை
மக்கள்  எப்போதுதான்  
புரிந்து  கொள்ளபோகிறார்களோ 


தமிழனின்  தலைஎழுத்து 

தமிழனின்  தலைஎழுத்து  
ஏதாவதொரு  அரசியல்  கட்சிக்கு 
தன்னை  ஆயுள்  முழுவதும் 
தன்னை  அடிமையாக  வைத்திருப்பதே 
உணர்ச்சிக்கு  அடிமையாகி  
உண்மையை  உணரும் 
சிந்திக்கும்  சக்தியை  அறவே 
இழந்து  விட்டதே இதற்க்கு காரணம் 
இந்நிலை  மாறினால்தான்  
தமிழனும்   தமிழ்நாடும்   முன்னேறும்  

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

தமிழே நீ என்றும் இருப்பாய்


தமிழன்னையே 
உன்னுடைய   கோடானகோடி  
பிள்ளைகளில் நானும்  ஒருவன்
  ;
நான்  தமிழறிந்தவனே  தவிர  தமிழை முழுமையாக கற்றவனல்லன் ;
தன  குழந்தையின்  மழலை  தாய்க்கு  இனிப்பது  போல் 
நான் எழுதும்  தமிழும்  உனக்கு  நிச்சயம்  இனிக்கும் 

தாய்  தமிழே  உனக்காக  இங்கு  வாழ்நாள்  
முழுவதும்  உழைத்தவர்கள்  உண்டு  .

ஆனால்  உன்னை  வைத்து  பிழைப்பவர்கள்தான்  
அதிகம்  இன்று  உனக்கும்  தெரியும்
கரை காண  இயலா  கடலின்  கரையில் 
நின்றுகொண்டு   கடல்முழுவதையும்  
கரைத்து   குடித்து  விட்டதாக  மார்  தட்டும்
இறுமாப்பு  பிடித்தவர்களும்  உன்  படைப்புக்கள் 
என்பதை  நான் அறிவேன் 


என்  செய்வது ?
அவர்களும்  உன் குழந்தைகள்தானே !


கருவியாக  இருப்பவன்  கர்வியாகவும்  இருக்கிறான் 
தன்னை  வரகவி  என்று  வர்ணித்துக்கொள்ளுகிறான்  
வரலாற்றில்  காணாமல்  போகபோகும்  அவர்கள் 
சுவரில்லா  சித்திரங்கள் ;

உள்ளிருந்து  நீ  எழுதுவதை  உணராமல்  தானே  எழுதியதை 
தாந்தோன்றிதனமாய்  தம்பட்டம்  அடித்துக்கொள்ளுகிரார்கள்  
;
தமிழுக்கு  இழுக்கென்றால்  தலையை  கொடுப்பேன்  என்கிறார் 
தமிழே தெரியாதவன்  
 .
வாழை  பழத்தை  வாலை  பலம்  என்று உச்சரிக்கும் 
தமிழர்கள்தான்  இன்று தமிழ்  நாட்டின்  குடிமகன்களும்  முடிமகன்களும்  ;.

பிழைக்க  மட்டும் உன் தயவு  தேவை  சிலருக்கு  
உன்னை வளர்க்கும்  எண்ணம்  அவர்களுக்கு  இல்லை 

இன்னும்  சிலர்  கேட்கிறார்கள்  தமிழ் படித்தால் 
பிழைப்பு  நடக்குமா  என்று ?

தமிழே  நீ என்றும்  இருப்பாய் 
கடல்  சூழ்ந்த  இவ்வுலகம்  என்னும்  
கண்ணாடி  புட்டிக்குள்பத்திரமாய்  
ஆனால்  புட்டியின்  மேல்  உள்ள  
தகவல்  சீட்டுக்கள்  மட்டும்
மாறும்   அவ்வப்போது  .