சனி, 6 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-9)

நான் கவிஞனுமில்லை 
நல்ல ரசிகனுமில்லை 
(பகுதி-9) 

ஒரு கால கட்டத்தில் அலுவலக வேலைப்பளு
அதிகமாகிகொண்டே  போயிற்று.

காலையில் சென்றால் வீடு  திரும்ப
இரவு வெகு நேரம் ஆகிவிடும்

என்னுடைய மூன்று குழந்தைகளும் தூங்கிவிடும்.
அவைகளை காலையில்தான் பார்ப்பேன்.

குழந்தைகளை எங்கும் வெளியே கூட்டி
செல்ல எனக்கு நேரமும் கிடையாது
கூட்டி சென்றால் செலவு 
செய்ய காசும் கிடையாது.

என் மனைவி அவர்களுக்கு கதைகள்
சொல்லிக்கொண்டும் பாட்டு பாடியும்
தூங்க வைத்து விடுவாள் 

அவளும் என்னை சினிமாவிற்கு கூட்டி செல்லுங்கள்
 அல்லது வெளியே எங்காவது செல்லலாம்
என்று நச்சரித்து தொந்தரவு செய்தது கிடையாது

ஓயாமல் ஆன்மீக புத்தகங்களை படித்தமையால்
குடும்பத்தை அவர்கள் பிறந்த வீட்டில்
விட்டுவிட்டு விட்டு எங்காவது ஓடிவிடலாமா
என்று கூட தோன்றும்

அலுவலகத்தில் வேலைப்பளு
எவ்வளவு வேலை செய்தாலும் குறையவில்லை
ஏராளமான வேலைகள் என் தலையில் கட்டப்பட்டன
அதனால் என் பிரிவில் ஏராளமான வேலைகள்
தேங்கி கிடந்தன
 யாராவது ஆய்வுக்கு வந்தால் நிச்சயம்
பதில் சொல்ல வேண்டி வரும்
எப்படி சமாளிப்பது  என்ற பயம்வேறு
மனதை வாட்டி எடுத்தது
அதனால் இரவில் தூக்கம் வருவது கிடையாது .

ஆனால் மனைவியும், குழந்தைகளும்
 நம்மை நம்பி இருப்பவர்கள். அப்பாவிகள்
அவர்களை விட்டு எப்படி பிரிவது?


இப்படி இருக்கையில் ஒரு நாள்  பகவத் கீதையின்
இரண்டாம் அத்தியாயத்தை படித்தேன்.

அதில் பகவான் கண்ணன் போர்களத்தில்
போரை தொடங்கும் நேரத்தில்
அர்ஜுனன் போரை நிறுத்துமாறு கேட்டுகொள்கிறான்

ஏதேதோ பிதற்றுகிறான்,இந்த போர் வேண்டாம்
 நான் போர் புரிய விரும்ப வில்லை.
போரில் ஜெயித்தாலும் அந்த அரச பதவி வேண்டாம்
என்றெல்லாம் கூறுகிறான் ,
எல்லாவற்றையும் விட்டுவிட்டு
துறவியாக போய்விடுகிறேன்
என்று பிதற்றுகிறான்.

அவன் உளறுவதும் நான் உளறுவதும்
ஒத்து போயிற்று

அவன் போர்களத்தில் உளறுகிறான்
 நான் வாழ்க்கை என்னும் போர்களத்தில் உளறுகிறேன்.
அதுதான் வித்தியாசம்
கண்ணன் அர்ஜுனனுக்கு உபதேசித்ததை
எனக்கு என்று எடுத்துக்கொண்டேன்  

அதை தொடர்ந்து அந்த அத்தியாயத்தை
பல முறை படித்தேன்
எனக்குள் தெளிவு பிறந்தது

அது என்ன என்று  சொல்லுகிறேன்
நிச்சயம் அது எல்லோருக்கும் பயன்படும் (இன்னும் வரும்)  .

1 கருத்து: