புதன், 3 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-2)

நான் கவிஞனுமில்லை 
நல்ல ரசிகனுமில்லை (பகுதி-2)

நான் நான்காம் வகுப்பு வரை 
பல ஊர்களில் பள்ளியில் படித்தேன்
என்ன படித்தேன், எங்கு என்று கூட 
சரியாக நினைவில்லை

எந்த ஊரில் என்று நினைவில்லை திருப்பாவை பாடல்களை 
ஒப்புவித்த மைக்கு ஒரு சிறிய திருக்குறள்  புத்தகம் பரிசாக பெற்றேன் அதை வீட்டில் வைத்துகொண்டு அந்த புத்தகத்தின் மேல் அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவரின் படத்தை பார்த்து ரசித்தது நினைவிருக்கிறது  ஆனால் அந்த இன்பம் கூட நீடிக்கவில்லை. ஒரு பைய்யன்  அதை பார்த்துவிட்டு  தருவதாக என்னிடமிருந்து புத்தகத்தை பிடுங்கி கொண்டு ஓடி விட்டான். பிறகு என்ன வீட்டில் உதையும் திட்டும் வழக்கம்போல். பரிசு பெற்றேன் என்ற மகிழ்ச்சியும் இல்லை. அடி விழுந்ததே என்ற வருத்தனும்  இல்லை மனம் கல்லாகிவிட்டது. 

ஆனால் என்னுடைய கல்வியின் அடித்தளம் 
மிகவும் weak என்பதை 
ஐந்தாம் வகுப்பில் ஒரு கிராம ஆரம்ப பள்ளியில் 
சேர்ந்தவுடன் தெரிந்துகொண்டேன்
பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் 
பாடம் ஒன்றும் புரியவில்லை

முக்கியமாக ஆங்கிலமும், கணக்கும்,
என்னை பயமுறுத்திய பாடங்கள்.

எனக்கு வாய்த்த ஆசிரியர்கள் 
முரட்டு சிங்கங்கள்
என்னுடைய ஐயோ பாவம் முகத்தை 
பார்த்தாலே இவனை நாலு அறை சாத்தினால் என்ன 
என்று அவர்கள் மனம் நினைக்கும் போலும் 

ஏற்கெனவே  எனக்கு ஒன்றும் 
விளங்காத நிலையில் ஆசிரியர்கள்
பாடத்தில் கேள்வி கேட்டால் 
எனக்கு என்ன பதில் தெரியும்?
ஆறாவது மற்றும் ஏழாவது வகுப்பிலும்
 இந்த நிலைமைதான். 

பதில் தப்பாக இருந்தால் 
அடி விழுமே என்ற பயம் வேறு
பதில் சொல்லாவிட்டாலும் அடி விழும் 
என்று அப்போது எனக்கு தெரியாது
பதில் தெரிந்தால் அல்லவோ சொல்வதற்கு
முழித்து கொண்டே நிற்பேன்
அடுத்த கணம் கன்னத்தில் பளார் என்று அறை  விழும் 
கன்னம் சிவந்து விடும். 
அழுவதற்கும் பயம். 
வாய் மூடி மெளனமாக நிற்ப்பேன். 
எழுந்து வீட்டிற்கு போய் தொலை என்பார்கள் 
உடனே வீட்டிற்கு சென்று விடுவேன் 
வீட்டிலும் சொல்வதற்கு பயம். 
உள்ளதை சொன்னால்  திட்டு விழுமே 

என் தந்தையிடம்  உதை வாங்குவதை
காண சகிக்காமல்தான் 
என் அன்னை தன் பிறந்தவீட்டில் தாத்தா பாட்டியிடம் 
என்னை விட்டுவிட்டதால் ஆசிரியர்களிடத்தில் 
மட்டும்தான்  மட்டும் அடி வாங்கினேன். 
இல்லாவிடில் மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி 
என்பது போன்ற நிலைமை எனக்கு வந்திருக்கும். 

தந்தை தாயின் அரவணைப்பில்லை.
ஆறுதல் சொல்வாரில்லை, 
என்ற நிலையில் ஏக்கத்துடன் 
என் இளமை வாழ்க்கை கழிந்தது
.
நான்  தாழ்வு மனப்பான்மையினால் 
பீடிக்கப்பட்டு யாரை பார்த்தாலும்,
எதை கண்டாலும்,
எதற்கும்  பயந்து பயந்துநடுங்கும் 
கோழையாக்கி விட்டன. 

அதிலிருந்து மீள பல ஆண்டுகள் பிடித்தது 
அதற்க்கு எனக்கு நான்  படித்த புத்தகங்கள்தான் 
துணை நின்றன. மனிதர்கள் அல்ல. 

அந்த காலத்தில்  எட்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதவேண்டும்.
அதில் தேர்வுற்றால்தான் மேற்படிப்புக்கு
நகரத்தில் உள்ள பள்ளியில் சேரமுடியும்.
நான் நிச்சயம் அந்த தேர்வில் தேரமாட்டேன்
என்று அனைவருக்கும் தெரியும்

அதை தவிர்ப்பதற்காக ஏழாம் வகுப்பிலேயே 
பள்ளி இறுதி சான்று வாங்கிகொண்டு 
நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில்  
எட்டாம் வகுப்பில் சேர்ந்துவிட்டேன்
அங்கு சேர்ந்த பின்தான் கரடிக்கு பயந்துகொண்டு
முதலையிடம் அகப்பட்டுகொண்டது  தெரிந்தது.(இன்னும் வரும்) 

2 கருத்துகள்:

  1. /// அதற்கு எனக்கு நான் படித்த புத்தகங்கள்தான்
    துணை நின்றன. மனிதர்கள் அல்ல. ///

    உண்மை... உண்மை...

    தொடர்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும்
    கருத்துக்கும் நன்றி DD

    பதிலளிநீக்கு