சனி, 6 அக்டோபர், 2012

அண்ணாமலையும் அண்டப்புளுகும்

அண்ணாமலையும் அண்டப்புளுகும்

திருவண்ணாமலை என்றவுடன்
அனைவருக்கும் நினைவுக்கு
வருவது அண்ணாமலை தீபம்தான்

தற்காலத்தில் பௌர்ணமிதோறும்
ஆயிரக்கணக்கான் மக்கள் கிரிவலம் போவது

கொஞ்சம் ஆன்மீகத்தில் பரிச்சயமானவ்ர்களுக்கு
நினைவுக்கு வருவது, ரமண மகரிஷி,
சேஷாத்ரி ஸ்வாமிகள், மற்றும் யோகி ராம் சூரத் குமார்.

அதைத்தவிர ஒரு புராண கதை ஒன்று உண்டு.

பிரம்மா மற்றும் விஷ்ணு இவர்களிடையே யார் பெரியவர் என்ற சண்டை மூண்டதாகவும். அவர்களின் சண்டையை தீர்க்க சிவபெருமான் ஜோதி வடிவில் நின்றதாகவும் யார் முதலில் அடியையும், முடியையும் கண்டு வருகிறார்களோ  அவர்களே பெரியவர்கள் என்று சொன்னதாகவும், விஷ்ணு பன்றி வடிவம் எடுத்து பூமிக்குள் தோண்டி சென்று சிவ  பெருமானின்   திருவடிகளைகாண முடியாமல் தோல்வியை ஒத்துக்கொண்டதாகவும் திரும்பி விட்டதாகவும் ,பிரம்மாஅன்னபறவை வடிவம் எடுத்து மேலே பறந்து சென்று சிவனின் முடியை காண இயலாமல் அப்போது  சிவனின் முடியிலிருந்து விழுந்துகொண்டிருக்கும் தாழம்பூவை தான் சிவபெருமானை முடியை கண்டதாக சிவனிடம் பொய் சொல்ல சொன்னதாகவும் அதை அறிந்த சிவபெருமான் இனி எனக்கு தாழம்பூ மலரை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் பிரம்மாவிற்கு இனி  இந்த உலகத்தில் கோயில் கட்டி வழிபடக்கூடாது என்று சாபம் கொடுத்ததாகவும் எவனோ ஒரு அண்டப்  புளுகன் புத்திசாலிதனமாக கட்டிவிட்ட கதை இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது

இதற்க்கு ஆதாரமாக  புரட்டுகள் பல இடைக்காலத்தில் நுழைந்து விட்ட புராணங்களும், அதை கண்ணும் காதும் வைத்து கதை விட்டு காசு பார்க்கும் ஆன்மீக வியாபாரிகளும் இந்த கதையை இன்னும் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பக்தர்களும் வாய் பிளந்து பக்தி சிரத்தையுடன் இந்த கதையை கேட்டு கேட்டு பக்தி பரவசத்தில் மிதந்து கொண்டிருக்கிறார்கள்

காக்கும் கடவுள் விஷ்ணு,அழிக்கும்கடவுள் சிவன், படைக்கும் கடவுள் பிரம்மா
மூவரும் மும்மூர்த்திகள் என்றழைக்கப்டும் உயர்நிலை தெய்வங்கள்

அப்படி இருக்கும்போது ஒரு சாதாரண மனிதனுக்கும் தெரியும் கடவுளுக்கு எல்லாம் தெரியும் என்று.
அப்படி இருக்கும்போது படைக்கும் கடவுளுக்கு பொய் சொன்னால் சிவனால் கண்டுபிடித்து விட முடியாது என்று எப்படி நினைத்திருக்க முடியும் என்று கதையை கேட்போர் கொஞ்சம்கூட சிந்திப்பது கிடையாது

உண்மையில் இந்த கதையின் தத்துவம் என்னவென்றால் இறைவனை அடைய செல்வம் படைத்தவன் எது வேண்டுமானாலும் செய்வான். என்றும் படித்தவன் குறுக்கு வழியை பயன்படுத்துவான்.

விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்துள்ளதால்விஷ்ணு  செல்வத்திற்கு அதிபதியான இலக்குமியின் கணவரான தாலும். பன்றி வடிவத்தில் பூமியை தோண்டியதாக கதை கட்டி விட்டிருக்கிறார்கள்
அன்னபறவை பிரம்மனின் வாகனமாக இருந்ததால் அவர் அன்னபறவை மேல் உட்கார்ந்து மேலே பறந்து சென்றதாகவும் கதை கட்டி விட்டிருக்கிறார்கள்

செல்வம் செருக்கு படைத்தவனாலும்  
கல்வி செருக்கு படைத்தவனாலும் 
இறைவனை அடைய முடியாது
பக்தியினால் மட்டுமே அடையமுடியும்
என்பதுதான் இந்த கதையின் தத்துவமாக  இருக்க முடியுமே தவிர
தெய்வங்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்தல் அறிவுடையோர்களின் நோக்கமாக இருக்க முடியாது

2 கருத்துகள்:

 1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி DD
  இதை போன்றுதான் எண்ணற்ற
  பொய்களும் புரட்டுக்களும்
  இந்து மதத்தில் புராணங்கள்
  என்ற பெயரில் உலா
  வருகின்றன.
  ஒரு பலாப்பழத்தில் எண்பது
  விழுக்காடுகள் தேவையற்ற பகுதிகள்
  இருப்பினும் அவற்றையெல்லாம்
  நீக்கிவிட்டு உள்ளே இருக்கும்
  இனிமையான பலாப்பழத்தை
  சுவைப்பதுபோல் புராணங்களுக்குள்
  மறைத்திருக்கும்/மறைந்திருக்கும்
  உண்மை தத்துவங்களை
  மக்கள் புரிந்து கொள்ள
  முயற்சி செய்யவேண்டும்.

  பதிலளிநீக்கு