சனி, 30 டிசம்பர், 2017

NEW YEAR SPECIAL-இசையும் நானும் (265) தமிழ் திரைப்படம் -சுபதினம் -ஆண்டு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது ..

2018-NEW YEAR SPECIAL இசையும் நானும் (265) தமிழ் திரைப்படம் -சுபதினம் -பாடல் -ஆண்டு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது ..

MOUTHORGAN-vedio(265)


திரைப்படம்-சுபதினம்(1969)
பாடல்-இசை-தி.ஜி .லிங்கப்பா 

பாடியவர்-சீர்காழிகோவிந்தராஜன்.வெண்கலக்குரலில்  இந்த பாடல். பிரசித்தம். 

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி 
ஆயிரம் இருக்குது சுபதினம் 
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு 
ஆயுள் முழுவதும் சுபதினம்.(ஆண்டுக்கு)

வள்ளுவன் பிறந்து குறளை சொன்னான் 
அறிவுக்கு அதுதான் சுபதினம் 
புத்தன் பிறந்து போதனை செய்தான் 
அன்புக்கு அதுதான் சுபதினம் 
காந்தி பிறந்து விடுதலை தந்தான் 
உரிமைக்கு அதுதான் சுபதினம் 
ஒருவன் துணிந்து தியாகம் செய்தால் 
உலகுக்கு அதுதான் சுபதினம் .(ஆண்டுக்கு)

நிறைகுடம் போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கு அதுதான் சுபதினம் 
உழுதுண்டு வாழும் மக்களுக்கெல்லாம் 
அறுவடை நாளே சுபதினம் 
லாட்டரி சீட்டில் லட்சம் விழுந்தால் 
கிடைத்தவர்க்கே அது சுபதினம் 
வள்ளலின் கையில் பல லட்சம் இருந்தால் 
எளியவர்க்கெல்லாம் அது சுப தினம் .(ஆண்டுக்கு)


வெள்ளி, 29 டிசம்பர், 2017

NEW YEAR -2018 thoughts

NEW YEAR -2018 thoughts
Pattabiraman Tr
Everybody is going to celebrate the arrival of the year 2018.
If there is arrival it is followed by departure.
 So it is unnecessary to be crazy about it.
.Our life in this world is passing moments.

The present moment will become a past at the next movement.
The next moment is a secret.nobody knows what will happen
.So utilize the each moment purposefully for you and your world.
Pl. don't harm anybody by thought, word or deed.Face the life with confidence and lead the life without cursing on IFs , BUTs.,destiny,GODS or any invented lies on on people, or time.etc etc.

வியாழன், 28 டிசம்பர், 2017

இசையும் நானும் (264) VAIKUNTA EKADASI SPECIAL -PURANDARADASAR-VENKATACHALANILAYAM

இசையும் நானும் (264) VAIKUNTA EKADASI SPECIAL -PURANDARADASAR-VENKATACHALANILAYAM 

MOUTHORGAN-vedio(264)



ஓவியம்-தி.ரா. பட்டாபிராமன் 

venkaTaacala nilayam
raagam: sindu bhairavi
10 naaTakapriya janya
Aa: S R2 G2 M1 G2 P D1 N2 S
Av: N2 D1 P M1 G2 R1 S N2 S
taaLam: aadi
Composer: Purandara Daasar
Language: Sanskrit
pallavi
venkaTAcala nilayam vaikuNThapura vAsam pankaja nEtram parama pavitram
shanka cakradhara cinmaya rUpam
(venkaTAcala)
anupallavi
ambujOdbhava vinutam agaNita guNa nAmam
tumbur nArada gAnavilOlam
(venkaTAcala)
caraNam
makara kuNDaladhara madanagOpAlam
bhakta pOSaka shrI purandaravithalam
(venkaTAcala)





புதன், 27 டிசம்பர், 2017

இசையும் நானும் (263) தமிழ் திரைப்படம் -வாழ்க்கை படகு (1965) song- உன்னைத்தான் நான் அறிவேன்



இசையும் நானும் (263) தமிழ் திரைப்படம் -வாழ்க்கை படகு    (1965) song- உன்னைத்தான் நான் அறிவேன் 

MOUTHORGAN-vedio(263)





Movie

வாழ்க்கை படகு    (1965) 

Song

உன்னைத்தான் நான் அறிவேன்

Lyrics: கண்ணதாசன் 
Singer: P சுசீலா 
Music: M S விஸ்வநாதன் 


உன்னைத்தான் நான் அறிவேன்
மன்னவனை யார் அறிவார்
என் உள்ளமென்னும் மாளிகையில்
உன்னையன்றி யார் வருவார். (உன்னைத்தான்)

யாரிடத்தில் கேட்டு வந்தோம்
யார் சொல்லி காதல் கொண்டோம்
நாயகனின் விதி வழியே
நாமிருவர் சேர்ந்து வந்தோம்
ஒன்றையே நினைத்து வந்தோம்
ஒன்றாக கலந்து வந்தோம்.(உன்னைத்தான்)

காதலித்தல் பாவமென்றால்
கண்களும் பாவமென்றோ
கண்களே பாவமென்றால்
பெண்மையே பாவமன்றோ
பெண்மையே பாவமென்றால்
மன்னரின் தாய்  யாரோ (உன்னைத்தான்)


திங்கள், 25 டிசம்பர், 2017

இசையும் நானும் (262) தமிழ் திரைப்படம் -அரச கட்டளை (1967) song- வேட்டையாடு விளையாடு


இசையும் நானும் (262) தமிழ் திரைப்படம் -அரச கட்டளை   (1967) song- வேட்டையாடு விளையாடு

MOUTHORGAN-vedio(262)








MovieArasa KattalaiMusicK. V. Mahadevan
Year1967LyricsAlangudi Somu
SingersP. Susheela, T. M. Soundararajan

வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு -
நீவெற்றி எனும் கடலில் ஆடு


குறும்புக்கார வெள்ளாடே
கொடியை வளைத்து தள்ளாதே
பொறுமையில்லா மனிதரைப் போல்
புத்தியைக் கெடுத்துக் கொள்ளாதே
அருகினிலே தழையிருக்க ஆகாயத்தில் தாவாதே
தருமத்தையே மறந்து உந்தன்
துணிவைக் காட்ட எண்ணாதே (வேட்டையாடு)



நேர்மை உள்ளத்திலே நீந்தும் எண்ணத்திலே
தீமை வந்ததில்லை தெரிந்தால் துன்பமில்லை
தேவை அங்கிருக்கு தீனி இங்கிருக்கு
செம்மறியாடே நீ சிரமப்படாதே (வேட்டையாடு)



குறும்பையாடே முந்தாதே
குள்ள நரியை நம்பாதே
கூடி வாழத் தெரிஞ்சுக்கோ
குணத்தைப் போற்றி நடந்துக்கோ
விரிஞ்சு கிடக்கும் பூமியிலே
இனத்தைத் தேடி சேர்ந்துக்கோ
விளக்கு வைக்கிற நேரம் வந்தா
வீடிருக்கு புரிஞ்சுக்கோ (வேட்டையாடு)


பெண்மை சிரிக்குது அது பேசத் துடிக்குது
நன்மை செய்வதே என் கடமையாகும்
நன்றி சொல்வதே என் கண்ணியமாகும்

நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும் (வேட்டையாடு)




ஞாயிறு, 24 டிசம்பர், 2017

இசையும் நானும் (261) தமிழ் திரைப்படம் -அண்ணன் ஒரு கோவில் (1977) song- அண்ணன் ஒரு கோவில் என்றால்

இசையும் நானும் (261) தமிழ் திரைப்படம் -அண்ணன் ஒரு கோவில்  (1977) song- அண்ணன் ஒரு கோவில் என்றால்


MOUTHORGAN-vedio(261)

Movie Name : அண்ணன் ஒரு கோவில்  (1977)

Song Name :அண்ணன் ஒரு கோவில் என்றால்

Music : MS Viswanathan 




Singers :  P Susheela
Lyricist : Kannadasan


அண்ணன் ஒரு கோவில் என்றால் 
தங்கை ஒருதீபமன்றோ (அண்ணன்)

அன்று சொன்ன வேதமன்றோ 
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்-தீபமன்றோ)
பொன்னை  வைக்கும் இடத்தினிலே 
பூவை வைத்து பார்ப்பதற்கு (பொன்னை)

அண்ணன்  அன்றி யாருமுண்டோ 
இன்னும் ஒரு சொந்தமுண்டோ (அண்ணன்)
அதன் பேர் பாசமன்றோ ((அண்ணன்-தீபமன்றோ)
தொட்டிலிட்ட  தாயும் இல்லை 
தோளிலிட்ட தந்தையில்லை (தொட்டிலிட்ட)


கண் திறந்த நேரம் முதல் 
கை  கொடுத்த தெய்வமன்றோ 
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்-தீபமன்றோ)

கண்ணன் மொழி கீதை என்று 
கற்றவர்கள்சொன்னதுண்டு (கண்ணன்)
அந்த மொழி எனக்கெதற்கு 
அண்ணன்  மொழி கீதையன்றோ 
அதன் பேர் பாசமன்றோ (அண்ணன்-தீபமன்றோ)




வெள்ளி, 22 டிசம்பர், 2017

இசையும் நானும் (260) தமிழ் திரைப்படம் - நெஞ்சில் ஓர் ஆலயம் (1962) song- ஒன்றையே நினைத்திருந்து

இசையும் நானும் (260) தமிழ் திரைப்படம் - நெஞ்சில் ஓர் ஆலயம்  (1962) song- ஒன்றையே நினைத்திருந்து



MOUTHORGAN-vedio(260)

Movie Name : நெஞ்சில் ஓர் ஆலயம்  (1962)

Song Name : ஒன்றையே நினைத்திருந்து
Music : MS Viswanathan/ராமமூர்த்தி 
Singers : TM Soundrarajan, P Susheela
Lyricist : Kannadasan


எனக்கு இந்த பாடலை எப்போது கேட்டாலும் 
என் கண்களில் கண்ணீர் வரும். 



ஒன்றையே நினைத்திருந்து 
ஊருக்கே வாழ்ந்திருந்து 
உயிர் கொடுத்து உயிர் காக்கும் 
உத்தமர்க்கோர் ஆலயம்..ஆலயம்.

ஒருவர் வாழும் ஆலயம் 
உருவமில்லா ஆலயம் 
நிலைத்து வாழும் ஆலயம் 
நெஞ்சில் ஓர் ஆலயம் (ஒருவர்)

கருணை தெய்வம் கைகள் நீட்டி 
அணைக்க தாவும் ஆலயம் 
காலமெல்லாம் திறந்து காணும் 
கதவில்லாத ஆலயம் 
பாசமென்னும் மலர்களாலே  பூஜை செய்யும் ஆலயம் 
தியாகமென்னும் ஒளியினாலே 
தீபம் ஏற்றும் ஆலயம் (ஒருவர்)


வியாழன், 21 டிசம்பர், 2017

இசையும் நானும் (259) தமிழ் திரைப்படம் - புதிய பூமி (1968)song- சின்னவளை முகம் சிவந்தவளைநான்

இசையும் நானும் (259) தமிழ்  திரைப்படம் - புதிய பூமி  (1968)song- சின்னவளை முகம் சிவந்தவளைநான்

MOUTHORGAN-vedio(259)





Movie Name : Pudhiya Boomi – 1968
Song Name : Chinnavalai Mugam Sivandhavalai
Music : MS Viswanathan
Singers : TM Soundrarajan, P Susheela
Lyricist : Kannadasan

சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு
சின்னவளை முகம் சிவந்தவளைநான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு

என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு
வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
பூக்குவளை கண்கள் கொண்டவளைபுது
பூப் போல் பூப் போல் தொட்டு


தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை
மெல்லத் தான் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
சுகம் பட்டால் பட்டால் படியும்

கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணால் சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ


வந்தவளைக் கரம் தந்தவளை
நீ வளைத்துக் கொள்வாய் வளையிட்டு
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு

வான மழை போல் ஆனவளை
சுவை எங்கே எங்கே மறப்பாய்
நீ அவளை விட்டுப் போகும் வரை
அது இங்கே இங்கே இருக்கோ

மின்னும் கை வளைமிதக்கும்
பெண்களை அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று
பெண்ணைக் கெஞ்சும் வரை சுவைத்தால் சுவைக்காதோ(வந்தவளை)
(சின்னவளை)




செவ்வாய், 19 டிசம்பர், 2017

இசையும் நானும் (258) HINDI திரைப்படம் - Chhoti Si Baat (1976) -song- न जाने क्यूँ,


இசையும் நானும் (258) HINDI  திரைப்படம் -

Chhoti Si Baat

 (1976)


-song- न जाने क्यूँ, 


MOUTHORGAN VEDIO-258



MOVIE : 

Chhoti Si Baat

 (1976)

MUSIC : 
Salil Chaudhury
SINGER Lata Mangeshkar

chhoti si baat movie માટે છબી પરિણામ

न जाने क्यूँ, होता है ये ज़िंदगी के साथ
अचानक ये मन
किसी के जाने के बाद,  करे फिर उसकी याद
छोटी छोटी सी बात,  न जाने क्यूँ 

वो अंजान पल
ढल गये कल, आज वो
रंग बदल बदल,  मन को मचल मचल
रहें, न चल न जाने क्यूँ, वो अंजान पल
तेरे बिना मेरे नैनों मे
टूटे रे हाय रे सपनों के महल
न जाने क्यूँ, होता है ये ज़िंदगी के साथ ...

वही है डगर
वही है सफ़र, है नहीं
साथ मेरे मगर,  अब मेरा हमसफ़र
ढूँढे नज़र न जाने क्यूँ, वही है डगर
कहाँ गईं शामें मदभरी
वो मेरे, मेरे वो दिन गये किधर
न जाने क्यूँ, होता है ये ज़िंदगी के साथ ...

சனி, 16 டிசம்பர், 2017

இது என்ன இனிப்பு (பகுதி-3)

இது என்ன இனிப்பு (பகுதி-3)


இனி இனிப்பை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம். 


மிக எளிது. 

பூசணி விதைகளை கழுவி நன்றாக 
உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். 

விதையிலிருந்து பருப்பை எப்படி எடுப்பது 
என்று பார்ப்போம். 

ஒவ்வொன்றாக தோலை உரித்து பருப்பை எடுப்பது 
எளிதாக தோன்றவில்லை.

வாணலியில் வறுத்தால் தோல் பிளந்து பருப்பு வெளியே 
வந்துவிடும் என்ரார்களது சரிப்பட்டு வரவில்லை. விதைகள் தீஞ்சு 
போனதுதான் மிச்சம். 

முடிவாக நானே ஒரு வழி கண்டுபிடித்தேன் 

சட்னி ஜாரில் போட்டு  4 சுற்று சுத்தியதில்  பருப்பு மாவாக வெளிய வந்து விட்டது. சல்லடையில் போட்டு ஜாலித்ததும்  தோல் தனியே வந்துவிட்டது. 

அவ்வளவுதான் ஒரு கப் மாவிற்கு ஒரு கப் சக்கரை பாகு வைத்து 
கொஞ்சம் இளஞ் சூட்டில் நெய் விட்டு  கிளறி இறக்கினேன்.

அருமையான சுவையான ,சத்தான .பூசணி பர்பி. 

நீங்களும் செய்து சுவையுங்கள். 



Maayaa's All Natural Raw Pumpkin Seeds 400g

பொறுமை இல்லாதவர்களுக்கு அங்காடியில் தோல் நீக்கிய பூசணி பருப்புகள் கிடைக்கும். அதை பயன்படுத்தி குறைந்த சிலவில் சத்தான இனிப்பு செய்து சுவைத்து மகிழலாம். 

இது என்ன இனிப்பு (பகுதி-2)

இது என்ன இனிப்பு (பகுதி-2)

  • இது என்ன இனிப்பு (பகுதி-2)

  • மஞ்சள் பூசணி விதையின் பெருமைகள்.
  • Pumpkin seeds contain L-tryptophan, which helps promote sleep and fight depression. Tryptophan is converted into serotonin and niacin, which aids in sleeping.
  • Pumpkin seeds contain phytosterols, compounds that that have been shown to reduce levels of LDL cholesterol.
  • Pumpkin seeds are filled with lots of minerals including phosphorus, magnesium, manganese, iron and copper.
  • They are a good source of vitamin K.
  • High in zinc, pumpkin seeds are a natural protector against osteoporosis, since zinc deficiencies can lead to higher rates of osteoporosis. In a study of almost 400 men (age from 45-92) published in the American Journal of Clinical Nutrition, researchers found a correlation between low dietary intake of zinc, low blood levels of the trace mineral and osteoporosis at the hip and spine.
  • Pumpkin seeds are a good source vitamin E; they contain about 35.10 mg of tocopherol per 100 g.
  • They are the most alkaline-forming seed.
  • Pumpkin seeds are an excellent source of vitamin B group (thiamin, riboflavin, niacin, pantothenic acid, vitamin B-6 and folates).
  • 100 g of pumpkin seeds contains about 30 grams of protein.
  • According to studies, pumpkin seeds prevent calcium oxalate kidney stone formation.
  • Pumpkin seeds reduce inflammation and counter arthritis pain without the side effects of anti-inflammatory drugs.
  • They are used in many cultures as a natural treatment for tapeworms and other parasites.
  • Pumpkin seeds are good for prostate health. The oil in pumpkin seeds alleviates difficult urination that happens with an enlarged prostate
(யாராவது தமிழாக்கம் செய்து பதிவிட்டால் நலம்)

இவ்வளவு மதிப்புள்ள பூசணி விதைகளை தலை சுற்றி குப்பையிலே வீசிவிடுகிறோம்.

நம்மை போன்ற அறிவாளிகள்  இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது. 

ஒரு பைசா செலவில்லாமல் கிடைக்கும் கோமேதகத்தை அதன் அருமை தெரியாமல் குப்பையில் வீசிவிடுகிறோம். 

கிலோ 1200 ரூபாய் விற்கும் முந்திரிப்பருப்பையும் பாதாம் பருப்பையும் கட்டிக்கொண்டு அழுகிறோம்.

அனைவருக்கும் இயற்கை இலவசமாக அளித்துள்ள ரத்தினத்தின் மகிமையை அறியாமல் இருக்கிறோம். 

இனிமேலாவது பூசணி விதைகள் தூக்கி எறியாமல் உலர்த்தி எடுத்து வைத்து 
பயன்படுத்தி உடல் நலத்தை பேணுவோமாக. 

சென்ற பதிவில் கண்ட  இனிப்பை பூசணி விதையை பயன்படுத்தி செய்தேன் 
அருமையான சுவை. 

எல்லாவற்றையும் தின்று தீர்த்துவிட நினைத்தேன். 

ஆசையை அடக்கி கொண்டு ஒரு பதிவு போட்டுவிட்டு. பிறகு உள்ளே  தள்ளலாம். என்று நினைத்தேன். (தொடரும்) 

இது என்ன இனிப்பு?

இது என்ன இனிப்பு?

படத்தில் உள்ள இனிப்பு எந்த
பொருளை வைத்து செய்யப்பட்டுள்ளது. ?

தெரிந்தவர்கள் கூறவும். (விவரம் அடுத்த பதிவில்).

வெள்ளி, 15 டிசம்பர், 2017

நான் யார்?

நான் யார்?

 நான் யார்?

நான் யார் ?

இந்த கேள்விக்குப்பதில்

நான் "ஆன்மா"

அது எங்கிருக்கிறது?

அது எல்லா உயிர்கள் உள்ளும் இருக்கிறது.

அது அவனா இல்லை அவளா இல்லை அதுவா ?

அது அவனும் இல்லை அவளும் இல்லை. அது ஒரு "அது"தான்.

அவன் அல்லது அவள் அதுதங்கியுள்ள உடலுக்குத்தான்.

அந்த ஒரே வஸ்துதான் எல்லா உயிர்கள் உள்ளேயும் இருக்கிறது.

அது தங்கியுள்ள  உடல்கள் இயற்கையிலிருந்து  உருவாகி அதையே உண்டு வளர்ந்து முடிவில் அந்த இயற்கையிலேயே கலந்து விடும்.

அப்படியானால் உயிர்களிடையே ஏன் இத்தனை வேறுபாடுகள்?

இவ்வளவு குண பேதங்கள்?

எல்லாவற்றிற்கும் காரணம் "மனம்" அதில் வந்து போகும் எண்ணங்கள்.

மனம் என்றால் என்ன?

நாம் உண்ணும் உணவில் கழிவுகள் நீங்கியது போக ,உடல் இயங்க தேவைப்பட்ட சத்துக்கள் பயன்படுத்தியது போக மிகவும் துல்லியமாக வடிகட்டப்பட்ட மிகுதி.

அதுதான் மனமாக  மாறுகிறது.

அதிலிருந்துதான்,"நான்" "எனது" மற்றும் காமம், க்ரோதம் ,லோபம், மோகம் மாச்சரியம்  மதம், என்னும் 6 விதமான எண்ணங்கள் ஏற்பட்டு நம்மை
குழப்பி நாம் "ஆன்மா" என்பதை மறக்கடிக்க  செய்து விடுகின்றன.

எல்லாம் இயற்கையிலிருந்து உண்டாகி அதையே உண்டு வளர்ந்து மீண்டும் அதிலேயே கலந்துபோகும் இந்த உடலையே "நான்" என்று தவறாக எண்ணிக்கொண்டே இருப்பதால் நாம் மீண்டும் இவ்வுலகில் பிறந்து இறந்து கொண்டிருக்கிறோம்.

எப்போது இந்த அறியாமை நம்மை விட்டு போகிறதோ அப்போதுதான் நமக்கு பிறப்புஇறப்பு சங்கிலி அறுந்துபோகும். 

புதன், 13 டிசம்பர், 2017

உன் பார்வை உண்மைதானா?



உன் பார்வை உண்மைதானா?

இந்த கேள்வியை உங்களிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விடை கிடைக்குமா?

கிடைக்காது.

ஏன் தெரியுமா?

ஒரு நோயாளி தனக்கு ஏதோ நோய் வந்திருக்கிறது
என்றுதான் தெரியும்.

அதுவும் மன  நோயா ,உடல் நோயா அல்லது அதையும் தாண்டி ஏதாவது வேறு காரணம் உள்ளதா என்று அவனுக்கு தெரியாது.

அதை கண்டுபிடித்து அவனுக்கு சிகிச்சை அளிக்க நோயின் தன்மையை அறிந்த தகுந்த மருத்துவரால் மட்டுமே முடியும்.

தற்காலத்தில் ஒவ்வொரு விதமான நோய்க்கும் தன்னை தனியாக மருத்துவர்களும் மருத்துவமனைகளும் கணக்கின்றி உள்ளன

முதலில் தனக்கு தானே மருத்துவம் பார்த்து அதில் பலனில்லாமல்
ஏதோ  ஒரு மருத்துவரிடம் செல்கிறான்.

அதற்குள் அவன் நோய் முற்றி போய்விடுகிறது

ஆவான் ஒவ்வொரு மருத்துவராக அணுகி  முடிவில் அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

எல்லாம் பார்வையில்தான் இருக்கிறது.

எல்லாம் நம் மனதில்தான் தொடங்குகிறது(தொடரும்)

இசையும் நானும் (257) தமிழ் திரைப்படம் -பாச மலர் (1961) -song- மயங்குகிறாள் ஒரு மாது…


இசையும் நானும் (257) தமிழ்  திரைப்படம் -பாச மலர் (1961)


-song- மயங்குகிறாள் ஒரு மாது…


MOUTHORGAN VEDIO-257



MOVIE : PAASAMALAR (1961)
MUSIC : VISWANATHAN – RAMAMURTHY
SINGER : P SUSHEELA




மயங்குகிறாள் ஒரு மாது…
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
திருவாய் மொழியாலே……
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான்
என்றால் நெஞ்சம் உருகாதா
திருவாய் மொழியாலே அத்தான் அத்தான்
என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
தோழியர் கதை சொல்லி தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
தோழியர் கதை சொல்லி தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
நாழிகை செல்வதும் நினைவில்லையா
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவாள்
படித்தவள்  தான் அதை மறந்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
காதலை நாணத்தில் மறைத்துவிட்டாள்
அன்பே அன்பே அன்பே அன்பே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவு இல்லாது
மயங்குகிறாள் ஒரு மாது
ஹஹ் ஹஹ் ஹா
ஹஹ் ஹஹ் ஹா
ஹஹா ஹஹா ஹா…….