இந்து மதம் அன்றும் இன்றும் (பகுதி-1)
இந்தியாவில் இருக்கும் மதம்
இந்து மதம் என்று நம் நாட்டை
கொள்ளையடித்து அப்பாவி மக்களின் வாழ்வை
கொன்று குவித்தும் அவர்களின் வாழ்வாதாரங்களை
அழித்த வெள்ளையர்கள் இட்ட பெயர்.
இன்று இந்து மதம் என்றழைக்கப்படும்
இந்த மத சிந்தனைகள் வெளிப்படுவது
நான்கு வேதங்களிலிருந்தே.
அதை பல்லாயிரம் ஆண்டுகளாக அந்தணர்கள்
செவிவழியாக கேட்டு வாய்வழியாக
தகுதியுடைய மாணாக்கர்களுக்கு பயிற்றுவித்து வந்திருக்கிறார்கள்.
அந்த பாரம்பரியம் இன்றும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வேதத்தில் சொல்லப்பட்ட பல கருத்துக்கள்
பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு சென்றடையும் வகையில்
அவைகளை கற்ற பலர் மக்களுக்குஅவரவர்கள் புரியும் வகையில்
நீதி நூல்களாகவும், சாத்திரங்களாகவும் ,
கதைகளாகவும், காவியங்களாகவும், காப்பியங்கலாகவும்
செய்து மக்களிடையே பரப்பினர்.
அவைகள் உலகெங்கிலும் பல்கி பரவின.
பல நேரங்களில் மற்ற நாடுகள் மீது படையெடுத்து
சென்ற நம் நாட்டு மன்னர்களால் பரப்பப்பட்டன
மன்னர்கள் மறைந்து போயினர்.
அவர்கள் காலத்தில் வாழ்ந்து வந்த மக்களும் மறைந்துபோயினர்.
ஆனால் அவர்கள் பரப்பிய இந்து மத கருத்துக்கள்
உலகம் முழுவதும் இன்றும் மக்களுக்கு
நன்மைகளை அளித்துக்கொண்டிருக்கின்றன.
காலபோக்கில் உண்மைகளை மக்கள் தவறாக புரிந்துகொண்டு
வேதங்களுக்கு எதிராக செயல்பட தொடங்கி
அவரவர்களுக்கென்று அவர்களை பாதுகாத்துக்கொள்ள
புதிய கொள்கைகளை வகுத்துக்கொண்டனர்.
அதை மற்றவர்கள் மீது திணிக்க முயற்சித்தபோது
போர்கள் துவங்கின. அன்று மூட்டிவிடப்பட்ட
தீ இன்றும் அணைய வில்லை.
அது தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கிறது.
ராமாயண காலத்தில் ராவணன் செய்த செயலுக்கு
தண்டனையாக அனுமன் மூட்டிய தீ அங்கு இன்னும்
எரிந்து கொண்டிருக்கிறது. வெளியில்
மூட்டப்பட்ட்ட தீ சிறிது அணைந்தாலும்
மக்கள் மனதில் உள்ள அவநம்பிக்கை,
விரோதம் என்ற தீ என்றும் அணைந்ததில்லை
அது நீறு பூத்த நெருப்பு போல் எப்போது வேண்டுமானாலும்
பற்றிக்கொண்டு இன்று மனித குலம் கடும்
இடர்ப்பாடுகளை சந்தித்துக்கொண்டே இருக்கிறது.
ஆனால் வேதங்கள் இது போன்ற கருத்துக்களை கூறவில்லை.
என்பது உண்மை அதை தவறான செயல்களுக்கு
பயன்படுத்துபவர்கள்தான் அவ்வாறு திரித்து கூறி
தங்கள் வயிறை வளர்க்கிறார்கள். (இன்னும் வரும்)
உண்மை... அது சரியில்லை இது சரியில்லை என்கிற நீண்ட விவாதம் வேறு... ஆராயப்பட வேண்டிய விசயங்கள் நிறைய இருக்கும் போது இவை தேவையா ? என்று சில சமயம் நினைப்பதுண்டு...
பதிலளிநீக்கு/// அவ்வாறு திரித்து கூறி
தங்கள் வயிறை வளர்க்கிறார்கள். ///
சொல்பவர்கள் எப்படியோ வயிறை வளர்க்கட்டும்... அதை நம்புபவர்கள் மீது தான் வருத்தம்... நம்புபவர்கள் யாரும் இல்லை என்றால் சொல்பவர்கள் எதையும் சொல்ல மாட்டார்கள்...
இந்த உலகம் இரண்டு
பதிலளிநீக்குசக்திகளால்தான் இயங்குகிறது
ஒன்று நேர்முறை சக்தி
மற்றொன்று எதிர்மறை சக்தி
அதைதான் அசுர சக்திகள் என்றும்
தேவ சக்திகள் என்று உருவகப்படுத்தி
காட்டினார்கள் நம் முன்னோர்கள்.
இரண்டு சக்திகளும் ஒன்றை ஒன்று
தொடாமல் ஒன்றைஒன்று அழித்துகொள்ளாமல்
இயங்கும்போதுதான் உலகம் இயங்குகிறது
நன்மைகளை அடைகிறது .
தீய சக்திகள் மேலோங்கும்போது
இயக்கம் தொய்வு அடைகிறது.
தேவ அல்லது தெய்வ சக்திகள்
இயங்கும்போது நல்ல செயல்கள்,
ஆக்க பூர்வமான செயல்கள் நடை பெறுகின்றன
எப்படி என்றால் எதிர்மறை மின்சாரமும்
நேர்மறை மின்சாரமும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொண்டால் வெடித்து சிதறி அழிவை ஏற்படுகின்றன
அதுவே முறைப்படுத்தப்பட்டு பல்பின் உள்ளே
செலுத்தப்பட்டால் ஒளி கிடைகிறது,
வானொலி பெட்டி மூலம் ஒலி கிடைக்கிறது
மின்விசிறியில், நீரை மேலேற்றும் கருவிகள்
போன்று பல கருவிகள் மூலமாக
கணக்கற்ற பயன்களை அளிக்கின்றன
அதுபோல்தான் எந்த செயலுக்கும்
ஒரு எதிர்விளைவு இருக்கும்
அதுதான் இயற்கையின் மாறா விதி.
அதை எதிர்ப்பாக கருதாமல்
அதை முறைபடுத்த தெரிந்தவனே அறிவாளி .
அதை புரிந்து கொள்ளாமல்
அவர்களை எதிர்ப்பவன் ஏமாளி
சிறப்பான (கருத்துரை) சிந்தனைகள் ஐயா... மிக்க நன்றி...
நீக்குவருகைக்கும்
பதிலளிநீக்குகருத்துக்கும் நன்றி DD
இப்போதுதான் நேரமிருப்பதால்
என் உள்ள கடலில் வலையை
வீசியதில் கிடைத்தவைகளை
வலைதளத்தில் போட்டு வைக்கிறேன்.
காண்பவர்கள் காணட்டும்.
அக்கால நிலைமையை
தெரிந்துகொள்ளட்டும்
கண்டும் காணாதவர்கள் போகட்டும்