வியாழன், 4 அக்டோபர், 2012

நான் கவிஞனுமில்லை நல்ல ரசிகனுமில்லை (பகுதி-3)

நான் கவிஞனுமில்லை 
நல்ல ரசிகனுமில்லை (பகுதி-3)

எனது கிராமத்து அத்தியாயமே சரியில்லை
சரியில்லை என்றால் கல்வியில் 
சரியான அடித்தளமில்லை  
இந்நிலையில்  நகரத்து அத்தியாயம் வேறு 
சேர்ந்துகொண்டது என் வாழ்க்கையில்

இதில் என்ன சோகம் என்றால் 
எனக்கு காலையில் எழுந்திருப்பதே 
மிகவும் சிரமமான காரியம். 

அதனாலேயே தினமும் காலையில் தாமதமாக  எழுந்து
அவசர அவசரமாக காலை கடன்களை முடித்துக்கொண்டு,
 அவசர அவசரமாக காக்கை குளிப்பு குளித்துவிட்டு
பழைய சோறை தின்றுவிட்டு பள்ளிக்கு தாமதமாக செல்வது 
எனக்கு வாடிக்கையாக இருந்தது

வீட்டிலிருந்து பள்ளி குறைந்தது
மூன்று கிலோமீட்டர்கள் இருக்கும். 

சில நாட்களில் ஒரு பீரியட் கூட முடிந்திருக்கும்.
சிலநாட்களில் அறைக்கு வெளியே நின்று 
பாடங்களை கேட்க நேரும். நான் வாராத நேரத்தில்
 நடந்த பாடங்களை பற்றி கேள்வி கேட்கப்பட்டால் 
எனக்கு ஒன்றும் தெரியாது
யாரிடமும் கேடடு தெரிந்துகொள்ள முடியாது
ஏனென்றால் என் கூட படித்த மற்றவர்கள் 
எல்லாம் ஏறக்குறைய என்னை போன்ற பார்டிகள்தான்.

ஆனால் அவைகளில் பலருக்கு சில பின்பலம்  இருக்கும் 
அதனால் ஆசிரியர்கள் அவர்களை 
ஒன்றும் கண்டுக்க மாட்டார்கள்
என்னைபோன்ற அப்பாவிகள்தான் 
எப்போதும் அவர்களுடைய கோபத்திற்கு இலக்கு 
ஏனென்றால் என்னை என்ன செய்தாலும் 
கேட்க நாதியில்லை என்று அவர்களுக்கு தெரியும். 

இந்த காலத்தில் அவ்வாறு நடக்குமா?
ஒரு பைய்யன் மேல் கை வைத்தால் அந்த ஆசிரியன் அத்தோடு தொலைந்தான் 
சில ஊர்களில் பள்ளியையே கொளுத்தி விடுவார்கள் அல்லது பள்ளிக்கூடத்தையே  அடித்து நொறுக்கி விடுவார்கள்

மேலும் ஊடகங்கள் இன்று ஆசிரியர் ஒரு மாணவனை கண்டித்தாலோ அல்லது தண்டித்தாலோ அதை தேசீய பிரச்சினையாக்கி காசு பார்த்துவிடுகின்றன  என்பது அனைவரும் அறிந்ததே   

அதனாலேயே பலநாட்கள் அதற்க்கு வேறு 
தனியாக அடி வாங்கியிருக்கிறேன் 
நானே படித்து புரிந்து கொள்ளுமளவிற்கு அறிவு கிடையாது. 
வீட்டிலும் யாரும் ஐயங்களை தீர்க்க தெரியாது 
அவர்கள் பள்ளி செல்லாதவர்கள். 
மேலும் அவர்களுக்கு அவர்களின் அன்றாட  வேலைகளை 
பார்ப்பதற்கே நேரம் போதவில்லை. 
ஆசிரியர்களிடம் ஐயங்கள் பற்றி கேட்கவும் 
பக்கத்தில் நெருங்க முடியாது. 

ஆனால் இந்த காலத்தில் மாணவர்களுக்கு நல்ல கல்வி  போதிக்கப்படுகிறது,
புரியவில்லை என்றால் ஸ்பெஷல் கிளாஸ் வைக்கிறார்கள், 
டியூஷன் வைக்கிறார்கள், ஊடகங்களிலும் வேறு பாடம் நடத்தப்படுகிறது.
இவ்வளவு சௌகரியங்கள் இருந்தும் அவர்கள் தேர்வில் தோற்றுப்போகிறார்கள் 

அவர்களில் சிலர் பின்னாளில் வாழ்க்கையில்
வெற்றி பெற்றுவிடுகிறார்கள் 
என்பது வேறு விஷயம்  
இன்றோ சிலர் தோற்றால் தற்கொலை 
வேறு செய்துகொள்ளுகிறார்கள் (இன்னும் வாரும்).  

2 கருத்துகள்:

  1. /// புரியவில்லை என்றால் ஸ்பெஷல் கிளாஸ் வைக்கிறார்கள், டியூஷன் வைக்கிறார்கள், ஊடகங்களிலும் வேறு பாடம் நடத்தப்படுகிறது.
    இவ்வளவு சௌகரியங்கள் இருந்தும் அவர்கள் தேர்வில் தோற்றுப்போகிறார்கள். ///

    இதில் எனக்கு நம்பிக்கையே இல்லை... இதுவரை முதலிடமோ... இல்லை முதல் பத்து வந்த மாணவர்களிடம் பேட்டியை பார்த்திருப்பீர்கள்... யாரும் மேலே உள்ளது போல் (ஸ்பெஷல் கிளாஸ், டியூஷன், etc., ) சொன்னதில்லை... உங்கள் பாணியில் சொன்னால் நன்றாக காசு பார்த்து விடுகிறார்கள்...

    தொடர்கிறேன் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும்
    கருத்துக்கும் நன்றி DD

    பதிலளிநீக்கு