புதன், 28 ஜனவரி, 2015

மகாத்மா காந்தியின் நினைவு நாள் (30-1-2015)

மகாத்மா காந்தியின் நினைவு நாள் (30-1-2015)

காந்தியை போல் ஒரு சாந்த
ஸ்வரூபனை இனி காண்பது
எளிதாமோ என்ற பாடலைக் கேட்பவர்
மனம் நெகிழ்ந்து போவார்கள்.


தவறுகளை ஒப்புக்கொண்டு அதை
தன் சுய சரிதையில் பதிவு செய்து
அவைகளை செய்யாமல் இறுதி வரை
முயற்சி செய்த நேர்மை வேறு எவருக்கும்
வராது.

இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில்தான்
இருக்கிறது என்று ஸ்வதேசி தொழில்களை
ஊக்குவித்து அவர்களின் வாழ்வில்ஒளி
ஏற்றிய ஒரு தீபத்தை இன்றைய ஆளும் வர்க்கம்
அழித்துவிட்டது.

குடியிலிருந்து மக்களைக்  காத்த
அந்த குடி மகனின் கனவுகள் தகர்க்கப் பட்டுவிட்டன

இன்று மீண்டும் மக்கள் மேனாட்டு கலாச்சாரத்திற்கும்
அவர்களின் பொருட்களுக்கும் அடிமையாகி
பரிதவிக்கின்றனர்.

பொது வாழ்வில் நேர்மைக்கும், உண்மைக்கும் சமாதி
எழுப்பிவிட்டு காந்தியின் சமாதிக்கு
இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.

இடையில் ஒரு துண்டு
இடுப்பில் ஒரு துண்டு அணிந்து மக்களோடு
மக்களாய் பழகிய அந்த மனித தெய்வம் எங்கே?

பல லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்து ஆடைகளை வடிவமைத்து
ஆயுதம்  தாங்கிய காவலர்களை சுற்றி நிற்க வைத்துக்கொண்டு கையை ஆட்டிவிட்டு டாடா சொல்லும் தற்கால தலைவர்கள் எங்கே?

எளிமையின் சின்னமாம் காந்தி எங்கே?
ஊதாரித்தனமும், வறட்டு ஆடம்பரமும் பளிச்சிட
பவனி வரும் தற்கால அரசியல் தலைவர்கள் எங்கே?


மகாத்மா காந்தியே நீ மீண்டும் பிறவி எடுத்து வா
இந்த நாட்டு மக்களை அடிமைத்தனத்திலிருந்து
மீட்டெடுக்க வா !

செவ்வாய், 27 ஜனவரி, 2015

எதற்கெடுத்தாலும் பழி போடும் கூட்டம்?

எதற்கெடுத்தாலும் பழி போடும் கூட்டம்?

ஆம் எதற்கெடுத்தாலும் அண்டை மாநிலங்கள் மீது
பழி போடும் தமிழ் நாட்டு வெற்று   வேட்டு அரசியல் வாதிகள்.

இன்று இந்த உலகில் ஒரு தனி மனிதனாகட்டும்
அல்லது ஒரு கூட்டத்தின் தலைவனாகட்டும்
தாங்கள் செய்யும் தவறுகளை உணருவதே இல்லை

மாறாக எல்லாவற்றிற்கும் பிறர் மீது
குற்றச்சாட்டுகளை சுமத்துவதே குறியாக
கலையாக, வாடிக்கையாக
கொண்டுள்ளனர்.

இயற்க்கை அளித்துள்ள என்றும் குறைவில்லா
வளங்களை வீணடித்துவிட்டு  அதன் இருப்பிடங்களை
பாழடித்து  ஐயோ ஐயோ என்று காட்டு கூச்சல் போட்டு
முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.

முதலில் நீர்  என்னும்
இறைவனின்கொடையைப்  பார்ப்போம்.

75 விழுக்காடுகளுக்கு மேல் உள்ள கடல் உப்பு நீரிலிருந்து
நாம் உயிர் வாழ அமிர்தமென மாற்றி மழையாய்
தருகின்றான் இறைவன்.

முன்னாளில் அந்நீரை சேமித்து வைத்து மீண்டும்
மழை வரும் வரை பயன்படுத்த கிணறுகளையும், குட்டைஏரிகளும், 
ஏரிகளையும், குளங்களையும், நீர்த்தேக்கங்களையும். ஏற்படுத்தி
முழுமையாக ஏற்பாட்டை செய்து வைத்தனர். நம் முன்னோர்.

பெரும்பகுதியை பயன்படுத்திய பின்னர் சிறிதளவே கடலை சென்றடைந்த்தது.

இப்போது எல்லாவற்றையும் அழித்து ஒழித்துவிட்டனர்.
பெரும்பகுதி நீர் ஆங்காங்கே தேங்கி நோய்க்கிருமிகள் உண்டாகி நோய் பரப்பும் உற்பத்தி தளங்களாக இருப்பதுடன் மிகுதியான நீர் யாருக்கும்
பயன்படாமல் கடலுக்கு சென்று வீணாகிறது.

போதாக்குறைக்கு பூமித்தாய் பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்காக
சேமித்து வைத்திருந்த  நீரூற்றுகளையும் உறிஞ்சி காலி செய்துவிட்டனர்.
இந்த அரக்க கும்பல்கள்

இப்போது குய்யோ முறையோ என்று கூச்சல் போடுகின்றனர்.

அண்டை மாநிலங்களோடு அனுதினமும் சண்டை .அவர்கள் புத்திசாலித்தனமாக தண்ணீரை சேமித்து வைத்துக்கொள்வதால்
நமக்குதண்ணீர் விட தயக்கம் காட்டுகின்றனர்.

தமிழர்களோ அல்லது அவர்களை ஆளும் அரசு வர்க்கமோ மழை காலங்களில் கொட்டோ கொட்டு என்று கொட்டும் தண்ணீரை சேமித்து வைக்க
எந்த நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை.

எடுக்க போவதுமில்லை. அப்படி செய்தால் அவர்கள வெள்ள   நிவாரணம், வறட்சி நிவாரணம், என்று பல வகைகளில் கொள்ளை அடிக்க முடியாது.

இதுபோதாதென்று தமிழ்நாட்டில் ராட்சத பம்புகளை  போட்டு மிச்சம் மீதி உள்ள நிலத்தடி நீரையும் உறிஞ்சி காசாகி கொண்டிருக்கின்றன பன்னாடை நிறுவனங்கள்.

அவர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று இங்கிருக்கும் பல நிறுவனங்கள் பகல் கொள்ளை அடிக்கின்றன

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய விருந்துகளில், விழாக்களில் ,கூட்டங்களில்.பிளாஸ்டிக் பாட்டில்களில் 
பாக்கட்டு களில் அடைத்து விற்கப்படும் நீரில் பாதிக்குமேல் வீணடிக்கப்படுகிறது.

அவைகளை தயாரிக்க ஆகும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள், மின் சக்தி ,அனைத்தும் வீண். 

போதாக்குறைக்கு சுற்று சூழல் பாதிப்பு வேறு. புற்றுநோய் பாதிப்பு வேறு, தண்ணீரை சுத்திகரிக்க அதில் கலக்கப்பட்டுள்ள பலவிதமான நசுகளால், சிறுநீரக பாதிப்பு ,ஈரல் பாதிப்பு வேறு என மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கின்றனர்.

முதலில் விருந்துகளில் ஒவ்வொரு சாப்பாட்டு இலைக்கும் பாட்டிலில் குடிநீர் வழங்கும் பழக்கம் நிறுத்தப்பட்டு குவளைகளில் வழங்கினாலே பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக்குவது மிச்சப்படும். 

அடுத்து மழை நீரை சேமிக்க தற்போது எஞ்சியுள்ள நீர்நிலைகளை ஆழப்படுத்தி, பாதுகாப்பதுடன், புதிய நீர் தேக்கங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படாதவரை எந்த முன்னேற்றமும் இந்த முக்கிய பிரச்சினை தீரப்போவதில்லை

அவர்களின் துயரங்களுக்கு முடிவும் இல்லை.
ஞாயிறு, 25 ஜனவரி, 2015

குடியரசு தினம்(66)

குடியரசு தினம்(66)

குடியரசு தினம்(66)

இந்தியாவின் குடியரசு அமைக்கப்பட்டு
66 ஆண்டுகள் கடந்துவிட்டதுமக்கள் தங்களை ஆள்பவர்களை
அவர்களே தேர்ந்தெடுத்துக்கொண்டு
நல்லதோர் வாழ்வை அமைத்துக்கொள்வதே
இதன் உண்மையான நோக்கம்.

ஆனால் நடந்தது என்ன?


1).மக்கள் குடிக்கு அடிமையாகி நாசமாய்ப்
போய்க்கொண்டிருக்கின்றனர்.

2)ஆண்டுதோறும் உள்நாட்டிலேயே பல லட்சக்கணக்கான
மக்கள் அகதிகளாய் எந்த உரிமையும், பாதுகாப்பின்றி.
சாலை ஓரங்களில் அல்லபடுகின்றனர். அவர்களின்
எதிர்கால வாழ்வு கேள்விக்குரியதே

 3)பல லட்சம் கோடிகளுக்கு மேல் ஆண்டு தோறும்
அரசு பணத்தை செலவு செய்தும் வறுமையில் வாடும்
மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.

4) செலவழித்ததொகையில் பெரும்பகுதி அரசியல்வாதிகளும்,
லஞ்ச லாவண்ய பேர்வழிகளும் சுருட்டிவிட்டனர்.

5)ஆளும் வர்கத்தினருக்கும், அரசியல்வாதிகளுக்கும் பல கோடி ரூபாய் செலவில் ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு

ஆனால் அடித்தட்டு மக்களுக்கும்,சட்டத்தை மதித்து  நடக்கும் குடி மக்களுக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை.

6)நாட்டு மக்களுக்கு எந்த சுதந்திரமும் கிடையாது..வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து  தொழில் செய்து நம் நாட்டு வளங்களை சுரண்டி  கொழுக்க
மட்டும் வசதி மற்றும் பாதுகாப்பு.

7)   ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டுமே வந்து போகும் வெளி நாட்டு தலைவர்களுக்கு பல் கோடி ரூபாய் செலவில் பாதுகாப்பு

இங்கிருக்கும் குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க மறுக்கும்
இந்திய அரசின் . போக்கு

8)இருக்க  இடமில்லை, வீடில்லை, வேளா வேலைக்கு உணவில்லை ,வேலை  ,வாய்ப்பு இல்லை, சுகாதார ,மருத்துவ வசதிகள் இல்லை நிதி வசதி இல்லை, பாதுகாப்பான எதிர்காலம்  இல்லை..இவைகளை அளிக்க எந்த அரசுக்கும்   நாதியில்லை.

9)கொள்ளை அடிப்பவர்களுக்கு ,எல்லா பாதுகாப்பு,வரி சலுகைகள், அரசு உதவிகள் உண்டு

ஆனால்  உழைப்பவர்களையும் வறியவர்களையும் வாழ்வில் முன்னேறாமல் அழிக்க ,முடக்கிபோட பலமுனை  வரிகள், கட்டுப்பாடுகள்.இதுதான் குடியாட்சியில் நம் நாட்டு மக்கள் .  கண்ட பலன்

10)மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினைகளுக்கும்  தீர்வு காணாத கையாலாகாத அரசியல்வாதிகளைக் கொண்ட அரசுகள் ,அவர்களையே நம்பி மோசம் போகும் அப்பாவி மக்கள்.

11)மக்களின்  எதிர்பார்ப்புகளை  நிறைவேற்றாது எப்போதும் அரசு  காவல் துறையை ஏவி அவர்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கம்

12)  குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்  பாதுகாப்பில்லை.

இதுதான் நாம் 66 ஆண்டு  குடியாட்சியில் கண்ட பலன்.

முன்னேற்றம் இல்லை என்று   ஒட்டு மொத்தமாக  கூறிவிட முடியாது   பயிரைவிட களைகளே அதிகம் முளைத்துள்ளன . அதை அதை அகற்றாவிடில்  எந்த முன்னேற்றமும் உரிய பயனை  தரப்போவதில்லை.

லஞ்சமும்,  நிர்வாக திறமையின்மையும் ,நிர்வாக  சீர்கேடுகளும்,ஒழிக்கப்படாவிடில் பெற்ற
சுதந்திரம் நாட்டு மக்களுக்கு  பயன்தரப் போவதில்லை.

செவ்வாய், 20 ஜனவரி, 2015

ஆனந்தம் அடையும் வழி

ஆனந்தம் அடையும் வழி

 ஆனந்தம் அடையும் வழி 

காடு மலை  எல்லாம்
இரவு பகல் பாராமல்
கணக்கற்ற முறை பறந்து திரிந்து

 

மலர்ந்த மலரின் உள்ளே புகுந்து
சுரக்கும் தேனை உறிஞ்சி
கூட்டில் கட்டி கட்டியாய் தேனடை
சேர்க்கும் தேனீ.

ஐயோ பாவம் !ஆனால் அதை
சுவைத்து இன்புறுமோ ?
யாரோ ஒருவன் கூட்டிற்கு தீ
வைத்து அவைகளை விரட்டியும்
கொன்றும் தேன் முழுவதையும்
கொள்ளை அடித்து சென்றிடுவான்.

மனிதர்களே ,விழிக்கும் நேரமெல்லாம்
உழைத்து காசை சேர்க்க பாடுபடுவார்
பல மனிதர்கள் இவ்வுலகில்
சிலரோ உறக்கத்தை விட்டொழித்து
பணத்தை சேர்ப்பார் .

பொய்யான இன்பத்தை அடைந்திடவே
நம்மோடு என்றும் வராத தங்கத்தையும்
வீடு முழுவதும் நிறைக்கும் பொருட்களையும்

 

வீட்டில் வாங்கி நிரப்பினால் இன்பம்
தருவதாக ஆசை காட்டும்
பேய்க் குணம் கொண்ட காசு பிசாசை
நம்பியவர் எவரேனும் நிலையான
இன்பம் அடைந்தனரோ?

காசைக் கொடுத்து கல்வி கற்று
அந்த கல்வியைக் கொண்டு காசு தேட
உறக்கத்தையும், உடல் நலத்தையும்
விட்டொழித்து எப்போதும் அமைதியில்லா
மனதோடு ,பிறர்முன் நடித்து போலியான
வாழ்க்கை வாழ்ந்து பல கோடிகளை
பன்னாட்டு வங்கிகளில் போட்டு வைத்து
பாஸ் புக்கை பார்த்து பார்த்து இன்பம்
அடைவார் பலபேர் இவ்வுலகில்.

சேர்த்த காசு போடும் வட்டிகளைக்
கண்டு மட்டும் இன்புறாமல் ,பசித்தோருக்கு
உணவிட்டு, வறியவருக்கு வாழ்வளித்து
துன்புற்றோர்க்கு உதவி செய்து இன்புற
பழகாதோர்க்கு இவ்வுலகிலும்
அமைதியில்லை மறுவுலகில் அமைதியில்லை.

ஐயப்பா என்றாலும்,
மலையப்பா என்றாலும்
வேலப்பா என்றாலும்,
சிவனப்பா  என்றாலும்
ஈன்றெடுத்த பெற்றோரை
ஈவிரக்கமில்லாமல் முச்சந்தியில் விடுவோரும்
அவர்களின் தியாகத்தை மதியாது முதியோர்
இல்லத்தில் தள்ளுபவர்களும் பெறமாட்டார்
இறைஅருளை என்றென்றும்.

வரும்போது நாம் முற்பிறவியில் சேர்த்த
சொத்துக்களை கொண்டு வர அனுமதியில்லை
இப்பிறவியிலும் அதே சட்டம்தான் என்று
உணராத அறிவிலிகள் தான் மீண்டும்
சொத்துக்களைச் சேர்ப்பார் சொகுசான
வாழ்வை நாடிடுவார். எல்லாவற்றையும்
 

விட்டுவிட்டு மாண்டு போவார்

 Image result for trailanga swami photo

இறைவனை உணர்ந்த பெரியோர்கள்  சொற்படி நடந்தால்
வாழும் இவ்வுலகம் சொர்க்கமாகும், இந்த உடலை
விட்டு நீங்கினாலும் சொர்க்கத்தில் இடம் . கிடைக்கும்

சுயநலம்  விட்டொழித்து ,பிறருக்கு இயன்ற அளவில்
நன்மை செய்து ,அனைத்து  உயிர்களையும்  அந்த
ஆண்டவனின் வடிவென்று உள்ளத்தில் கொண்டு
அவன் நாமத்தை எப்போதும் உச்சரித்து அன்போடு
நடந்து கொண்டால் .ஆனந்தம் நிறைந்திடும் வாழ்விலே.

படங்கள்- நன்றி-கூகுள்

செவ்வாய், 13 ஜனவரி, 2015

இது தாண்டா தமிழ்நாடு

இது தாண்டா தமிழ்நாடு 

போகி திருநாளை புகையில்லா
தினமாக கொண்டாடுங்கள் என்று
கூப்பாடு போடுபவர்கள் போடட்டும்

ஊர்திகளில் ஏறிக்கொண்டு வீதிகள் தோறும்
நச்சுப் புகையை கக்கும் பிளாஸ்டிக் மற்றும்
ரப்பர்  பொருட்களை எரித்து நாசமாய்ப்
போகாதீர் என்று கரடியாய் (மனிதர்களின்
மொழி தமிழ் நாட்டு மக்களுக்கு (புரியாது )
சமூக  ஆர்வலர்களும் ,அரசு  இயந்திரங்களும்
கத்தியும்  பயனுமில்லை

அதிகாலையில்  வீட்டின் கதவைத்
திறந்தால் மூச்சு திணறியது.

நல்லதோர் புத்துணர்ச்சி தரும்
குளிர்ந்த காற்றை சுவாசிக்கலாம் என்ற ஆசை

தெருவெங்கும் காணு மிடமெல்லாம்   குவிந்துள்ள கருகிப்போன
டயர்களும்,அதில் எலும்புகூடுகளாய் தோற்றமளிக்கும்
கருகிய கம்பிகளும் எரியாமல் இன்னும்
புகைந்து கொண்டிருக்கும் பிளாஸ்டிக்
எச்சங்களும்,மிச்சங்களும்.

அதனால்தான் அன்றே ஒரு கவிஞன் பாடி வைத்தான்
"திருந்தாத  ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்" என்று

நோய்க்கிடம் கொடேல் என்றாள்
அவ்வை பாட்டி

ஆனால் நம் நாட்டு மக்களோ
நோய்க்கு வழி வகுக்கும்
கிருமிகளுக்கும், கொசுக்களுக்கும்
இடம் கொடுப்பது மட்டுமல்லாமல்
தங்கள் உடலையே அவைகளுக்கு தானமாக
வழங்கி பெருமை சேர்க்கின்றார் .
என்னே அவர் பெருந்தன்மை!

அதிகாலையில் கோயிலுக்கு சென்று
ஆண்டவனை வழிபடுகின்றார்.
தங்கள் வாழ்வு நன்றாக இருக்கவேண்டுமென்று.

கோயிலின் உள்ளே சிலைக்கு பன்னீரால் அபிஷேகம்
கோயிலுக்கு வெளியே சுற்றுசுவருக்கு
காரி துப்பும்எச்சிலாலும்
சிறு நீராலும்  நீராட்டு.விழா நடத்துகின்றார்.

கோயிலில் வருமானத்தில் குறியாய் இருக்கும்
நிர்வாகங்களுக்கு மக்களின் மல உபாதைகளை
தீர்த்து வைக்க ஒரு கழிப்பிடம் ஏற்படுத்தி அதை பராமரிக்க
மனம் கிடையாது.

புற்று நோயிலிருந்து நம்மை காக்கும்
தக்காளி விலை சரிந்தாலும் அதை வாங்கி
உணவில் சேர்க்கார்.

புற்று நோய் வந்தபின் கையில் இருக்கும் காசை
ஒழித்து நடைபிணம் போல் வாழ்வார்.

டாஸ்மாக் சாராயம் விலை விண்  முட்டும்
உயர்ந்தாலும் கவலைப்படாது
வயிறு முட்டக் குடித்துவிட்டு
வானத்தை நோக்கியபடியே
நடு வீதியில் விழுந்து
கிடப்பதையே வாழ்வில்
பெருமையாக கருதுவார்.

விலை மலிவாக கிடைக்கும் இனிக்கும்
கரும்புச்சாரை சுவைத்து  இன்புறார்.

அதன் சக்கையிலிருந்து கிடைக்கும் கழிவுநீரை
கூடுதல் விலை கொடுத்து
வாங்கி குடித்து மதி மயங்கி மயக்கத்தில்
கிடப்பதே ஆனந்தம் என்பார்.

கள்ளை ஒழித்த காந்திக்கு சிலை வைப்பார்
அவர் நினைவு நாளில் மலரிட்டு வணங்குவதுபோல்
பாசாங்கு செய்வார். ரகுபதி ராகவ ராஜாராம் என்று
பாட்டுப்பாடுவார்.

அடுத்த கணமே சாராயப் பாட்டிலை கையில்
ஏந்தி பாட்டிலு, பீரு, என்று தமிழ் திரைப்பட பாடலை
முணுமுணுத்துக்கொண்டே வீர நடை போடுவார்.

அன்று மட்டும் அரசு மதுவுக்கு விடுமுறை விடும்.
ஆனால் குடி பிரியர்களோ முதல் நாளே சரக்கை வாங்கி வைத்து காந்தி ஜெயந்தி அன்று குடித்து கும்மாள மிடுவார்.

சட்டத்தை மதிப்பதுமில்லை 
சான்றோர் வார்த்தைகளை செவி மடுப்பதுமில்லை 

ஒருவரை ஒருவர் வசை பாடி அழிந்துபோக சளைப்பதுமில்லை 
அற்ப காரணங்களுக்காக  அனுதினமும் ஒரு போராட்டம் 
ஒழுக்கமுமில்லை ஒழுங்குமில்லை.

வாழ்வில் லஞ்சமும் , வஞ்சமும் அதனால் எங்கு நோக்கினும்
பஞ்சமும் தலைவிரித்தாடுது நம் நாட்டில்

ஏழைப் பங்காளர்கள்  என்று சொல்பவர்கள் வாழுவது அடுக்கு மாடி கட்டிடங்கள் ,அனைத்து  வசதிகளுடன்.

அவர்களை வாழ வைக்கும் ஏழைகளோ எப்போதும் இருப்பது, பாம்புகளும் பூச்சிகளும்  வசிக்கும் சாலைகளிலும், பாழும் கட்டிடங்களிலும் தாம்

உழைக்கும் அம்மக்கள் என்றென்றும் அவர்களிடம் கையேந்திதான் 
வாழ்க்கை நடத்தவேண்டும், அவர்களுக்கு அடிமை சேவகம் செய்ய வேண்டும் என்பதே அவர்கள் வகுத்த திட்டம். 

அவர்களின் தந்திரம் புரியாத அப்பாவி மக்கள் கூட்டம் நாள்தோறும் பெருகுதடா நம் நாட்டில். 

மனிதர்களை நம்பியும் பயனில்லை
மகேசனையும் நம்பி  பயனில்லை இந்நாட்டில்
யாரை நம்புவது?

இனி தன் கையே தனக்குதவி என்று தன்னை நம்புவதுதான் 
தரணியில் உள்ளோர்க்கு தங்கள் கண் முன்னே 
உள்ள தகைமையான வழி.


சனி, 10 ஜனவரி, 2015

பெண்ணை இழிவு செய்யும் சமூகம் பேய்கள் வாழும் பாழுங்கிணறு

பெண்ணை இழிவு செய்யும் 

சமூகம் பேய்கள் வாழும் பாழுங்கிணறு 

 

பெண்ணை இழிவு செய்யும் சமூகம் 

பேய்கள் வாழும் பாழுங்கிணறு

ஆம்.அதுதான் உண்மை 

குழந்தையாய் இருந்தபோது 

துன்பம் ஏற்பட்டபோதும், 

பசியால் துவண்டபோதும் 

பல்வேறு உணர்வுகளை வெளிக்காட்டும் 

வழிமுறை அறியாத நிலையில்

அழுது கண்ணீர் சிந்திய போது 

குழந்தை இந்த குறிப்பிட்ட 

காரணத்திர்க்காகத்தான் 

அழுகிறது என்பதை கண்டறிந்து 

கண்ணீரைத் துடைத்து 

அன்பினால் அணைத்து துன்பம் 

 போக்கிய தாய் என்னும் 

பெண்ணினத்தின் பேரன்பையும், பாசத்தையும்,

 பரிவையும் மறந்து நன்றி கெட்டு 

நயவஞ்சகமாக அவர்களை   ஏமாற்றி 

அவர்களின் வாழ்வை குலைக்கும் 

பாதகச் செயல்களில் 

ஈடுபடும் மனிதர்கள் சமூகத்தில் 

வாழ தகுதியற்றவர்கள். 

 

அவர்களுக்கு தண்டனை அளித்தாலும் 

திருந்தாத நச்சுப்பாம்புகள். 

அவர்களுக்காக பரிந்து பேசும் 

சமூக ஆர்வலர்கள் அவர்களில் 

ஒருவராகத்தான் இருக்க முடியும். 


காமம் என்பது இயல்பாக ஏற்படும் ஒன்று. 

ஆனால் அந்த எண்ணத்தை   பிஞ்சிலேயே விதைத்து 

மக்களின்  மனதை களங்கப்படுத்தி சமூகத்தில் 

உலவவிடும்  படைப்பாளிகளும், 

அதைப் படித்து உள்ளத்தில் ரசித்து 

புறத்தே நல்லவன் போல் நடித்து 

வாய்ப்பு கிடைக்கும்போது பெண்ணினத்தை 

கடித்து குதறி இன்பம் காணும்பசும்தோல் போர்த்த 

புலிகளை இனம் கண்டுகொள்வது மிகக் கடினம் 

அந்த படைப்பாளிகளும் அவர்களுக்கு 

 துணை போகும், திரைப்பட வியாபாரிகளும்

 அதை ஆதரிக்கும் மக்களுமே 

முதலில் தண்டிக்கப்படவேண்டியவர்கள். 

ஆனால் இந்த ஊடகங்கள் பாதிக்கப்பட்டவரின் 

வாழ்வை சிக்கலாகி அவர்களை அழிவின் 

விளிம்பிற்கு அல்லவோ கொண்டு சென்று கொண்டிருக்கிறது.

குற்றங்களை தடுக்கவும் இயலவில்லை 

குற்றவாளிகளை தண்டிக்கவும் இயலவில்லை 

என்ன தீர்வு ?

மக்களில் மனங்களில் பெண்ணினத்தைப்  பற்றிய 

உயர்ந்த எண்ணங்கள் ஆழ விதைக்கப் ப்படவேண்டும். 

தவறான எண்ணங்கள். கோட்பாடுகள், மீண்டும் 

முளைக்க இயலாத ஆழ புதைக்கப்படவேண்டும். 

யார் செய்வது?

வியாழன், 8 ஜனவரி, 2015

சிந்தனை சிதறல்கள் 500(2)

சிந்தனை சிதறல்கள்  500(2)


நல்லதோர் சிந்தனைகளை நாடும்
மனம் கொண்டவர்களால்தான்
நாடும் வீடும் நலம் பெரும் 

 
அதற்க்கு நாம் அனைவரும் 

முயற்சி செய்வோம் அதன் வெளிப்பாடே சிந்தனை சிதறல்கள் 

என்னும் சிறு ஆலமரம் .


அது 500 விழுதுகளை விட்டிருக்கிறது 
இன்னும் விடும் .மனித குலத்தை 
கீழே விழுந்துவிடாமல் காக்கும்
 


பிறரை நிந்தனை செய்பவன் தானும் கெட்டு
இந்த உலகிற்கும் கேடு விளைவிக்கிறான். 

 
இந்த உலகில் பாசமும்
வேஷமும் பெருகிவிட்டன.


நேசமும் அன்பும்
அருகிக் கொண்டே வருகின்றன. 

 
அனைவருக்குள்ளும் இருக்கும் இறைவனை
நாம் அனைவரும் அனுதினமும் பிரார்த்திப்போம்


அசுத்தம் அடைந்த மனங்கள்
சுத்தமாக அவன் அருள் புரியட்டும். .


இந்த உலகில் அகந்தை கொண்டோரின்
ஆதிக்கம் பெருகிக் கொண்டே போகிறது

 

சகிப்பு தன்மையற்ற அரக்கர் கூட்டம்
அப்பாவிகளையும், குழந்தைகளையும்,
பெண்களையும் சகட்டு மேனிக்கு
கொன்று குவிப்பதில்  இன்பம் காணுகின்றன.

 

இருந்தாலும் இந்த நிகழ்வுகளில்
இறைவன் தலையிடும் நேரம் வரவில்லை.

 

ஏனென்றால். இன்னும் உலகின் பல பகுதிகளில்
மன சாந்தியைத் தரும் ஆன்மீகத்தை நாடி
கோடிகணக்கான மக்கள் சென்றுகொண்டிருக்கிரார்
கள்.

உண்மையான பக்தர்களை
இறைவன் எப்போதும் எந்நிலையிலும்
கைவிடமாட்டான். என்பது சத்தியம். 


பலர்  துன்பம் நீங்க 
இறைவனை நாடுகிறார்கள். 

ஒரு சிலரோ பிறருக்கு துன்பம் விளைவிக்க 
இறைவனை வேண்டுகிறார்கள். 

நமக்கு துன்பம்  வருகிறது என்றால்
அது நம்முடைய நம்பிக்கையின் குறைபாடே அன்றி
இறைவனின் அசட்டையன்று என்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

சிந்தனை சிதறல்கள் (500)

சிந்தனை சிதறல்கள் (500)

சிந்தனை சிதறல்கள் என்ற இந்த வலைபூ
ஏப்ரல் 2012இல்  தொடங்கினேன்.

3 ஆண்டுகள்  முடிவடைவதற்குள்
500 பூக்கள் மலர்ந்துமணம் பரப்பி
விட்டு சென்றுவிட்டன.

எதற்காக இந்த வலைப்பூவை
தொடங்கினேன்?

தமிழுக்காக, தமிழ்மொழியின் சிறப்பை
பிறருக்கு எடுத்துரைப்பதற்கும்
அதே நேரத்தில் நானும் அதன் மாண்பை
சுவைத்து மகிழ்வதற்க்காகவும்
தற்கால தமிழர்களை
தாங்கள் செயல்படும் தன்மையை ஆராய்வதற்கும்
மற்றும் பல செய்திகள் வாழ்க்கையை
வெற்றிகரமாக நடத்த உதவும் பல
அறிய தகவல்களையும் அளித்துள்ளேன் .

என்னுடைய பதிவின் முதல் தலைப்பு.

"தமிழே நீ என்றும் இருப்பாய்" என்பதுதான்

தமிழும் இருக்கிறது. நாமும் இருக்கின்றோம்.
நாம் இந்த மண்ணை விட்டுப் போனாலும்
தமிழ் இருக்கும்.

இந்த வலைபூவிற்கு வரும் வாசகர்கள் மிகவும் குறைவுதான்.
ஆனால்  வருகை தந்தவர்கள் அனைவரும் நல்முத்துக்கள்
தங்களுக்கு இருக்கும் பல பணிகளிடையே தவறாமல் அவ்வப்போது வந்து
தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டு என்னை உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி.

இன்று தமிழ் உலகம் முழுவதும் தன் பெருமையையும் மாண்பையும்
பரப்பி மலர்ந்து மணம்  வீசிக்கொண்டிருக்கிறது.அது போதும் எனக்கு .என் பணியை தொடர

செவ்வாய், 6 ஜனவரி, 2015

தமிழன் என்றொரு ஒரு இனம் உண்டு தனியே அவனுக்கொரு குணம் உண்டு

தமிழன் என்றொரு ஒரு இனம் உண்டு 
தனியே அவனுக்கொரு குணம் உண்டு 

நம் இந்திய திருநாட்டில் தமிழ்நாடு
என்று மாநிலம் உள்ளது.

அங்குள்ள மக்கள் வீரம் செறிந்த
மறவர் கூட்டம்.

இந்தி திணிப்பை, வடமொழி திணிப்பை எதிர்த்து
போராடி பொது சொத்துக்களை அழிப்பான்.
ஆனால் தன் தாய்மொழியான  தமிழ்மொழியை
முறையாக ,பிழையற கற்க மாட்டான் பேச மாட்டான்.
தமிழ் மொழி பேசுபவர்களை இழிவாக பார்ப்பான்.
அந்நிய மொழியான ஆங்கிலத்திற்கு இரத்தின
கம்பளம் விரிப்பான்.

பிறர் தன்னை மந்திரம் சொல்லி
ஏமாற்றினாலும் புரிந்துகொள்ளதெரியாது
தந்திரம் செய்து ஏமாற்றினாலும் புரிந்து கொள்ள
இயலாத உணர்சிக் கோளம் தமிழன்அறிவு செறிந்தகூட்டம்
ஆனால் அந்த    அறிவை
பிறருக்கு அடிமையாக்கும் கூட்டம்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தங்களை
ஆண்டுகொண்டிருந்த அரசர்கள் போடும்
சண்டைகளுக்காக தங்களை
பலியிட்டுக்கொண்டிருந்தார்கள்.

பிறகு காலம் மாறியது
காட்சிகளும் மாறியது.

அதற்க்கு பிறகு களமும்  மாறியது,
நம் நாட்டை அடிமைப்படுதியவ்ர்களுக்கும்,
அவர்களின் அடிமைகளுக்கும்,
அற்ப பலன்களுக்காக
சண்டை போட்டு மடிந்தார்கள்.

பிறகு ஏதோ  ஒரு சிலர் போராடி அந்நியர்களிடம் இருந்து
அரசியல் சுதந்திரம் வாங்கித் தந்ததை அரசியல் கட்சிகள்
தந்திரமாகபறித்துக் கொண்டுவிட்டன,

 அதை உணராமல் இன்னும் அதே கூட்டம்
அந்த சுயநல கும்பல்களுக்காக
தங்களின் உடல் பொருள், ஆவி அனைத்தையும்
அடமானம் வைத்தும், அதை மீட்கமுடியாமலும் அழிந்து போய்க்கொண்டிருக்கின்றன

அந்த கும்பல்கள் வெளியே பல பிரிவுகளாக  பிரிந்து,
ஆனால் அடிப்படையில் தமிழ்  நாட்டு மக்களை குழப்புவதிலும், அவர்களை சுரண்டுவதிலும், மூளைச் சலவை செய்வதிலும், அவர்களை அடக்க காவல்  துறையைப் பயன்படுத்தி அவர்களின் உரிமைகளை முடக்குவதிலும், அவ்வப்போது அவர்களுக்கு அரசின் வரிப்பணத்திலும்  அவர்களிடமிருந்தே வசூலிக்கப்பட்ட நன்கொடைகளிலும் இருந்தே பிச்சைக் காசுகளை அள்ளி வீசிவிட்டும், அவர்களை எப்போதும் சினிமா மற்றும், குடி பழக்கத்திற்கு ஆளாக்கி அவர்களை எப்போதும் சிந்திக்க முடியாத நிலையில் வைத்தே ஏமாற்றிக்கொண்டு வருகின்றன.

சென்ற தலைமுறையில் இல்லாத குடிபழக்கத்திற்கு  மக்களை ஆளாக்கி அவர்களின் வாழ்வை சீரழிக்கும் தமிழ் நாட்டை ஆளும் வர்க்கம் 20000 கோடிகளுக்கு மேல் வருவாய் ஈட்டுவதாக பெருமை பட்டுக் கொள்ளுகிறது.

(மற்றமாநிலங்களும் இதே நிலைமைதான். அங்கு இதை விட மோசமாக உள்ளதால்தான் வெளி மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கில் தமிழ்நாட்டிற்கு குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்ய வருகிறார்கள்.)

இன்று பல லட்சம்  மக்கள் குடிக்கு அடிமையாகி  தங்கள், உடல் நலத்தை இழந்து, உள்ளம் கெட்டு , குடும்பத்தை தொலைத்து ,நாட்டில் சுற்றுச்சூழலை கெடுத்து, சட்டம் ஒழுங்கு  பிரச்சினைக்கு காரணமாக இருக்கிறார்கள்

நெஞ்சில் உரம் இன்றி, நேர்மை திறன் இன்றி ,பிறரை வஞ்சனை செய்து (தமிழ்நாட்டில் நடக்கும்  மோசடிகளால் மக்கள் இழக்கும் தொகை பல லட்சம் கோடிகளைத்  தாண்டும்.ஒவ்வொரு நாளும் புதிய வகையில் திட்ட்டங்களை தீட்டும் மோசடி மன்னர்கள் நிறைந்த நாடு தமிழகம் என்றால் மிகையாது)

சிந்திக்கும் திறனின்றி யார் எதை சொன்னாலும் ஏன் என்று ஆராயாமல் அப்படியே ஆமாம் சாமி போட்டுக்கொண்டு வாழ்வை தொலைக்கும் கூட்டம் பெருகி கொண்டே போகிறது

நம்நாடு சுதந்திர நாடு என்றாலும் மக்கள் அடிமைகளாக தான் இருக்கிறார்கள்.
அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் அனைத்தும் அராஜகம்  செய்பவர்களுக்கும்,ஆளும் வர்கத்திற்கும், பணக்காரர்களுக்கும் மட்டுமே
சாமானியனுக்கு கிடையாது. வீட்டிற்கு வேண்டிய சாமான்களை தேர்ந்தெடுத்து வாங்கும் அடிப்படை உரிமைகூட கிடையாது. ஊடகங்கள் சொல்லும் பொய்யை நம்பி அவர்கள் திணிப்பதைத்தான் அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பொருட்களை விளவிப்பவனுக்கு பொருளின் விலை நிர்ணயம் செய்யும் உரிமை கிடையாது .அதை தரகன்தான் முடிவு செய்வான். உதாரணத்திற்கு ஒரு கிலோ ஆரஞ்சு விலை 20 ரூபாய் விற்றால்தான் கட்டுபடியாகும் என்றால் அவனுக்குகிடைக்கும் விலை 10 ரூபாய் மட்டுமே .ஆனால் மக்களின் கையில் அந்த ஆரஞ்சு 70 ரூபாய் விற்கப்படுகிறது.

இதுபோன்ற அநியாங்களை தட்டிக் கேட்க ஆளில்லை.

இதற்க்கெல்லாம் விடிவு காலம் உண்டா என்ற கேள்வி சிலர் மனதில் எழும் ஆனால் எழுந்த அடுத்த  கணம் சோப்புக் குமிழ் போல் உடைந்துதான் போகும் 'விடிவு காலம் இல்லை என்றே தோன்றுகிறது.ஞாயிறு, 4 ஜனவரி, 2015

கரங்கள் இருந்தும்?

 கரங்கள் இருந்தும்?

இந்த உலகில் மனிதர்களுக்கு இரண்டு
கரங்களை கொடையாக அளித்திருக்கிறான்.

அதைக் கொண்டு சிலர் உழைத்து
பிழைக்கிறார்கள்

சிலர் உழைப்பவர்களிடமிருந்து பிச்சையெடுத்து
பிழைக்க தங்கள்  கைகளை பயன்படுத்துகிறார்கள்.

சில ஈனப் பிறவிகள்  கைகளைப் 
பிறர் சொத்துக்களை கொள்ளை அடிக்கவும் , வழிப்பறி செய்யவும்
பயன்படுத்தி வயிற்றை வளர்க்கிறார்கள்

சிலர் எதுவும் செய்யாமல் பிறரை குறை கூறியே
எல்லாவற்றிற்கும் பிறரை எதிர்பார்த்து சோம்பித் திரிகிறார்கள்.

ஆனால் ஒரு சிறுவனுக்கு  இரண்டு கைகளும் இல்லை.அந்த குறைபாடு அவன் உள்ளத்தில் எந்த தாழ்வு மனப்பான்மையையும்
ஏற்படுத்தவில்லைமாறாக கடுமையாக முயற்சி செய்து
கைகளால் மட்டுமே வாசிக்கக்கூடிய இசைக்கருவியை தன்
கால் விரல்களின் துணை கொண்டு இசைப்பதை பாருங்கள்.

இதைப்பார்த்தாவது எல்லாம் இருந்தும் எல்லாவற்றிலும் குறை காணும் அழுமூஞ்சிகள்  திருந்தட்டும்

இணைப்பு  கீழே.


https://www.facebook.com/video.php?v=789747644418009&set=vb.363469940379117&type=2&theater

சனி, 3 ஜனவரி, 2015

தொலைகாட்சி பேட்டியில் தொலைந்து போன உள்ளங்களே !

தொலைகாட்சி பேட்டியில் 
தொலைந்து போன  உள்ளங்களே !

எல்லையில்லாமல் தொல்லை தரும்
செய்திகளையே ஒவ்வொரு கணமும்
மீண்டும் மீண்டும் காட்டி காண்பவர்
சிந்தையை மழுங்கடிக்கும்
தொலை காட்சிப் பெட்டிக்குள்
தொலைந்து போன உள்ளங்களே
சற்றே சிந்திப்பீர்.

எப்போது பார்த்தாலும் பதட்டம் என்றும்
பரபரப்பு என்றும்  மனதில் பதற்றத்தை
தோற்றுவிக்கும் அடுத்தடுத்து காட்டி
காண்பவர்கள் உள்ளத்தில் பீதியை
உண்டாக்கும் காட்சிகளை ஆண்டாண்டு
காலமாக காண்பதால் யாது பயன்?

பொய்யான செய்திகளையும், புரட்டர்களின்
பேட்டிகளையும்  புலன்களை மயக்கும்
காமக் களியாட்டங்களையும்  வெற்று
வாதங்களையுமே கேட்டு கேட்டு
பார்த்து பார்த்து என்ன பயன் கண்டீர்?

தன்னுள் இருக்கும் இறைவனை அறியாது
புத்தகத்தை படித்து புது புது அர்த்தங்களை
உண்மைக்கு மாறாக திரித்துக் கூறும்
புரட்டர்களின் பேச்சை எவ்வளவு காலம்
கேட்டுக் குழம்புவீர்?

வாழ்வில் சோதனைகளும் வேதனைகளும்
வருவது இயற்கை .இரண்டையும் அறிவின் துணைகொண்டு
அகற்றிக்கொள்வதே ஆன்றோர் காட்டிய வழி.

அனைத்தையும் ஆண்டவனின் பரிசென்று
ஏற்றுக்கொண்டு அவன் பாதங்களை நம்பி
அவனோடு கலந்து பிறப்பு இறப்பு சுழலில் இருந்து
விடுபடுவது ஆன்மீக பெரியோர்கள் காட்டிய வழி