செவ்வாய், 23 அக்டோபர், 2012

வாராஹி


வாராஹி



















வாராஹி வாராஹி
வாராஹி நீ வருவாய்

வணங்குபவர்களின் வாழ்வினில்
வளங்கள் சேர்க்க வருவாய்

பல கோடி பிறவி சுழலில் உழன்று
சிக்கிதவிக்கும் உன் சேய்களை 
காக்க இதுவே தருணம்

எளியோரை வலியோர் வதைத்திடும்
அவல நிலையினை
இப்புவியிலிருந்து இப்போதே அகற்றிடுவாய்

அருளோடு பொருளும் பொருளோடு நிறைவும்
அனைவரும் அடைந்திட அருள் செய்திடுவாய்

பேதங்கள் அகன்றிட சேதங்கள் தவிர்த்திட
எல்லோரும் உன் சேய்கள்தான் என்ற எண்ணமதை
அனைவருக்கும் உணர்த்திடுவாய்

வலிகளை தாங்கிடும் வன்மையையும்
இன்ப துன்பங்களை  எளிதாய் ஏற்றிடும் பான்மையையும்
பழிக்கு ஆளாமல் என்றும் உன் காப்பும்
தேடி உன் திருவடியை அடைந்தோர்க்கு
அக்கணமே  அளித்த்திடும் அன்பு தெய்வமே

தரணி போற்றும் தாரணியே
வேண்டியதனைத்தும் அளிக்கும் பூரணியே
இயக்கங்களின் காரணியே
சிலந்தி வலையில் சிக்கிய உயிர் போல்
வினைகளால் பின்னப்பட்ட விதிவலையில்
சிக்கிய நானும் அபயம் தேடி
உன்  திருவடி அடைந்தேன் ;;

தேனூறும் மலர்களை அணிந்து
திவ்யமாய் காட்சி  தரும் வாராஹியே
என் கண்கள் கண்ட பயனே
ஆன்மாவிற்கு அமைதி தருபவளே
எல்லோர் வாழ்விலும் துன்பங்கள் நீங்கி
ஆனந்தம் மலரட்டும் அன்னையே .

துன்பங்களும் துயரங்களும்
சூழ்ந்திட்ட இவ்வுலகில்
அல்லல்படும் மாந்தர்களை   
ஆதரித்து காப்பவளே
அபிராமியே !அகிலாண்டேஸ்வரியே
அன்னையே என் மனம் உன்னையே
என்றும் நினைத்திட வரமருள்வாயே .

அடிபணிந்தேன் ,உளம் உவந்தேன்
மூடிய என் விழியினுள்ளும்
உன் திருஉருவம் கண்டு தரிசிக்க
உன் கடைக்கண்   பார்வையினால்
என்னை ஆட்கொண்டருளுவாய்
அன்னை வாராஹியே

;







3 கருத்துகள்:

  1. சிறப்பு பகிர்வு... அருமை...

    விழாக்கால வாழ்த்துக்கள்...

    நன்றி...

    பதிலளிநீக்கு
  2. "அபிராமியே !அகிலாண்டேஸ்வரியே
    அன்னையே என் மனம் உன்னையே
    என்றும் நினைத்திட வரமருள்வாயே ."
    அருமை;வழ்த்துக்கள்.
    எனது இரு தளத்திற்கும் வருகை தந்து கருத்துக்கள் இட்டமைக்கு நன்றி.
    முதல் வருகையை வாழ்த்தி பூங்கொத்து காத்திருக்கு http://padmasury.blogspot.in/[பத்மாவின் மாதேஸ்வரன் மதுரை

    பதிலளிநீக்கு