வியாழன், 4 அக்டோபர், 2012

கல்லிலே காணும் கலைவண்ணமும்

கல்லிலே காணும் கலைவண்ணமும் 
கால வெள்ளத்தில் கரைந்து போய் 
காணாமல் போன கலைஞர்களும் (பகுதி-1)

நம் நாடு கலைகளுக்கு பெயர் பெற்றது
காலத்தால் அழியாத கலை படைப்புக்களை அந்த நாள் கலைஞர்கள் உருவாக்கினார்கள்

அதை உருவாக்க மன்னர்கள் தங்கள் ஆக்கத்தையும் ஊக்கதையும்தந்து அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.
நம் நாடு முழுவதும் எண்ணிலடங்கா கோயில்களும் அதில் சிற்பங்களும் உணர்சிகளை முகத்தில் தேக்கி உயிர் பெற்று விளங்குகின்றன.

இவைகள் எதையும் அறியாது இன்றைய மானிடர் கூட்டம் வீண் பொழுதை போக்கிகொண்டிருக்கிறது
நம் முன்னோர்கள் தொடாத கலையே இல்லை எனலாம்

நம்மால் அதை போன்ற கலை படைப்புக்களை இன்று உருவாக்க முடியாது

ஆனால் காலத்தை வென்று நிற்கும் அவைகளை சிதைக்காமல் இருப்போம். அவைகளை கண்டு ரசிப்போம்.

அந்த முகம் தெரியாத கலைஞர்களை வாயார மனமார வாழ்த்துவோம்.



 இந்த பதிவில் நம் கலைபோக்கிஷங்களின். படங்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சில படங்களை வெளிடலாம் என்று நினைக்கிறேன்.

முதல் படம் தமிழ்நாட்டில்  தாராசுரம் என்னும் ஊரில் உள்ள
 ஐராவதேஸ்வரர் கோயிலின் முகப்பு தோற்றம்

இரண்டாவது படம் அதில் உள்ள மண்டபம் போன்ற அமைப்பு தனியாக பிரித்தெடுத்தது

மூன்றாவது படம் அந்த மண்டபத்திற்குள் நான் metal foil லில் வரைந்த உப்பிலியப்பன் படம் பொருத்தப்பட்டுள்ளது

கோயிலின் படம் http://enthamizh.blogspot.inஎன்ற வலைத்தளத்தில் எடுக்கப்பட்டது . அதில் தாராசுரம் பற்றிய ஏராளமான படங்கள் உள்ளன அனைவரும் சென்று பார்க்கலாம்.படங்கள் நாம் நேரில் பார்ப்பதுபோல் தெளிவாக உள்ளது குறிப்பிடத்தக்கது  (இன்னும் வரும்)

1 கருத்து:

  1. நீங்கள் குறிப்பிட்டுள்ள தளம் நான் தொடரும் தளம் தான்...

    தாங்கள் வரைந்த உப்பிலியப்பன் படம் பொருத்தப்பட்டுள்ளது என்பது தெரியாது...

    நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு