புதன், 24 அக்டோபர், 2012

கருணை மறந்தே வாழ்கின்றார்



கருணை மறந்தே வாழ்கின்றார் 
கடவுளை தேடி 
அலைகின்றார் 

அன்பே சிவம் என்று கூறுகின்றார் 
அவன் படைத்த உயிர்களை 
காசுக்காக ,நாவின் ருசிக்காக
 ஈவிரக்கமின்றி கொல்கின்றார் 
கடவுளின் தேசம் என்று 
பீற்றிகொள்ளும்  கேரள மக்கள் 

அங்கு நடக்கும் அநியாயங்களை 
கேரளாவில் உள்ள கோயில்களுக்கு 
லட்சக்கணக்கில் செல்லும் 
பக்த கோடிகளே ,தெரிந்துகொள்ளுங்கள் 

தெய்வம் நீங்கள் இருக்கும் 
இடத்திலேயே உள்ளது 
உங்கள் உள்ளத்திலேயே  உள்ளது

கேரளாவில் தெய்வமே கிடையாது
தெய்வங்கள் இருக்கும் இடத்தில் 
இவ்வளவு அநியாயங்கள் நிச்சயம் நடக்காது.  

கீழ்கண்ட வீடியோ இணைப்புகளை காணுங்கள். 
உங்கள் உள்ளத்தில் ஈரம், இரக்கம் 
என்று ஒன்று இருந்தால் 
உங்களை மனிதர்கள் என்று
சொல்லிக்கொள்ளுங்கள். 



We made a documentary titled: "Their Last Journey" - Cattle trafficking to Kerala. This is now hosted in youtube and can be accessed through the following links:


4 கருத்துகள்:

  1. /// தெய்வம் நீங்கள் இருக்கும்
    இடத்திலேயே உள்ளது
    உங்கள் உள்ளத்திலேயே உள்ளது ///

    இதை விட வேறென்ன வேண்டும்...?

    பதிலளிநீக்கு
  2. காணொளி கண்டேன். அங்கு "பிராணிகள் வதை தடுப்புச் சங்கம்"[S.P.C.A.]என்ன செய்கிறது?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      இன்று மனிதர்கள் வதைபட்டு
      உதைபட்டு,சுரண்டப்பட்டு
      இவ்வுலகத்தில் வாழ வழியின்றி
      தவிக்கின்றனர்

      தன்னுடைய இன மக்களையே
      காப்பாற்ற திராணியில்லாத
      இந்த மனித சமூகம்
      வாயில்லா அப்பாவிபிராணிகளையா
      காப்பாற்றபோகிறது?

      இரக்கம் காட்ட போகிறது?

      இதயம் கல்லாகிவிட்டது
      மனிதர்களுக்கு

      கல்லை அவர்களுடன்
      ஒப்பிடுவதும் தவறு

      ஏனென்றால் கல்லுக்குள்ளும்
      ஈரம் இருக்கும்,

      தேரை உயிரோடு இருக்க,
      பச்சை பசேலென்று பாசி படர
      காக்கை விட்ட எச்சத்துடன்
      விழுந்த விதை முளைக்க

      ஆனால் மனிதர்களின்
      ஆழ் மனதில் உள்ள அன்பு
      சுயநலத்தால் மழுங்கிவிட்டது.

      சிலவற்றை அவரவர்
      செய்த வினை என்றும்
      அதனால் துன்பங்களை
      அனுபவிக்கிறார்கள்
      என்று வேதாந்தம் பேசி மனதை
      தேற்றிகொள்ளவேண்டியதுதான்.

      நீக்கு