வியாழன், 18 அக்டோபர், 2012

கீதையை புரிந்து கொள்வோம் (பகுதி-1)


கீதையை 
புரிந்து கொள்வோம் (பகுதி-1)
















மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா 
மரணத்தின் தன்மை சொல்வேன் 
மானிடர் ஆன்மா மரணமெய்தாது 
மறுபடி பிறந்திறக்கும் .-பகவத் கீதையில் கண்ணன் 

இன்று மரணம் என்றாலே
எப்பேர்பட்ட தைரியசாலியும்
,புத்திசாலியும் கலங்கிவிடுகிறான்
அவனும் கண் கலங்குகிறான்
அவனை சுற்றி நிற்கும்
உறவுகளும் நண்பர்களும்
அழுது வழிகின்றனர்.

அவன் எதிரிகளோ
அவன் மரணத்தை ஆவலோடு
எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
அவர்கள் இடத்தை தாங்கள் பிடித்துக்கொள்ள
தாங்களே அதற்க்கு ஒருநாள்
இரையாக போகிறோம்
என்பதை அறியாது .

மேலும் மரணம் என்ற சொல்லை
உச்சரிக்கக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது .
அந்த சொல்லை அமங்கலம் என்று
முத்திரை குத்தி அதை உச்சரிக்கவே
 மனித சமுதாயம் பயப்படுகிறது

ஆனால் அந்த மரணம்
எப்போது வேண்டுமானாலும்,
எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
எந்த இடத்தில வேண்டுமானாலும்,
யாராலும் வேண்டுமானாலும்
எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வரலாம்
 என்பது யாருக்கும் முன்பே தெரிவதில்லை .

அது எதிர்பாராமல் வந்து தன் வேலையை
முடித்துக்கொண்டு மக்களை
துடிக்க வைத்து ஓடிவிடுகிறது


மக்களும் பல்லியின்உடலிலிருந்து அறுந்து
கீழே விழுந்த வால் போல் சில காலம் (நடித்துவிட்டு)
துடித்து விட்டு அடங்குவதுபோல்
அந்த சம்பவத்தை மறந்துவிட்டு
அவரவர் வேலையை பார்க்க போய்விடுவதுதான்
இந்த உலகில் நடக்கிறது


அதனால்தான் பகவான் கண்ணன்
இந்த பூமியில் எப்போது பிறப்பு என்று
ஒன்று இருக்கிறதோ
இறப்பு என்று நிச்சயம் உண்டு
அதை யாரும் மாற்றமுடியாது
மாற்ற முடியாத ஒன்றை நினைத்து
விசனப்படுவது, அச்சப்படுவது
தேவையற்றது என்கிறான். (இன்னும் வரும்)

2 கருத்துகள்:

  1. /// ஆனால் அந்த மரணம்
    எப்போது வேண்டுமானாலும்,
    எந்த நேரத்தில் வேண்டுமானாலும்
    எந்த இடத்தில வேண்டுமானாலும்,
    யாராலும் வேண்டுமானாலும்
    எந்த உருவத்தில் வேண்டுமானாலும் வரலாம்
    என்பது யாருக்கும் முன்பே தெரிவதில்லை. ///

    அது தெரிந்தால் மனிதன் ஏன் இப்படி ஆடப் போகிறான்...?

    விளக்கம் அருமை ஐயா...

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் தெரிந்துதான் ஆடுகிறார்கள்
      சிலர் தெரியாமால் ஆடுகிறார்கள்
      சிலர் புரியாமல் ஆடுகிறார்கள்
      சிலர் புரிந்துகொண்டுதான் ஆடுகிறார்கள்

      ஆனால் எல்லோரையும் ஆட்டிவைப்பவன்
      அந்த ஆடல்வல்லாந்தான் என்பதை
      புரிந்துகொண்டு அமைதியாய்
      அவன் ஆணைக்கு கட்டுப்பட்டு
      இன்பமாக வாழ்பவர்கள்
      மிக அரிதினும் அரிது.

      நீக்கு