நான் பதிவரானது எப்படி(பகுதி-2)
2008 ஆம் ஆண்டு மூன்று பதிவுகளை தொடங்கி
இடுகைகளை இட்டுக்கொண்டிருந்தேன்.
என் புத்திக்கு எட்டிய வரையில்
ஆன்மீக கருத்துக்களை
வெளியிடும் வகையில் மேலும்
இரண்டு வலைபதிவுகளை
2009 ஆம் ஆண்டு தொடங்கினேன்
7th DECEMBER 2009 ல் DIVINE BLISS என்றும்
11 th DECEMBER 2009 ல் OM SAAYEE OM என்றும் இரண்டு
வலைபதிவுகளை தொடங்கினேன் .
DIVINE BLISS- இதுவரை இட்ட இடுகைகள் -40-
பார்வையாளர்கள் -746
OM SAAYE OM-இடுகைகள் -5 பார்வையாளர்கள் -13
ஆனால் பல விஷயங்களில்
என் கருத்தை பதிய 2010
ஆம் ஆண்டு ENNAPPARAVAIGAL என்ற
வலைப்பதிவை தொடங்கி அதில்
என் கருத்துக்களை வெளியிட்டேன்
அதில் 41 இடுகைகளை இட்டேன்
பார்வையாளர்கள் -282 மட்டுமே
அப்படியும் என் மனம்
திருப்தியடையவில்லை .
ஆன்மிகம் மற்றும் நாட்டு நடப்புகள் மீது
என்னுடைய கருத்தை பதிவு செய்ய
2011 ஆம் ஆண்டு இரண்டு
புதிய பதிவுகளை தொடங்கினேன்
அக்டோபர் 2011 ல் RAMARASAM என்ற பதிவையும்
டிசம்பர் 2011 ல் NAADUMNADAPPUM என்ற
பதிவையும் தொடங்கி அதில்
என்னுடைய கருத்துக்களை பதிவு செய்தேன் .
RAMARASAM-இதுவரை இட்ட இடுகைகள் -192-
பார்வையாளர்கள் -6284
NAADUM NADAPPUM-இடுகைகள் -49-
பார்வையாளர்கள் -3759
ஏப்ரல் 2012 ல் . CHINTHANAI SITHARALGAL
என்ற வலைபதிவு தொடங்கி
இதுவரை 165 இடுகைகள் இட்டுள்ளேன்
பார்வையாளர்கள் 2740
வலைப் பதிவை தொடங்கி என் மனதில் உள்ள
விஷயங்களை பலரும் அறிய வெளியிட்டதில்
எனக்கு ஒரு ஆத்ம திருப்தி உள்ளது .
2008 தொடங்கிய என் பயணத்தில் இதுவரை 668 இடுகைகள்
இட்டிருப்பது எனக்கே வியப்பாக உள்ளது.
இன்னும் என்னிடம் இந்த உலகோடு பகிர்ந்து கொள்ள ஏராளமான கருத்துக்கள் உள்ளன .அவைகளை இனி வருங்காலத்தில் வெளிப்படுத்த இந்த ஊடகம் வழி வகுத்துள்ளது . என்றால் அது மிகையாகாது .