ஞாயிறு, 4 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்நானும் ஒரு ஓவியன் 

முறையான பயிற்சியும் கிடையாது.
நேரமும் கிடைக்கவில்லை இருந்தாலும்
 ஒரு ஆத்மா திருப்திக்காக
படங்கள் வரைந்தேன்/வரைகிறேன்
அவ்வளவுதான்.

நான் பள்ளியில் படிக்கும்போதே
திருப்பதி வெங்கடேச பெருமானை
வரைய வேண்டும் என்று ஆசை.

அந்த ஆசை 35 ஆண்டுகள்
கழித்துதான் நிறைவேறியது.

பால் பாயிண்ட் பேனாவால்
அந்த படம் வரைந்தேன்

அந்த படம் இதோ.
10 கருத்துகள்:

 1. கைவண்ணம் இங்கே கண்டேன்! அற்புதம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுக்கு நன்றி.
   உங்களின் பாராட்டுக்கள்
   என்னை மேலும் ஊக்கபடுத்தி
   அருமையான படைப்புகளை
   தர வழி கோலும்

   நீக்கு
 2. கிட்டத்தட்ட சில்பி அவர்களின் ஓவியம் போலவே உள்ளது.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சந்திர வம்சம்
   பாராட்டுகளுக்கு நன்றி.

   அமரர் சில்பி எங்கே? நான் எங்கே?
   தெய்வ உருவங்களையே வரைந்த
   அவர் ஒரு தெய்வ பிறவி .

   50 ஆண்டுகளுக்கு முன்
   ஆனந்தவிகடனில் தென்னாட்டு செல்வங்கள்
   என்ற தொடரில் தொடர்ந்து
   அவரின் கலை படைப்புகள்
   வெளி வந்தது .
   அப்போது பார்த்து மெய்மறந்துபோவேன்
   நம்மால் இதுபோலெல்லாம்
   வரைய முடியுமா என்று

   தீபாவளி மலர்களின் அவரின்
   கைவண்ணம் அழகு சேர்த்ததை
   யாரும் மறந்திருக்க முடியாது. .

   ஆனால் அந்த ஆசைகளை
   ஒரு சில படங்கள் மட்டும்
   வரைந்து தீர்த்துக்கொண்டேன்
   அவைகளில் ஒன்றுதான்
   -என்னுடைய வலைபதிவு -அசலும் நகலும் )
   இன்னும் சில படங்கள் வரைந்திருக்கிறேன்
   விரைவில் வெளியிடுகிறேன்.
   நான் அவரின்மேதாவிலாசத்திர்க்கு
   பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் நிற்க கூட அருகதையில்லாதவன்

   நீக்கு
 3. அற்புதமான ஓவியம்
  மிக நேர்த்தியாக வரைந்துள்ளீர்கள்
  இதைத்தான் கருவிலே திரு என்பார்கள்
  உங்களுக்கு பயிற்சி வேறு எதற்கு ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி திரு ரமணி அவர்களே.
   பாராட்டுகளுக்கு நன்றி.

   வாழ்வில் அடுக்கடுக்காக
   அனுதினமும் மன உளைச்சல்களை சந்தித்தபோது
   எனக்கு அமைதியை தந்தது இந்த ஓவியக்கலைதான்

   ஓவியம் வரையும்போது
   இந்த உலகையே மறந்துவிடுவேன்,

   என் மனம் அனைத்தையும் மறந்து
   அதில் மூழ்கிவிடும்.

   ஏராளமாக வரைந்து
   தள்ளியுள்ளேன்

   நீக்கு
 4. யப்பா...! அசர வைக்கிறது...!! எவ்வளவு நுணுக்கம்...!!!

  வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு ஓவியன் தான் வரைந்த
   படத்தில் திருப்தி அடைந்துவிட்டால்
   அவன் வளர்ச்சி அத்தோடு நின்றுவிடும்
   என்று நான் நினைக்கிறேன்

   அவன் கடல் அலைகள்போல்
   போல் முயன்றுகொண்டே இருக்கவேண்டும்.

   அப்போதுதான் அவனிடமிருந்து
   இன்னும் நல்ல படைப்புகள் வெளிப்படும்.
   அவ்வாறு செய்துகொண்டிருப்பதால்தான்
   என்னிடமிருந்து இவ்வளவு
   படைப்புகள் வெளி வந்தன.

   இன்னும் வெளிவர
   காத்திருக்கின்றன.
   .
   தங்கள்பாராட்டிற்கு நன்றி

   நீக்கு