நானும் ஒரு ஓவியன்(Ball point pen sketches)
அந்நியர்கள் நாம் நாட்டை விட்டு சென்றபோது
அடிமைத்தனத்தில் நாம் தொடர்ந்து இருக்குமாறு
செய்துவிட்டுதான் போயிருக்கிறார்கள்.
அதை நாம் இன்றளவும் உணரவில்லை
திருத்திக்கொள்ளவில்லை
சுயநலம் கருதி அதை அப்படியே
வைத்துக்கொண்டிருக்கிறோம்.
அதுதான் January First என்னும் costli யான சடங்கு
.
Happy new year என்று சொல்வதற்காக அரசு அலுவலர்கள்
தங்கள் அதிகாரிகளை ஜனவரி ஒன்றாம் தேதி பரிசுபொருள்களுடன் காலையில்தவம் கிடந்தது பார்ப்பதும்,
அதிகாரிகள் அவர்களின் மேலதிகாரிகளையும்,
மக்கள் பிரதிநிதிகளையும், மந்திரிகளையும் பெருந்தொகை
,தங்க காசுகள் ,மாலை மரியாதைகள் சால்வைகள்,துண்டுகள்
என பல பரிசுபொருள் களுடன் கும்பல் கும்பல்களாக நிற்பதும்
இன்றும் தொடரும் கண்றாவி காட்சிகள்.
இதைதவிர ஒப்பந்தக்காரர்கள், தொழிலதிபர்கள் என அரசு பணத்தை சூறையாடும் கூட்டம் வேறு இந்த நாளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும்.
இதை இன்றும் தவிர்க்கமுடியாத
ஒரு சடங்காக விளங்குகிறது.
நான் இந்தநாளில் நான் வரைந்த தெய்வ படங்களை
என் புத்தாண்டு வாழ்த்தாக கொடுக்ககூடாது
என்று நினைத்து ஒவ்வொரு ஆண்டும்
ஒரு படம் வரைந்து அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்தேன்.
முதலில் பிள்ளையார்பட்டி விநாயகர் படத்தை
அனைவருக்கும் கொடுத்தேன் எனக்கும் மகிழ்ச்சி
பெற்றவர்களுக்கும் மகிழ்ச்சி.
அந்த படம் இதோ
அருமை ஐயா...
பதிலளிநீக்கு