ஞாயிறு, 18 நவம்பர், 2012

சீன மண்ணில் தமிழ்


சீன மண்ணில் தமிழ் 

ஆம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 
சீனாவில் தமிழ் பரவிஇருந்தது 
இந்த செய்தி ஒரு கல்வெட்டு 
மூலம் தெரிய வருகிறது 

அதன் விவரங்களை பார்ப்போம் 


 

 மேலே கண்ட கல்வெட்டு சீன மண்ணில் உள்ளது  
காண்டன்Canton. நகருக்கு வடக்கே 500 மைல்கள் தள்ளி சுவான் சாவ் என்ற இடத்தில கண்டு பிடிக்கப்பட்டது பழங்காலத்தில் அது ஒரு கடற்க்கரை நகரமாக இருந்துள்ளது 

                


பொதுவாக அந்நாளில் தமிழ் மக்கள் தாய்லாந்தின் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள(Ta Kua Pa ) டா குவா பா என்ற  பகுதிக்கு கடற்பயணம் மேற்கொள்ளுவார்கள் .
பிறகு அங்கிருந்து தரை மார்கமாக (Kra ) கராவை சேர்ந்த (Isthmus)இஸ்துமஸ் மற்றும் இதர(ports like Nakon SiTammarat or Songkla). கடல் துறைமுகங்களுக்கு பயணம் மேற்கொள்ளுவார்கள் 
அந்த துறைமுகங்கள் தாய்லாந்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளன 
அங்கிருந்து அவர்கள் வியட்நாம் நாட்டின் துறைமுகங்களுக்கு செல்வார்கள்
அங்கிருந்து வடக்குபுரமாக அமைந்துள்ள சீனாவின் (Canton.)கான்டன்  துறைமுகத்திற்கு கடல்பயணம் செல்வார்கள் 
நேராக செல்ல வேண்டுமென்றால் அது நெடும் பயணமாக ஆகிவிடும்அவ்வாறு செல்லவேண்டும் என்றால் வங்கள் விரிகுடா கடல், மலாக்கா ஜலசந்தி ,சியாம் வளைகுடா, மற்றும்தெற்கு  சீன கடல்  ஆகியவை மூலமாக பயணம் மேற்கொள்ளவேண்டும் .பயணம் செய்ய பல மாதங்கள் பிடிக்கும்,மேலும் பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.         

                (இன்னும் வரும்)
நன்றி: VIDYALANKARA 
DR.S.JAYABARATHI
JayBeeமூல பதிவு.

2 கருத்துகள்: