வெள்ளி, 9 நவம்பர், 2012

தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்



வலையில் உலவும் அனைத்து 
உள்ளங்களுக்கும் மனம் கனிந்த 
தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்   


வலையில் உலவும் அனைத்து 
உள்ளங்களுக்கும் மனம் கனிந்த 
தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள்   

பிறருக்கு துன்பம்தரும் 
வெடிகளை வெடிக்காதீர்கள்
இன்பம் தரும் நகைசுவை 
வெடிகளை வெடித்து இன்புறுங்கள் 


உங்களின் மகிழ்ச்சிக்காக 
உங்களை சுற்றியுள்ளவர்களின் 
மகிழ்ச்சியை கெடுக்காதீர்கள். 

ஆர்வம் தடை செய்ய இயலாது 
ஆனால் அதை அணை போட்டு 
தடுக்கலாம் மனம் இருந்தால் 

வெடிகளின் இரைச்சலை குறைப்போம்
சுற்றுப்புற சீர்கேட்டை தடுப்போம் 

இந்த உலகம் உங்களுடையது மட்டுமல்ல 
ஓலை குடிசைகளில் வசிக்கும் ஏழைகளும்,
வீடே இல்லாது நடைபாதையில் தங்கள் வாழ்வை கழிக்கும் மக்களும்,வயதானவர்களும், நோயில் கிடந்தது தவிப்பவர்களும், குழந்தைகளும்,அப்பாவி பிராணி 
பிராணி க ளுக்கும்கூட சொந்தம் 
என்பதை மறந்து விடாதீர்கள். 
தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 

வெடியில் தீ வைப்பதற்கு
முன் பலமுறை யோசியுங்கள்

நீங்கள் வைக்கும் வெடியில் 
பல உயிர்கள் பலியாகலாம்,
பொது சொத்துக்கள் சேதமாகலாம்

.











1 கருத்து:

  1. காய் கனிந்தால் இனிக்கும்

    மனம் கனிந்தால்
    வாழ்க்கையும் சுவைக்கும்
    வாழ்வும் இனிக்கும்

    இனிப்பு சுவைப்பருக்கு மட்டும் இனிக்கும்
    இனிய பேச்சோ அனைவருக்கும் இனிக்கும்

    தான் மட்டும் இனிப்பை சுவைத்து
    மகிழாது அதை பெற வழியில்லாத
    ஏழைகளுக்கும் அளித்தால் ரெட்டிப்பு
    இன்பம் கிடைக்கும்

    வயிறு வெடிக்க தின்று
    அஜீரண மாத்திரைகளையும்
    ஜெல்களையும் பாட்டில் பாட்டிலாக விழுங்குவதிலும்
    சுற்றுபுறத்தை காகித குப்பைகளாலும்
    நச்சு புகையாலும் நிரப்பி
    அனைவரையும் துன்பத்தில் ஆழ்த்துவதிலும்
    என்ன மகிழ்ச்சி இருக்கிறது என்று
    புரியவில்லை ?


    வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு