என்னை பாதித்த ஓவியர்கள்(திரு கோபுலு)
எனக்கு ஓவியம் வரைவது
என்றால் மிகவும் பிரியம்
ஆனால் முறையாக பயிற்சி
பெற வாய்ப்பிலாமல் போய்விட்டது
அதற்காக நான் கவலைப்படவில்லை.
ஓவியத்தில் பல பரிமாணங்களை
நான் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.
நான் ஒன்றும் அப்படி கைதேர்ந்த ஓவியன்
இல்லாவிட்டாலும் பென்சில்,பால் பாயிண்ட் பென்
பிரஷ் ,மெடல் பாயில், சிற்பம், வண்ண ஓவியம்,
கருப்பு வெள்ளை ஓவியம் என
எல்லாவற்றிலும் கையை நனைத்து விட்டேன்.
அவற்றில் பலவற்றை என்னுடைய
ஒன்பது வலைப்பதிவுகளில்
பயன்படுத்தியுள்ளேன் .
என்னை பாதித்த ஓவியர்கள்
பலர் இருக்கிறார்கள்.
அவர்களில் திரு கோபுலு .
என்னை சிறு வயதிலிருந்தே என்னை கவர்ந்தவர்
அவர் படங்களில் ஸ்ட்ரோக்குகள்
பிரமாதமாக இருக்கும். பாவங்கள் அற்புதமாக இருக்கும்.
கண்கள் நம்மை காந்தம் போல் இழுக்கும்.
அவர்.நான் சிறு பையனாக இருந்த காலத்தில்
ஆனந்த விகடனில், திரு சாவி எழுதிய வழிபோக்கன்
என்ற கதைக்கு அவர் வரைந்த படங்கள் என்னை கவர்ந்தன.
அந்த கதா பாத்திரத்தோடு. ஒன்றி போனேன்.
பிறகு அவரின் பலவிதமான பரிமாணங்களை
நான் மிகவும் ரசித்தேன். புராண படங்களாகட்டும்,
சரித்திர,சமூக,கேலி சித்திரங்களாகட்டும் ,
தீபாவளி மலரில் முகப்பு வண்ண படங்களாகட்டும்
அவருக்கு நிகர் அவர்தான்.
ஏகலைவன்போல் அவர் வரைந்த நித்திலவல்லி
என்ற சரித்திர தொடரிலிருந்து அவர் வரைந்த
ஒரு படத்தை நான் முயற்சி செய்து வரைந்தேன்.
அந்த படம் இதோ.
திரு. கோபுலு அவர்களின் ஓவியத்தை எவ்வளவு ரசித்துள்ளீர்கள் என்பதை உங்களின் ஓவியம் சொல்கிறது...
பதிலளிநீக்குஅழகாக உள்ளது ஐயா...
வாழ்த்துக்கள்...
பாராட்டிற்கு நன்றி DD
நீக்குபாராட்டுக்கள் ஐயா! உங்களுக்குள் மேலும் ஒரு கலைஞன் ஒளிந்துள்ளான் என்பதை ஓவியங்கள் சொல்கிறதே!
பதிலளிநீக்குஎன்னுள்ளே ஏராளமான
நீக்குகலைஞர்கள் ஒளிந்துள்ளார்கள்
எல்லோரும் வாய்ப்பு கேட்டு
என்னை தொந்தரவு செய்கிறார்கள்.
அனைவருக்கும் வாய்ப்பு
அளித்துள்ளேன்.
இன்னும் வாய்ப்பு
அளித்துக்கொண்டு இருக்கிறேன்.
என்னுடைய வலைப்பதிவுகளில்
அவர்கள் அவ்வப்போது
தங்கள் முகத்தை காட்டியுள்ளார்கள்.
இன்னும் நிறைய பேர்
வெளிவர காத்துக்கொண்டிருக்கிறார்கள் .
வருகைக்கு நன்றி