வியாழன், 29 நவம்பர், 2012

விலங்குகளும் மனிதர்களும்(பகுதி-2)


விலங்குகளும் மனிதர்களும்


விலங்குகளும் மனிதர்களும்(பகுதி-2)விலங்குகள் தினமும்
உறங்குகின்றன

விலங்குகள் உறக்கம் வரும்போது உறங்கிவிடுகின்றன. 
எதை பற்றியும் அவைகளுக்கு கவலையில்லை. 
தூங்கும் பொது அது கொல்லப்பட்டுவிடுவோமோ என்ற பயம் அதற்கில்லை.
சேர்த்து வைத்த சொத்துக்களை யாராவது 
கொள்ளையடித்துக்கொண்டு போய்விடுவார்களோ 
என்ற பயம் அதற்கில்லை. 
ஏனென்றால் அவைகள் சொத்து சேர்ப்பது கிடையாது 

அதனால் அவைகளை பாதுகாக்க 
வேண்டிய தேவையும் இல்லை. 
அதை இழந்து விடுவோம் என்ற பயமும் இல்லை. 

ஆனால் மனிதர்கள் நிலை என்ன?

படுத்தால் அவனால் உறங்க முடிகிறதா? 
ஏதோ சில புண்ணியவான்களுக்கு
 மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. 

பலர் தூங்குவதற்கு பல தூக்க 
மாத்திரைகளை விழுங்கவேண்டியுள்ளது.
தூங்குவதற்கு பல ஆயிரம் செலவு செய்து 
குளிர் சாதந வசதி செய்து தாளிடப்பட்ட 
அறைக்குள் தூங்கினால்தான் தூக்கம் வருகிறது.

அந்த தூக்கத்தை கெடுக்க ஏராளமான சக்திகள் அவனுக்கு எதிராக வேலை செய்து அவன் தூக்கத்தை கெடுக்கின்றன

தீய வழியில் சொத்து சேர்த்தல் 
,பிறருக்கு கொடுமைகள் இழைத்ததினால் 
உண்டாக்கிகொண்ட எதிரிகள், சேர்த்த சொத்துக்கு வருமான வரி கட்டாமல் இருத்தல்,
அளவுக்கதிகமாக தங்க நகைகள் வீட்டில் வைத்திருத்தல்,
கணக்கில் வாராத கோடிக்கணக்கான
பணத்தை வீட்டில் மறைத்து வைத்தல், 
வீட்டின் உள்ளே எதிரிகள், வெளியே எதிரிகள்,
கொசுமற்றும் விஷப் பூச்சிகள் கிருமிகள்,
கொள்ளையர்கள்,  பலவிதமான மன குழப்பங்கள்என 
அவன் படும் துன்பங்கள் கணக்கிலடங்கா 

இந்நிலையில் அவன் எவ்வாறு உறங்குவது ?

ஒவ்வொரு கணமும் பயந்து நடுங்கி சேர்த்த சொத்துக்களை பாதுகாப்பதில் மனதை செலுத்தி, 
உறக்கத்தை இழந்து மன நோயாளிகளாகி 
வாழும் மனிதர்களை என்னவென்று சொல்வது?

அப்படி உறங்கினாலும் கனவு 
தொல்லைகள் வேறு. .

இதை தவிர விபத்துக்கள்,நோய்கள், 
துக்கம், துயரம் இழப்புகள் என எண்ணிலடங்கா துன்பங்கள்

இவை எல்லாம் அதுவாகவே வந்ததில்லை 
எல்லாம். அவனாகவே தேடிக்கொண்டதுதான் 

இப்படி இறைவன் கொடுத்த பகுத்தறிவை கொண்டு மகிழ்ச்சியாக வாழ தெரியாமல் பிறப்பு முதல் இறப்பு வரை துன்பத்தில் வாழும் மனிதர்கள் எப்படி பகுத்தறிவுடையவர்கலாக இருக்க முடியும்?

எந்த மனிதனையாவது நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா என்று கேட்டால் அவன் பணக்காரனாக இருந்தாலும் சரி ஏழையாக இருந்தாலும் சரி இல்லை என்றுதான் பதில் வரும்?

ஏனென்றால் இவர்களுக்கு உண்மையான மகிழ்ச்சி
என்பது என்ன என்று தெரியாது

மகிழ்ச்சி என்று எதையோ நினைத்துக்கொண்டு இகழ்ச்சியான செயல்களை செய்து கொண்டு. துன்பத்தில் உழன்று கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.  


2 கருத்துகள்:

  1. உண்மைகளை புட்டு புட்டு வைத்து விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் துட்டையே நினைத்துக்கொண்டு அதன் பின்னேயே ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மீண்டும் எழ முடியா உறக்கம் வரும் வரை உறக்கம் என்னும் தற்காலிக இன்பத்தை தினம் தினம் சுவைக்க முடியாது

      நீக்கு