செயல்பட்டு
கொண்டிருப்பதுதான்
வெற்றியே
மனிதனே தூங்கும் நேரம் தவிர
எப்போதும் ஓடிகொண்டே இரு
கடிகார முட்கள் போல்
சாவி உள்ளவரை அல்லது
மின்சக்தி உள்ளவரை
உடலில் சக்தி இழந்த போதும்
இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு
அனைவரையும் ஓட வைக்கும்
கடிகாரம் போல் நீ இருப்பாய்
உயிரற்ற சடலம்தான்
அசையாது கிடக்கும்
உடல் ஓய்ந்து போனாலும் மனத்தால்
சோர்ந்து போய் உட்கார்ந்து விடாதே
செயல்பட்டு கொண்டிருப்பதுதான்
வெற்றியே தவிர பிறர் மீது
வெற்றி கொள்வது அல்ல என்பதை
புரிந்துகொள் நண்பா
பிறர் நம் மீது தொடுக்கும் விமரிசனங்கள்
நாம் அவர்களை விட திறமையாக
செயல்படுவதை காட்டும் கண்ணாடிகள்
அதை உரமாக கொண்டால்
நெடிய மரம்போல் உயர்ந்து நிற்கலாம்
அதை கண்டு பயந்தால்
நம் திறமை மங்கிவிடும்
எதிர்காலம் அழிந்துவிடும்
அலைகள் என்றும் ஓய்வதில்லை
சிலைகள் எங்கும் தானாக நகர்ந்து
செல்வதில்லை
அதைபோல் உழைப்பவன்
என்றும் ஓய்வதில்லை
ஓயாது உழைப்பவனுக்கு கிடைப்பது
சக்தி மட்டுமல்ல வெற்றியும்தான்
சோம்பேறிக்கு கிடைப்பது
தோல்வியும் அழிவும்தான்
மனம் கலங்காதே
மதி மயங்காதே
நடை தளராதே
பிறர் கேடு நினையாதே
உள்ளம் பெறும் மலர்ச்சி
வாழ்வு தரும் மகிழ்ச்சி
சிறப்பான கருத்துக்கள் ஐயா... நன்றி...
பதிலளிநீக்குநன்றி DD
நீக்கு