புதன், 7 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்(washdrawing)


நானும் ஒரு ஓவியன்(washdrawing)

பல ஆண்டுகளுக்கு முன் குமுதம் இதழில்
வர்ணம் என்றொருவர் washdrawing படங்களை வரைவார்.
அற்புதமாக இருக்கும்.
அவர் படங்களைபார்த்து நாமும் ஏன்
அதை முயற்சி செய்யக்கூடாது என்று தோன்றியது.

அனால் அதற்க்கு பொறுமை நிறைய தேவை.
பொறுமையாக வரைந்தால் படம் மிக அழகாக வரும்.
முக பாவங்களை அருமையாக வரையலாம்.

அதில் நிறைய நுணுக்கங்கள் இருக்கின்றன.
 பயிற்சி செய்ய செய்ய படம் மெருகேறும்.

நம் நாட்டில் அனைவருக்கும் சித்திரக்கலையில்
ஆர்வம் இயற்கையிலேயே உள்ளது.

பெயிண்டேர்கள் எந்த கலை கல்லூரிக்கும் சென்றதில்லை
ஆனால் அவர்கள் அற்புதமாக வரைவதை காணலாம்
 எல்லாம் பயிற்சியும்,ஆர்வமும்தான்.

கணினி வந்த பிறகு அவர்கள் வாழ்வு
அஸ்தமித்துவிட்டது என்று சொல்லலாம்.


நான் வரைந்த படங்களில்
ஒன்று பசுவும் கன்றும் இதோ .

இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட
நிறங்கள் கருப்பு மற்றும் வெள்ளை மட்டும்தான்
படத்தின் பின்னால் வெளிச்சம் உள்ளதாக தெரிகிறது.

இதைபோன்ற பல shade களை
கை தேர்ந்த ஓவியர் கொண்டுவருவர்.


 .

2 கருத்துகள்: