வியாழன், 29 நவம்பர், 2012

சீன மண்ணில் தமிழ் (Part-3)


சீன மண்ணில் தமிழ் (Part-3)

ஆம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் 
சீனாவில் தமிழ் பரவிஇருந்தது 
இந்த செய்தி ஒரு கல்வெட்டு 
மூலம் தெரிய வருகிறது 



              
மங்கோலிய அரசர்கள் ஆண்ட காலத்தில் 
தமிழ் கலாசாரம் சீனாவில் 
இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது 

குப்லாய் கான் சீனத்தை 1260 ஆம் ஆண்டு 
முதல் 1294 ஆம் ஆண்டு வரை ஆண்டு வந்துள்ளான். 

அவனை பற்றியும் மங்கோலியர்களை பற்றியும் 
சில சுவையான தகவல்கள் .

பழங்குடிகளான மங்கோலிய இனத்தவர்கள் 
சிறு சிறு கூட்டமாக மத்திய ஆசிய புல்வெளிகளில் குதிரைகள் மேலேறிக்கொண்டு மாடுகளையும் குதிரைகளையும் மேய்த்துக்கொண்டுசுற்றி திரிபவர்கள் .
அவர்கள் மூர்க்க குணமுடையவர்கள் மட்டுமல்லாது 
எப்போதும் போரிட்டுக்கொண்டே இருக்கும் 
குணமுடையவர்களாய் திகழ்ந்தனர் 

ஒரு கால கட்டத்தில் அவர்களிடையே 
ஒரு தலைவன் தோன்றினான்
அவன் அனைத்து மங்கோலிய இனத்தவரையும் 
ஒருங்கிணைத்து ஒரு வலிமை மிக்க சமூகமாக்கினான் .
அவன் திட்டமிடுவதில் சமர்த்தன். 
அவன் பெர்சியா,மத்திய ஆசியா, ரஷ்யா
ஆயிரோப்பாவின் சில பகுதிகள் 
மத்திய தரை கடல் நாடுகளில் சில பகுதிகள், 
மற்றும் சீனா ஆகிய நாடுகளின் மீது போரிட்டு 
அந்நாடுகளை கைப்பற்றினான்.

மிக குறுகிய காலத்தில் தன்னுடைய 
படையை கொண்டு இத்தனை நாடுகளை 
கைப்பற்றியவன் இதுவரை உலகில் யாரும் இல்லை.
 .
அவனை தங்களின் உயரிய தலைவனாக 
தேர்ந்தெடுத்து ஏற்றுக்கொண்டனர் மங்கோலியர்கள். . 

அவன் மறைவிற்கு பிறகு 
வாரிசு பிரச்சினைகள் உருவாகியது 
செங்கிஸ்கானின் மறைவிற்கு 
பிறகு மங்கோலிய சாம்ராஜ்யம்
 நான்காக பிளவு பட்டது 

அதில் சீனாவும் ஒன்று 
மற்றவைகள்,பெர்சியா,ருசியா ,அயிரோப்பா 
மற்றும் மங்கோலியர்கள் வசிக்கும் நாடு.
இந்த நாடுகளில் உள்ள ஒருவரை
தங்களின் தலைவனாக தேர்ந்தெடுத்தனர்.  

குப்ளாய்கான் சென்கிஸ் கானுடைய பேரன் 
அவனுடைய நான்காவது மகனான 
செங்கிஸ்கானின் மூன்றாவது மகன் 

குப்ளாய்கான் மங்கோலியர்களின் 
ஏகோபித்த தலைவனாய் ஏற்றுக்கொள்ளப்பட்டான்

அவன் சைனாவில் இருந்துகொண்டு 
தன் ஆட்சியை நடத்தினான்
பெய்ஜிங் நகரை நிர்மாணித்து அதை 
தன் தலைநகராக கொண்டான். 
அவன் நாடு பெரியதாகவும்,வளமுள்ளதாகவும்,
செல்வமுள்ளதாகவும் செழித்து விளங்கியது 

அவன் வலிமைமிக்கவ்னாகவும்,
பலமுள்ளவனாகவும் விளங்கினான் 
அவனிடம் யாராலேயும் எதிர்க்க முடியாத 
வலிமை வாய்ந்த படையும் ,படைக்கலங்களும் இருந்தது .



இரண்டு தடவைதான் அவன் படைகள் 

தோல்வியை சந்திக்க நேர்ந்தது
.....

               

(இன்னும் வரும்)
நன்றி: VIDYALANKARA 
DR.S.JAYABARATHI

JayBeeமூல பதிவு.

2 கருத்துகள்: