சனி, 24 நவம்பர், 2012

கல்வி கற்க பள்ளி செல்லும் குழந்தைகள் தினமும் படும் பாடுதான் மேல கண்ட படம்



நானும் ஒரு ஓவியன் தான் (Pencil sketches)


இன்று வரைந்த ஓவியம்



கல்வி கற்க பள்ளி செல்லும் குழந்தைகள் 
தினமும் படும் பாடுதான் மேல கண்ட படம் 

இந்த படம் எதை குறிக்கிறது

1.ஆடுமாடுகள் போல் முண்டியடித்துக்கொண்டு 
பேருந்தில் ஏறும் இந்த குழந்தைகள் .
ஒரு சிறுமி ஏறமுடியாமல் தரையில் நிற்கிறாள்
ஒரு சிறுவன் முன் பக்கம் சென்றால் இடம் கிடைக்குமா 
என்று ஓடுகிறான்
இந்த நிலைமை என்று மாறும்?

2 பேருந்து வந்து நின்றதும் வரிசையாக நின்று
ஒவ்வொருவராக பேருந்தில் ஏற வேண்டும் 
என்ற ஒழுக்க நெறியை கடைபிடிக்க கற்று தராத 
ஆசிரியர்களின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது

3 பள்ளி செல்லும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர தக்க நடவடிக்கை எடுக்காத,கையாலாகாத போக்குவரத்து நிறுவனங்களும், பொறுப்பற்ற ஊழல் அரசுகளின் நிலையையும் குறிக்கிறது

4 பல ஆயிரம் கோடி ரூபாய்களை கல்விக்காக செலவழிக்கும் அரசுகள் குழந்தைகள் சௌகரியமாக பள்ளிக்கு சென்று வர தகுந்த பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்யாதது எதிர்கால சந்ததிகளின் மேல் அரசும்.  மக்களும் காட்டும் அலட்சியத்தை காட்டுகிறது

5.சிறுவயதிலேயே ஒழுங்கை கடைபிடிக்காத இந்த இளைய சமூகம் எதிர்காலத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக விளங்கும் என்று எப்படி நம்ப முடியும். 

6 அதனால்தான் நம் நாடு இன்று இத்தனை அலங்கோலங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது . 

.

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. மக்கள் குழந்தை இல்லையென்றால்
      குமுறி தீர்க்கிறார்கள்

      உறவுகள் குழந்தையில்லா தம்பதிகளை
      சொல்லாலும், செயலாலும் காயப்படுத்துகிறார்கள்
      சிலர் கொன்றும் விடுகிறார்கள்

      சில புண்ணியவான்கள் கட்டிய மனைவியை
      தள்ளி வைத்தும் வைத்தும் விடுகிறார்கள்.கொடுமைபடுத்துகிறார்கள்

      ஆனால் குழந்தையை பெற்று சீராட்டி மூராண்டுகள் கொஞ்சிய பிறகு அந்த பாசம் எங்கேதான் போய்விடுகிறதோ தெரியவில்லை.

      குழந்தைகள் பள்ளிக்கு சென்று வீடு திரும்புவதற்குள் அவர்கள் படும் பாடுகளை நினைத்தால் அவர்களை இந்த உலகில் பிறக்க வைக்காமல் இருந்திருக்கலாம் என்றுதான் நினைக்க தோன்றுகிறது.

      பொறுப்பற்ற பெற்றோர்கள் வீட்டில்
      பொறுப்பற்ற ஆசிரியர்கள் பள்ளியில்
      தெருவில் பொறுப்பற்ற மக்கள்
      நாட்டில் பொறுப்பற்ற அரசுகள்

      நீக்கு