வெள்ளி, 16 நவம்பர், 2012

தமிழ் புலவர்களின் பெருமையை அறிந்துகொள்ளுவோம் (பகுதி-2)


தமிழ் புலவர்களின் பெருமையை 
அறிந்துகொள்ளுவோம் (பகுதி-2)

அவ்வை பாடிய பாடல்

கூரியவாளால் குறைபட்ட கூன்பலா 
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய்ச் - சீரிய 
வண்டுபோல் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப் 
பண்டு போல் நிற்கப் பணி.

இப்பாடலைப் பாடியவுடன் வெட்டிக்கிடந்த கட்டைகள்
ஒன்றுடன் ஒன்று ஒட்டி மரமாய் வேரூன்றி
நின்று பழத்துடன் விளங்கியது.

இதனைக் கண்டு மகிழ்ந்த அந்தக் குறத்தி,
பரிசிலாகத் தன்னிடம் இருந்த
ஒரு படி தினைமாவை ஔவைக்குக் கொடுத்தாள்.

அதனைத் தம் தொங்குமூட்டையில் வைத்துக்கொண்டு
ஔவை அங்கிருந்து சோழனுடைய அரசவைக்கு வந்தார்.

அப்போது அவருடைய ஜோல்னாப்பையைக்
கண்ட சோழன் அதில் என்ன
இருக்கிறது என்று வினவினான்.

அதற்கு பதிலிறுக்கும்வண்ணம் ஔவை,

கூழைப் பலாத்தழைக்கப் பாடக் குறமகளும் 
மூழைக்குழக்கு தினைதந்தாள் - சோழாகேள் 
உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒரு கவிதை 
ஒப்பிக்கும் என்றனுளம்.

என்று பாடினார். 
  
பலாமாரம் தழைத்ததற்காக ஒரு குறத்தி
ஓர் உழக்குத் தினை மாவு தந்தாள்.

அந்தக் காலத்தில் பிரயாணம் செய்பவர்கள்
 தினைமா, சத்துமா போன்றவற்றைக்
கொண்டு செல்வது வழக்கம்.
இவற்றைத் தண்ணீர் விட்டுப்பிசைந்து நேரடியாக
உண்ணலாம்.
வேகவைக்கவேண்டிய அவசியமில்லை.

தினை என்னும் தானியம்
குறவர்கள் வாழும் குறிஞ்சி நிலத்தில்
தாராளமாகக் கிடைக்கும்.

குறமகளாகிய வள்ளி தினைப்புனம் காத்து ஆயலோட்டிக்கொண்டிருந்தபோதுதான்
முருகன் வேடனாக வந்து
காதலிக்க முயன்றார்.
((இன்னும் வரும்)

நன்றி கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதிhttp://www.visvacomplex.com/Auvai_Sings_For_Kuulz.html

2 கருத்துகள்:

 1. தினைமா, சத்துமா போன்றவற்றை இப்போது என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை...

  தொடர்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தினைமாவு தற்போது நகரத்தில் உள்ள அங்காடிகளில் கிடைக்கிறது
   வாங்கி பயன்படுத்துங்கள். உடலுக்கு மிகவும் நல்லது

   நீக்கு