திங்கள், 5 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன்(பென்சில் ஓவியங்கள்)


நானும் ஒரு ஓவியன்(பென்சில் ஓவியங்கள்)


பென்சிலை கொண்டு
அற்புதமான ஓவியங்களை
 படைக்கலாம்

charcoal என்னும்
கரியைக் கொண்டு அற்புதமான படைப்புகளை
மேல்நாட்டு ஓவியர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்

பென்சில் ஓவியத்தை நன்கு பயிற்சி பெற்ற
ஓவியர்கள் தீட்டினால்
அதில் உயிர் இருக்கும்.

வண்ணங்களே தேவையில்லை

என்னை போன்ற கத்துக்குட்டி
வரைந்த ஓவியமே நன்றாக இருக்கிறது
என்றால் ஒரு ஓவியக்கலை நிபுணர்
வரைந்தால் எப்படி இருக்கும்?

எனக்கு பென்சிலால் படங்கள்
வரைவது மிகவும் பிடித்தமான ஒன்று.
அதில்தான் முகபாவங்களை,shade களை
நன்றாக வெளிக்கொணரலாம்

ஆனால் அதற்க்கு பொறுமை வேண்டும்
பயிற்சி வேண்டும்
மேலும் நல்ல பென்சிலும் தேவைப்படும்.
இதற்காக பலவிதமான பென்சில்கள்,
காகிதங்கள் கிடைக்கின்றன.


என்னுடைய நண்பன் ஒருவன்
நடிகர் நாகேஷ் படத்தை தத்ரூபமாக
பென்சிலில் வரைந்திருந்தான்
அதை பார்த்ததும் நாமும் ஏன்
முயற்சி செய்யக்கூடாது என்று தோறியது.

நடிகர் திலகத்தின் படத்தை
பென்சிலில் வரைந்தேன்.

அந்த படம் இதோ

.


(improved through computer)

original(1976)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக