வெள்ளி, 16 நவம்பர், 2012

தமிழ் புலவர்களின் பெருமையை அறிந்துகொள்ளுவோம் (பகுதி-3)


தமிழ் புலவர்களின் பெருமையை 

அறிந்துகொள்ளுவோம் (பகுதி-3)


தமிழ் புலவர்களின் பெருமையை 
அறிந்துகொள்ளுவோம் (பகுதி-3)

கூழுக்கு பாடிய அவ்வை போல 
பொன்னுக்கு   பாடிய கம்பனை பற்றி
தெரிந்து கொள்வோம்  
                                    

சிலம்பி என்னும் தாசிக்குப் பாடல் பெறவேண்டும் 
என்று ஆசை. அதனால் கம்பரிடம் தன்னைப் 
பாடுமாறு கேட்டுக்கொண்டாள். 

அவரோ எக்கச்சக்கமாகப் பொன்கேட்டார். 
அவள் தன்னிடமிருந்த சொத்தையெல்லாம் 
விற்று கம்பரிடம் 
பொன்னைக் கொடுத்தா
ள்
ஆனால் அது அவர் கேட்ட
பொன்னில் பாதியே இருந்தது. 

ஆகவே கம்பர்,

தண்ணீரும் காவிரியே தார்வேந்தன் சோழனே 
மண்ணாவதும் சோழமண்டலமே......
என்று பாதிவெண்பாவை மட்டும் பாடிக்கொடுத்தார்
    
பொருளிழந்த சிலம்பி அதன் பின்னர் 
கடுமையான ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தாள். 

அப்போது ஔவை அங்கு வந்தார். 
அவருடைய பசிக்கு அவள்  கூழ் தந்து 
உபசரித்தாள்.
அந்த ஏழ்மையில் அவளிடம் இருந்தது 
அந்த கூழ் ஒன்றுதான் 
 
அவளைப் பற்றிய விபரங்களை 
ஔவை கேட்கவே, அவள் தன் கதையைச் 
சொன்னாள். 
ஔவை மீதிப்பாட்டையும் பாடிப் 
பூர்த்திசெய்து கொடுத்தார். 

.....................................................................-பெண்ணாவாள்
அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும் 
செம்பொற் சிலம்பே சிலம்பு. 


தண்ணீரில் சிறந்தது காவிரி; 
தார்வேந்தர்களில் சிறந்தவன் சோழமன்னன்; 
மண்வளத்தில் சிறந்தது சோழமண்டலமே 
என்று அவற்றைக் கம்பர் சிறப்பித்துப் பாடிவிட்டார். 

பெண்களில் சிறந்தவளாக சிலம்பியையும்
சிலம்புகளிற் சிறந்ததாக 
அவளுடைய தாமரை போன்ற தாள்களில் 
அவள அணியும் சிலம்பையும் 
சிறப்பித்து ஔவையார் பாடிவிட்டார்.

அந்தப் பாட்டைப் பாடிமுடித்த பின்னர் 
அதன் விளைவாகத் தன்னுடைய 
காலில் செம்மையான பொன்னால் ஆன 
சிலம்பு அணிந்துகொள்ளும் 
அளவுக்குச் சிலம்பி 
செல்வம் படைத்தவளானாள். 
இதனையொட்டி  'கம்பன் பொன்னுக்குப் பாடுவான்;  
ஔவை கூழுக்குப் பாடுவாள்' என்ற 
சொல்வழக்கு ஏற்பட்டது. (இன்னும் வரும்)

நன்றி கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதிhttp://www.visvacomplex.com/Auvai_Sings_For_Kuulz.html

2 கருத்துகள்: