வியாழன், 22 நவம்பர், 2012

கார்த்திகை தீப பெருவிழாகார்த்திகை தீப பெருவிழா உள்ளத்தில் ஒளி உண்டாயின் 
வாக்கில் ஒளி உண்டாகும் என்றான் பாரதி 

அடி முடி காண இயலா எம்பிரான் 
அண்ணாமலையில் ஜோதி சுடராய் நின்றான்

அதை குறிக்கும் வகையில் 
கார்த்திகை தீப பெருவிழா நடக்கிறது

ஊனினை உருக்கி 
உள்ளொளி பெருக்கினால்
நம் உள்ளத்தில் ஒளி வடிவாய் 
அவனை காணலாம்

ஊனினால் ஆகிய நம் உடலை 
உருக்க கிரிவலம்
உள்ளத்தை உருக்க 
அவன் திருவடிகளில் பக்தி

பக்தி என்றால் வழிபாடு அல்ல 
அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செய்வதுதான்
ஏனென்றால் அன்பே சிவம் 
அன்பும் அவனும் வேறு வேறல்ல என்றார் திருமூலர்.

அன்பாய் பழகி, அன்பாய் பேசி 
அன்பு வடிவான ஜோதி பெரும் சுடரை 
அறிந்து அதில் கலப்போமாக 

2 கருத்துகள்: