திங்கள், 5 நவம்பர், 2012

நானும் ஒரு ஓவியன் (தேர் சிற்பங்கள்)


நானும் ஒரு ஓவியன்
(தேர் சிற்பங்கள்)

அந்த கால தமிழர்கள் கலைகளை
 நன்கு கற்று தேர்ந்தவர்கள் போலும்.

அவர்களின் படைப்புகள்
இல்லாத இடமே கிடையாது.

வீட்டில் தொடங்கி வெளி உலகிலும்
அவர்களின் படைப்புகள் காலத்தை வென்று
 இன்றும் அவர்களின்
திறமையை பறை
சாற்றிகொண்டிருக்கின்றன

அவைகளில் ஒன்று கோயில் தேர் சிற்பங்கள்
 மரத்தில் அழகிய சிற்பங்களை
செதுக்குவதில் அவர்கள் தன்னிகரற்று விளங்கினர்.

ஆனால் அந்த கலை அழிந்தே போய்விட்டது.
எதோ ஒரு சிலரின் முயற்சியால் மட்டும்
அந்தக்கலை இன்னும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இன்னும் தமிழகத்தில் பாழடைந்த தேர்களின்
அடிப்பாகம் மட்டும் மக்களின் கவனக்குறைவால்
அப்படியே குட்டிசுவர்கள் போல் நிற்கின்றன

எதோ ஒரு சில ஊர்களில் மட்டும்
அவைகள் பழுதுபார்க்கப்பட்டு
தேரோட்டம் நடைபெறுகின்றன

நம்முடைய கலைசெல்வங்களை
பாதுகாத்து பராமரிக்க அரசு ஒரு தனி துறையே
அமைக்கலாம். ஆனால் யாருக்கும்
அதை பற்றியே அக்கறையில்லை.

சில விஷமிகள் தேரை நெருப்பு
இரையாக்கி விடுவதும் அவ்வப்போது
நடைபெறும் நிகழ்வுகளும் உண்டு.

அவ்வாறு ஒரு தேர் சிற்பத்தை நான்
ஏன் வரைந்து பார்த்தால் என்ன
என்று எனக்கு தோன்றியது.

பல ஆண்டுகளுக்கு முன் மதுராந்தகம்
ராமர் கோயில் தீக்கிரையானது.


பிறகு அந்த தேரை புதுப்பித்தார்கள்.
அதில் இராமாயண காட்சிகள்
 பல இடம் பெற்றிருந்தன
 அப்போது ஒரு தினசரியில் வெளியான படங்களில்
ஒன்றை தேர்ந்தெடுத்து பென்சில் ஓவியமாக வரைந்தேன்.

ராமாயணத்தில் ராமபிரான் சுக்ரீவனோடு நட்பு கொள்ளும் காட்சி
அதில் ஹனுமான் கை கூப்பி பணிவாக
நிற்கும் காட்சி அற்புதம்.

அந்த படம் இதோ.


2 கருத்துகள்: