தமிழ் புலவர்களின் பெருமையை
அறிந்துகொள்ளுவோம் (பகுதி-4)
ஒட்டக்கூத்தர்
'கம்பன் பொன்னுக்குப் பாடுவான்;
ஔவை கூழுக்குப் பாடுவாள்' என்ற
சொல்வழக்கு ஏற்பட்டது.
அதேபோல் அதைக் குறிக்கும்
இன்னொரு பழம்பாடலும் இருக்கிறது.
காசுக்குக் கம்பன், கருணைக்கு அருணகிரி,
ஆசுக்குக் காளமுகில் ஆவானே - தேசுபெறும்
ஊழுக்குக் கூத்தன், உவக்கப் புகழேந்தி,
கூழுக்கிங்கு அவ்வையெனக் கூறு.
இந்தத் தனிப்பாடலில் சில புலவர்களைப் பற்றி
மட்டுமே குறிப்பிட்டு பாடிய புலவர் பாடியிருக்கிறார்.
அவருடைய கருத்தில் அவர் கட்டிய
முடிவுகள். அல்லது அவர் வாழ்ந்த காலகட்டத்திலும்
அதற்கு முன்னரும் பொதுவாக நிலவிய
கருத்துக்களாகவும் இருக்கலாம்.
இந்தப் பாடல் எளிமையான பாடல்.
ஒட்டக்கூத்தர் தவறாகப் பாடுபவர்களை
அடைத்துவைத்து, ஒரு குறிப்பிட்ட
எண்ணிக்கை சேர்ந்தபின்னர் இரண்டிரண்டு பேராக
அவர்களின் குடுமிகளை
ஒன்றாக முடிந்து, அவர்களின் தலைகளை
ஒரே வீசில் வெட்டி காளிக்குப் பலி
கொடுத்தாராம்.
அதனால்தான் ஊழுக்கு - விதிக்கு
கூத்தன் என்று பாடியுள்ளார்.
விதி முடிந்தவன்தான் கூத்தனிடம்
போய் மாட்டிக்கொள்வான் என்ற பொருள்.
குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டியன் இல்லை என்று
இன்னொரு தனிப்பாடலில்
ஒட்டக்கூத்தரைப் பற்றின
இவ்வாறான கருத்து காணப்படும்.
மேகத்தை முகில் எனவும் சொல்லலாம்.
ஆகவே காளமேகத்தைக் காளமுகில்
என்கிறார்.
நன்றி கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதிhttp://www.visvacomplex.com/Auvai_Sings_For_Kuulz.htm
நல்ல விளக்கம்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குநன்றிDD
நீக்கு