வியாழன், 15 நவம்பர், 2012

தமிழ் புலவர்களின் பெருமையை அறிந்து கொள்வோம்


தமிழ் புலவர்களின் பெருமையை அறிந்து கொள்வோம் 
அவ்வையார் 


தமிழ் நாட்டு புலவர்கள் அவ்வையாரை 
தெரியாதவர்கள் இருக்கமுடியாது.

அப்படி தெரியாதவர்கள் என்றால் 
அவர்கள் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதில் 
எந்த பயனும் இல்லை. 

அப்படிப்பட்ட அவ்வையாரின் வாழ்க்கையில்
 பல சுவையான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. 
பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. 

பொதுவாக புலவர்கள் வள்ளல்களிடமோ 
அல்லது அரசர்களிடமோ சென்றுபாடி
 பரிசுகளை பெற்று 
வருவது வழக்கம்

அவ்வை ஒரு பெண் அளித்த கூழுக்காக 
பாடிய சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளதை 
அவர் பாடிய ஒரு பாட்டால் அறிந்து கொள்ளலாம். 

அந்த செய்தி இதோ. 

ஔவையுடைய சரிதத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


ஒரு காட்டின் ஓரத்தில் ஒரு குறவன் தன்னுடைய இரண்டு தாரங்களுடன்
வாழ்ந்துவந்தான். இருவருக்குமே குழந்தைகள் பிறக்கவில்லை. 

குறவனுக்குப் பெரிய குறத்தியின்மீது  பிரியம் அதிகம்.

அவள்மேல் இளைய குறத்திக்குப் பொறாமை. 

மூத்தாள் ஒரு பலாமரத்தை உண்டாக்கி 
அதைப் பேணிப்பாதுகாத்து வந்தாள்.
அதை ஒரு குழந்தை போலவே பாதுகாத்துக்கொண்டிருந்தாள். 
    

ஒருநாள் அவள் வெளியில் சென்றபோது
இளையாள் அந்தப் பலாமரத்தை வெட்டிவிட்டாள். 


வீட்டிற்குத் திரும்பிவந்ததும் வெட்டிக்கிடக்கும் பலாவைக் 
கண்ட மூத்தாள் இடிந்துபோய்விட்டாள். 

அவளைத் தேற்றும்வழியறியாமல் குறவன் திணறினான்.
மூத்தாள் உணவு உறக்கம் இல்லாமல் 
கவலையில் இருந்தாள். 


அப்போது ஔவையார் அங்கு வந்தார். 
பசியோடு இருந்த அவரை அந்தக்
கவலையிலும் உபசரித்தனர். அந்த தம்பதியினர் 


நிலைமையை அறிந்த ஔவையார்
தம்முடைய கவித்துவத்தால் 
பலா மீண்டும் ஓர் இலையாகி, 

அதிலிருந்து கொம்பாகி வளர்ந்து, உயர்ந்த 
மரமாகி நின்று தழைத்து, இலைகிளையுடன் 

பிஞ்சு விட்டு, காய்காய்த்து, 
பழம் பழுத்து நிற்கும்படி செய்தார்.


இதோ அந்த பாடல்  

கூரியவாளால் குறைபட்ட கூன்பலா 
ஓரிலையாய்க் கொம்பாய் உயர்மரமாய்ச் - சீரிய 
வண்டுபோல் கொட்டை வளர்காயாய்ப் பின்பழமாய்ப் 
பண்டு போல் நிற்கப் பணி.


(இன்னும் வரும்)
நன்றி கடாரத் தமிழ்ப் பேரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி



2 கருத்துகள்: