புதன், 28 நவம்பர், 2012

விலங்குகளும் மனிதர்களும்


விலங்குகளும் மனிதர்களும்



















விலங்குகள் தினமும்
உறங்குகின்றன
விழிக்கின்றன,விழித்தவுடன்
இரை தேடுகின்றன

உடலில் சக்தி அதிகமானால் ஒன்றுக்கொன்று
 விளையாடுகின்றன அல்லது சண்டையிடுகின்றன
பிறகு உறங்குகின்றன

பருவமடைந்ததும் இன பெருக்கம் செய்கின்றன
விதி முடிந்ததும் மடிகின்றன.
உயிரைப் பற்றியோ அல்லது
அதன் இயக்கம் பற்றியோ அல்லது
உயிருக்குயிரான இறைவன் பற்றியோ
எந்த சிந்தனைகளும் இருப்பதாக
வெளியே காட்டிகொள்வதில்லை

அவைகளுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை
மட்டும் காலம் காலமாக ஆற்றி கொண்டு
வந்து கொண்டிருக்கின்றன

அவைகளுக்கு கடந்த காலத்தை பற்றியோ
எதிர் காலத்தை பற்றியோ
எந்த சிந்தனைகளும் கிடையாது

கல்வி கற்கவோ, சொத்து சேர்க்கவோ
அல்லது புகழ்,பணம்,
இவற்றை தேடி அலைவதில்லை.

மரணத்தை கண்டு பயம் கொள்வதில்லை.
மரணம் வந்தால் மெளனமாக ஏற்றுகொள்கின்றன
அல்லது போராடி அடங்குகின்றன.

அவைகளுக்கு பகுத்தறிவு இல்லை
என்று மனிதர்கள் சொல்லுகிறார்கள்
தங்களுக்கு பகுத்தறிவு
இருப்பதாக பீற்றிகொள்ளும் மனிதர்கள்.

பகுத்தறிவு உள்ளதாக வார்த்தைக்கு
வார்த்தை பீற்றிகொள்ளும் மனிதன்
நடந்து கொள்ளும் விதம் பகுத்தறிவே
இல்லாத விலங்குகளை விட கேவலமாக .உள்ளது.

உற்று நோக்கின் அவன் விலங்குகள்
செய்யும் செயல்களைத்தான்
அவனும் தினமும் செய்து கொண்டிருக்கிறான்

தான் பகுத்தறிவு பெற்றவன் என்பதை
வெளிப்படுத்தும் வகையில்
எதுவும் செய்வதாக தெரியவில்லை

எப்படி என்று அவரவர்க்கே விளங்கும்

(இன்னும் வரும்)  

2 கருத்துகள்: