திங்கள், 24 செப்டம்பர், 2012

மனிதர்கள் என்ற போர்வையில் மாமிச பிண்டங்கள்


மனிதர்கள் என்ற போர்வையில் 
மாமிச பிண்டங்கள் 

மனிதன் உயிரற்ற கோள்களுக்கு கோடிக்கணக்கில் 
பணத்தை வீணடித்து கருவிகளை அனுப்புகிறான். 
உருப்படியாக ஒன்றும் காணவில்லை

பல கோடி கிலோமீட்டர்களுக்கு அப்பால் செய்திகளை 
அனுப்புகிறான்,பெறுகிறான்,ஆனால் தன் பக்கத்தில் இருக்கும் 
மனிதரிடம் அன்பாக  பேச அவன் கற்றுக்கொள்ளவில்லை 
பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திர்க்கப்பால் இருக்கும் 
நாட்டில் நடக்கும் விஷயங்களை இருக்கும் இடத்திலேயே 
தெரிந்து கொள்கிறான்.ஆனால்  தன் மனதில் என்ன இருக்கிறது 
தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று அவனுக்கு தெரியாது 

பிற உயிர்கள் அவனோடு அன்பாக பழகினாலும்
அவைகளிடம் அவனுக்கு இரக்கம் இல்லை அவைகளை
கொன்று தின்று தன் வயிற்றை  நிரப்புவதிலேயே 
குறியாக இருக்கிறான் தற்போது சக மனிதர்களையும்
காரணமின்றி கொன்று குவிப்பது அவன் பொழுதுபோக்காகிவிட்டது .   

கொடிய கொலைக் கருவிகளை ஒவ்வொரு நாளும் உற்பத்தி செய்து
தன் இனத்தின்மீதுமட்டும் ஏவாமல் மற்ற உயிர்கள் மீதும் ஏவி 
அவைகளை கொன்று குவித்து மகிழ்கின்றான். 

எறும்புகள் அற்ப உயிர்களன்று. 
அற்ப புத்தியுடைய மனிதர்கள்தான் அற்ப உயிர்கள் 

எறும்புகளிடம் மனிதர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய 
விஷயங்கள் ஏராளமாக உள்ளன. 

அவைகளிடையே உள்ள  கட்டுப்பாடு, 
சுறுசுறுப்பு,ஒழுங்குமுறை, போர்க்குணம், உதவும் குணம்,
சிந்திக்கும் திறன், கட்டுமான திறன் ,நிர்வாக திறன், 
அவைகள் தாங்கள் வாழுமிடங்களை தேர்ந்தெடுத்தல், வாழும் முறை, 
என அவைகளை பற்றிய பல தகவல்களை
 மனிதர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்

ஆனால் மனிதர்களுக்கு அதற்கெல்லாம் ஏது நேரம்?

நம் மீது ஏறினால் அவைகளை
இரக்கமின்றி  கொல்வதற்கும், 
நமது அஜாக்கிரதையினால். பொருட்களை 
சரியாமல் பொருட்களை மூடி வைக்காமல் வைத்துவிட்டு 
அதை மோப்பம் பிடித்து அதை நாடி வரும் ஆயிரக்கணக்கான 
எறும்புகளை எமனுலகிற்கு அனுப்பிவைப்பதற்கும்தான்
நேரம் சரியாக  இருக்கிறது. 

தன்னை போல் ஒரு சக மனிதன் அடிபட்டு சாலையில் 
கிடந்தால்கூட கண்டும் காணாமல் செல்வதும் 
எதற்க்கெடுத்தாலும் பழியை பிறர் மீது சுமத்திவிட்டு ,
எந்த பிரச்சினையிலும்  யாராவது நடவடிக்கை எடுக்கட்டும்,
எனக்கென்ன, என்று இருக்கும் மனிதர்களைப்போல் அல்லாது, 
ஒரு பூச்சி செத்து கிடந்தால் கூட  யாருடைய 
உத்தரவையும் எதிர்பார்க்காது உடனே ஆட்களை அனுப்பி 
அந்த பூச்சியை உடனே அப்புறபடுத்த நடவடிக்கை  
எடுக்கும் எறும்புகளின்   பண்பினை மனிதர்கள் 
அவசியம் கற்றுக்கொள்ளவேண்டும். 

தரையில்.சக்கரை போன்ற எந்த உணவு பண்டங்கள்
சிதறிகிடந்தாலும் உடனே அந்த இடத்திற்கு 
ஆயிரக்கணக்கான எறும்புகளை 
அனுப்பி அந்த இடத்தை சுத்தப்படுத்தும். 
அதன் பண்பு பாராட்டதக்கது 

கடமையை செய்யாது லஞ்சம் வாங்கிகொண்டு 
உரிமையை பற்றியே எப்போதும் சிந்தித்து போராட்டங்களில்
ஈடுபட்டு தங்கள் நேரத்தை வீணடித்துபோதாது என்று 
 மக்களின் நேரத்தையும் வீணடிக்கும் (வீ (நடிக்கும் )  
வீணர்கள் எறும்பிடம் பாடம் கற்றுகொள்ளவேண்டியது  அவசியம் 

தலைமை என்று ஏற்றுகொண்டவர்களின் 
உத்திரவிற்கு கீழ்பணிந்து முறையாக, சரியாக,
விரைவாக, பணிகளை செய்து முடிக்கும் மாண்புதனை
மனிதர்கள் எறும்புகளிடமிருந்து 
மனிதர்கள் முக்கியம் கற்றுக்கொள்ளவேண்டும். 

இன்னும் எத்தனையோ.மனித குலம் தன்னை 
சுற்றியுள்ளவற்றை ஆழ்ந்து கவனித்தால் 
கற்றுகொள்ளவேண்டிய விஷயங்கள் பல உள்ளன .

அவைகள் இந்த உலகத்தோடு ஒத்து வாழ்கின்றன.
அவைகளும் நன்றாக வாழ்கின்றன. இத்தனைக்கும் 
அவைகள் மிகவும் ஆபத்தான சூழலில் வாழ்ந்தும் 
அவைகள் அனைத்தையும் திறம்பட சமாளிக்க கற்று கொண்டுள்ளன.மனிதர்களைப்போல் 
அற்ப காரணங்களை காட்டி சோம்பி ,
சோர்ந்து உட்கார்ந்துவிடுவதில்லை  

தன்னை அவனியில் அனைத்து உயிரினங்களைக் 
காட்டிலும் உயர்ந்ததாக கருதிக்கொள்ளும் 
மனிதன் மட்டும் எதனுடனும் ஒத்து போவதுமில்லை 
ஒற்றுமையாய்  வாழுவதுமில்லை. அவனிடம்
ஒழுங்கும்  இல்லை ஒழுக்கமும் இல்லை 

பிறரை துன்புறுத்தி மகிழும் வக்கிர
புத்தியுடையவனாக மாறிவிட்டான். 
வரைமுறையற்ற செயல்களும் 
வன்முறைகளும், வன்கொடுமைகளும் 
இன்று அவன் வாழ்வின் அங்கமாகிவிட்டது

3 கருத்துகள்:

  1. நல்ல கருத்துக்கள்... - உண்மை கருத்துக்கள்... நான் என்ன எழுதி வைத்திருந்தேனோ, (வரும் பதிவில் ..draft-ல்) உங்கள் பதிவில் சிலவற்றை படித்தேன்... மிக்க நன்றி சார்...

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    DD மற்றும் RN sir

    பதிலளிநீக்கு