செவ்வாய், 4 செப்டம்பர், 2012

சுதந்திரம் யாருக்கு?

சுதந்திரம் யாருக்கு?

வெள்ளையர்கள் என்னும் கொள்ளையர்களிடமிருந்து 
தியாகிகள் தங்கள் உதிரத்தை சிந்தி பெற்ற அரசியல் சுதந்திரம் 
தந்திரமாக அரசியல் கொள்ளையர்கள் கையில் சென்று விட்டது. 

அவர்களே மேல் என்ற நிலைக்கு தள்ளி விட்டது 
நம்மை ஆளுபவர்களின் செயல்பாடுகள் 

இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவரும் சமம் என்று 
எழுத்தில்தான் உள்ளது. 

ஆனால் நடப்பது என்ன?

ஜாதி, மதம் என இரண்டு தொற்றுநோய் கிருமிகள் நம் நாட்டு மக்களை 
தொடர்ந்து தாக்கி அவர்களின் வாழ்வை நாசமாகி கொண்டு வருகின்றன 
பணம் படைத்தவன் கொழுத்து கொண்டே போகிறான்
சாதாரண குடி மகனோ நோயிலும், வறுமையில் புழுங்குகிறான்

அவனுக்கு கடந்தகாலமும் நன்றாக இல்லை .இன்றோ 
அவனுக்கு நிகழ்காலமும் இல்லை,எதிர்காலமும் இல்லை 

கேள்வி -இந்தியா வெள்ளையர்களிடம் சுதந்திரம் அடைந்த பின் என்ன நடந்தது ?
பதில்-  அது கொள்ளையர்களிடம் சிக்கி கொண்டது 

கேள்வி-இந்தியா  சுதந்திரம் அடையு முன் யாரால் ஆளப்பட்டது ?
பதில் - மன்னர்களாலும் ஜமீன்தார்களாலும்  ஆளப்பட்டது 
மன்னாராட்சி மக்களாட்சியாக மாற்றப்பட்டது 

மக்களாட்சி என்றால் என்ன?
மக்கள் தங்களில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சில பேரை தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர வைத்து அவர்கள் கொள்ளையடித்து கொள்ள பல ஆயிரம் கோடி ருபாய் செலவில் தேர்தல் என்னும் திருவிழா நடத்தி  லைசுன்ஸ் வழங்குவது 

ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள் கொண்ட அரசுகள் 
கட்டுப்பாடு,உரிமம்,சட்டங்கள் லஞ்சம்,வரிகள்  என பலவகையில் மக்களை கொடுமைபடுத்தி அவர்களை வாழ வழியில்லாமல் ஓட்டாண்டி ஆக்குவது 

ஓட்டாண்டி போல் வேஷம் போட்டுகொண்டு நடிக்கும் போலி சாமியார்களையும்,மத போதகர்களையும் மக்களை ஏமாற்றி கொழுக்க அனுமதிப்பது.
அடிப்படை கல்வி உரிமை என சட்டம் இயற்றிவிட்டு கோடிகணக்கான ரூபாய்களை ஒதுக்கிவிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளை, பள்ளி சென்று படிக்க பள்ளிகூடங்களை கட்டாமல் ,ஆசிரியர்களை நியமிக்காமல் ,மொழி,ஜாதி, இன அடிப்படையில் பிரித்து மக்களை ஏமாற்றுவது 

இந்தியா சுதந்திரம் அடையுமுன் மக்கள் அடிமைகளாக இருந்தார்கள் 
இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கொத்தடிமைகளாக ஆக்கப்படுவிட்டார்கள்

இந்தியா சுதந்திரம் அடையும் முன் ஒரு சில மன்னர்களே இருந்தனர்
இன்றோ எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்

அரசுகள் பெரும்பாலானோரை குடி மன்னர்கள் ஆக்கிவிட்டது 
தமிழ் நாட்டிலோ எக்கச்சக்கமான மோசடி மன்னர்கள் தோன்றிவிட்டார்கள்

(e)எல்லோரையும் (mu)முட்டாளாக்கிய கோழிகள் ஊழல் ,நிதி நிறுவன மோசடிகள், அரசு திட்டங்களில் ஒதுக்கப்படும் நிதி மோசடிகள், பல ஆயிரம் வரி ஏய்ப்பு  மோசடிகள் ,மதத்தின் பெயரால் மோசடிகள் என ஒவ்வொரு நாளும் ஏமாந்து  கோடிகணக்கான ரூபாய்களை இழந்து அழுது புலம்பும் மக்கள் தமிழ் நாட்டில் பெருகி விட்டனர்

அகில இந்திய ரீதியிலோ மத்தியில் ஆளும் அரசுகள் லட்சம் கோடி ரூபாய்களை ஒவ்வொரு துறையிலும் கபளீகரம் செய்துகொண்டு மக்களவையில் குழாயடி சண்டை போட்டுகொண்டு மக்களை ஏமாற்றிகொண்டிருக்கிரார்கள்.
எந்த தீவிரவாதி வேண்டுமானாலும் இந்தியாவிற்குள் வரலாம், குண்டு வைக்கலாம் மக்களை கொள்ளலாம். அவர்களை எந்த அரசும் தண்டிக்காது.மாறாக அவர்களுக்கு ராஜ உபசாரம் கொடுக்கிறது. இறந்துபோன மக்களின் குடும்பத்திற்கு சில லட்சங்களை வீசி விட்டு கடமையை முடித்து கொள்ளுகிறது
ஆனால் தன் வாழ்வாதாரமான விவசாய நிலத்தை அபகரிக்கும் அரசுகளும்,தொழிலதிபர்கள்  மோசடி தரகர்கள்  ஆகியோரை அவர்கள் எதிர்த்து போராடினால் அவர்களுக்கு கிடைப்பது அடிதடியும், சிறைவாசமும், மரணமும்தான்

இன்று இந்தியா முழுவதும் எங்கு பார்த்தாலும் கொள்ளை சம்பவங்கள், கொலை சம்பவங்கள், சுரண்டல், சமூக விரோத கும்பல்களின் அத்துமீறல்கள், ஊழல்கள், லஞ்சம், சட்ட மீறல்கள், சுகாதார  சீர்கேடுகள், சுற்று சூழல் பாதிப்பு, ஏழை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்,உண்ண  உணவு, உறைவிடம் கிடைக்காத நிலை பெண்கள்,குழந்தைகள் மீது கட்டவிழ்த்துவிடப்படும், வன்முறைகள் என இன்று நம் நாட்டு மக்கள் பெரும்துன்பத்தில் ஆழ்ந்துள்ளார்கள் 

இந்த நிலைக்கு யார் காரணம்?

நாட்டை ஆளும் பொறுப்பை நல்லவர்களிடம் ஒப்படைக்காமல் நயவஞ்சகர்களிடம் ஒப்படைத்ததுதான் 

ஆளுபவர்களிடமும் ஒழுக்கம் இல்லை 
மக்களிடமும் ஒழுங்கும் இல்லை 
இந்நிலை நீடித்தால் விடிவு காலம் பிறப்பது கேள்விக்குறியே 

இந்நிலை என்று  மாறும்?எப்படி மாறும்? யாயறிவார். 

1 கருத்து:

  1. நல்ல கேள்வி-பதில்...

    "உங்கள் தளம் தானா...?" என்று சந்தேகம் வந்து விட்டது... நல்லா இருக்கு சார்...

    பதிலளிநீக்கு