அந்த நாள் நினைவிலே வந்ததே(பகுதி-15)
நம்முடைய முன்னோர்களின்
அறிவும் ,பெருந்தன்மையும்
பொதுநல நோக்கும் ,
நாம் என்றென்றும் நினைவில்
வைத்து போற்றத்தக்கவை .
வைத்து போற்றத்தக்கவை .
வாழ்வில் நடைமுறையில்
கொண்டுவரத் தக்கவை
நம் முன்னோர்கள் நாம் நன்றாக
வாழ அமைத்து கொடுத்த
வசதிகள் அனைத்தையும்
அந்நிய படையெடுப்பால் நம் நாட்டை
சூறையாடிய தீயவர்களால்
பெரும்பகுதியை இழந்துவிட்டோம்.
பெரும்பகுதி தரை மட்டமாக
அழிக்கப்பட்டன.
அழிக்கப்பட்டன.
விலை மதிப்பற்ற சொத்துக்கள்
மற்றும் கலை பொக்கிஷங்கள்
கொள்ளையடிக்கப்பட்டன
மற்றும் கலை பொக்கிஷங்கள்
கொள்ளையடிக்கப்பட்டன
மக்கள் அவரவர் வாழ்விடங்களை
விட்டு விரட்டப்பட்டனர்,அல்லது கொல்லப்பட்டனர்.
நமது பண்பாட்டுக் கருவூலங்கள்
சின்னாபின்னாமாக்கப்பட்டன
சின்னாபின்னாமாக்கப்பட்டன
இயற்கையோடு இயற்கையாக இயைந்து
இசைபட வாழ்ந்து வந்த நம் மக்கள்
தங்கள் எண்ணத்திற்கு மாறாக
கலாசாரத்திற்கு மாறாக ,செயற்கையான
வாழ்வு வாழும் நிலைமைக்கு தள்ளப்பட்டோம்.
நாம் நம்முடைய அடையாளங்களை
இழந்து விட்டமையால் நம் மீது திணிக்கப்பட்ட
போலி அடையாளங்களை நம்முடைய
இழந்து விட்டமையால் நம் மீது திணிக்கப்பட்ட
போலி அடையாளங்களை நம்முடைய
அடையாளங்களாக நினைத்துக்கொண்டு
இன்றைய தலைமுறை வாழ்ந்துகொண்டிருக்கிறது
வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்வதை விட
வழுக்கி விழுந்துகொண்டிருக்கிறது என்றே சொல்லலாம்.
ஆனால் இன்று நம்மோடு வாழ்பவர்களில்
சிலர் வசதியாக வாழ்ந்துகொண்டிருக்கலாம்
ஆனால் பெரும்பகுதி மக்கள் பலவிதமான துன்பங்களை
அனுபவித்து கொண்டு வருகிறார்கள் என்பதுதான் உண்மை
பலர் தங்கள் கலாசாரத்தை பற்றிய அடிப்படை
அறிவு கூட இல்லாமலிருப்பது
வருந்துதற்க்குரியது
நாட்டில் நமக்கு ஒவ்வாத கலாச்சாரங்கள்
நாகரீகம் என்ற ,போர்வையில், மத சார்பின்மை என்ற
போர்வையில் அரசியல்வாதிகளாலும் ,மத கோட்பாடுகள்
என்ற போர்வையில் மத வெறியர்களாலும்
மக்கள் மீது திணிக்கப்பட்டு ,அதனால் ஏற்படும்
மோதல்கள் மூலம் நாட்டை துண்டாடிகொண்டிருக்கிறார்கள் .
இன்று நாட்டில் எந்த பிரிவினரும்
அமைதியாக வாழ முடிய வில்லை
அமைதியாக வாழ முடிய வில்லை
எவர் மூலம் , எந்த வதந்தி மூலம் எந்த பிரச்சினை
எந்த நேரத்தில் வெடிக்கும் என்ற சூழ்நிலையில்
மக்கள் ஒரு பக்கம் அச்சத்துடனும் ,பாதுகாப்பற்ற
உணர்வுடனும் மன நோயாளிகளாக வலம் வருகின்றனர்.
உணர்ச்சிகளுக்கும் ,கவர்ச்சிகளுக்கும் எளிதில்
மக்கள் அடிமையாகி தங்கள் சிந்திக்கும் திறனை
இழந்த நிலையில் வன்முறையில் ஈடுபடுகின்றனர். .
ஆனால் அக்காலத்தில் இது போன்ற
மோசமான நிலைமை இல்லை.
(இன்னும் வரும்)
அனைத்தும் நிஜம் தான்.
பதிலளிநீக்குவேதனையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
நன்றி திரு Pattabi Raman
நன்றி திரு RN அவர்களே
நீக்குஎன்ன செய்வது?
நினைவுகள்தான்
நமக்குள் இருந்துகொண்டு
நம்மை எப்போது
பாதித்துக்கொண்டிருக்கின்றன
மனம் கடந்த கால நினைவுகளுடன்
நிகழ்கால நிகழ்வுகளை ஒப்பிட்டு பார்க்கும்போது
சில இன்பத்தை தருகின்றன.பல வேதனைதருகின்றன.
எல்லாம் மனம் இருக்கும்வரை தான்.
மனமிறந்தால் என்றும் இன்பந்தான்.
இன்பமும் துன்பமும் கடந்த ஆனந்த
நிலையை அடையலாம்
அந்த நிலையை அடைவது மிக கடினம்
பல உண்மைகள்... நன்றி ஐயா...
பதிலளிநீக்குநான்றாக - நன்றாக
கொண்டிருக்கிரார்கள் - கொண்டிருக்கிறார்கள்
வருந்துதற்க்குரியது - வருந்துதற்குரியது
உணர்சிகளுக்கும் -உணர்ச்சிகளுக்கும்
Google Translate செய்யும் போது எனக்கும் இப்படித்தான் வரும்...
தவறாக இருந்தால் மன்னிக்கவும்...
பதிலளிநீக்குதவறை சுட்டி காட்டியதற்கு நன்றி
நான் முறையாக தமிழ்
இலக்கணம் கற்றவனல்லன்
ஆனால் தமிழ் மீது ஆர்வம் நிறைய உண்டு.
நிறைய நூல்களை படித்திருக்கிறேன்.
அவைகளை உருப்போட தெரியாது.
ஆனால் அந்த நூலின் நோக்கத்தை மட்டும்
மனதில் பதித்துக் கொள்ளுவேன். .
பிழையில்லாமல் தமிழ் கற்றுக்கொள்ள
விருப்பம் நிறையவே உண்டு.
ஆனால் ஆசை இருக்கு தாசில் பண்ண
ஆனால் அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க என்பார்கள் அதைபோல்தான் என் நிலைமையும்.
எனக்கு நேரமும் இல்லை,நாட்டமும் இல்லை.
தமிழறிஞர்கள் போல் எனக்கு தெளிவாக பேச
கோர்வையாக எழத தெரியாது.
அவ்வப்போது என் மனதில் ஊற்றெடுக்கும்
எண்ணங்களை வலை தளத்தில் தெளிக்கிறேன்.
அவ்வளவுதான்.
ஏனென்றால் கற்றது கைமண்ணளவு.
கல்லாதது எல்லையற்றது.
எவ்வளவு கற்றாலும் அது முழுமையாகாது
என்று எனக்கு தெரியும்.
அதனால்தான் எந்த விஷயத்திலும்
ஒரு அளவிற்கு மேல் பயணம் செய்யமாட்டேன்.
அவ்வாறு செய்தால் நம்முடைய பயணம்
ஒரு இடத்திலேயே நின்றுவிடும்.என்பது என் எண்ணம்
மனதில் உள்ள எண்ணங்களை ,
என் அனுபவங்களை,என் பார்வையில்
நான் உணர்ந்துகொண்டதை.
அப்படியே வெளிப்படுத்துகிறேன்
அவை சிலருடன் ஒத்து போகலாம்
பலருக்கு மாற்று கருத்து இருக்கலாம்..
அவர்களோடு போராடும் எண்ணம் எனக்கு கிடையாது
அது வீண் வேலை. அது நம்முடைய சக்தியை வீணாக்கிவிடும்.
தவறை சுட்டி காட்டுபவர் மீது கோபம்
கொள்ளுமளவிற்கு நான் தலைக்கனம் பிடித்தவனும் அல்லன்.
தவறுகளை சுட்டி காட்டுங்கள்.
சரி செய்துகொள்கிறேன்.
நன்றி DD அவர்களே.
வருகைக்கும் கருத்துக்கும்
பதிலளிநீக்குநன்றி திரு RN அவர்களே