நதிகளா -இல்லை
யாரும் கேட்க நாதியற்று
போய் விட்ட நங்கைகளா?
நதிகளை பெண் தெய்வங்களாக
வழிபடும் சமூகம் இந்து சமூகம்
தினமும் காலையில் குளிக்கும்போது
நதிகளின்பெயரை சொல்லி
குளியலை தொடங்குவோர் பல பேர்
ஏனென்றால் நதிகள் நம்முடைய
பாவங்களை ஏற்று
பாவங்களை ஏற்று
நம்மை பரி சுத்தர்களாக ஆக்குகின்றன
என்று சாத்திரங்கள் சொல்லுகின்றன
சாத்திரங்கள் உண்மையோ அல்லது
பொய்யோ என்பது வேறு விஷயம்
அது அவரவர்களின் நம்பிக்கையை பொறுத்தது
அதுஆத்திகன் குளித்தாலும் நாத்திகன் குளித்தாலும்
அவன் உடம்பில் உள்ள அழுக்கை நீக்குகிறது
ஆத்திகனின் நம்பிக்கையை
நாத்திகன் கேலி செய்தால்
ஆத்திகர்கள் அவன் மேல் பாய்கிறார்கள்.
ஆனால் உண்மையில் ஆத்திகர்களை விட
நாத்திகன் எவ்வளவோ மேல் சில விஷயங்களில் மட்டும்
உடனே நான் நாத்திகன் என்று
முடிவு எடுத்து விடாதீர்கள்.
முடிவு எடுத்து விடாதீர்கள்.
நாத்திகனாயினும் ஆத்திகன் ஆயினும்
வீடு கட்ட மணலை நதிகளிலிருந்து அனுமதி பெற்றோ
அல்லது அனுமதியில்லாமலோ
எடுத்துதான் பயன்படுத்தியாகவேண்டும்
எடுத்துதான் பயன்படுத்தியாகவேண்டும்
குடிநீருக்கும், விவசாயம் செய்வதற்கும்,
மீன் பிடிப்பதற்கும், போக்குவரத்துக்கும்,
மின்சாரம் உற்பத்தி செய்வதற்கும்
நதி நீர்தான் பயன்படுகிறது
நதி நீர்தான் பயன்படுகிறது
என்று அனைவரும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்
.
நிலைமை அப்படி இருந்தும் ஆபத்தான கழிவுகளை
வெளி விடும் பெரிய தொழிற்சாலைகளும், லட்சக்கணக்கான
மக்கள் வெளியிடும் அனைத்து கழிவு நீரும் நதியில்தான் விடப்படுகின்றன.
இந்துக்கள் ஒரு படி மேலாக சென்று எரிந்த,
எரிந்து கொண்டிருக்கும்
எரிந்து கொண்டிருக்கும்
பிணங்களை சொர்க்கம் போவதாக நினைத்துகொண்டு
ஆற்றில் விட்டு அதை அசிங்கப்படுத்துவதுடன்
அதன் புனித தன்மையையும் கெடுக்கிறார்கள்
இந்த அழகில் தினமும் கங்கா மாதாவிற்கு
விளக்கேற்றி பூஜைகள் வேறு செய்கிறார்கள்.
இவர்களின் பூஜையை கங்காமாதாவோ,
மற்ற நதிகளோ நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது என்பது சத்தியம்
இப்படி இவர்கள் செய்யும் துரோகம்தான்
இன்று மனிதர்களின் உடலில் ரோகங்களாக வெளிப்பட்டுகொண்டிருக்கிறது.
அதற்க்கு பரிகாரமாக சம்பாதித்த காசனைத்தையும்
லட்சக்கணக்காக சிலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில மருத்துவமனைகளே இருந்த நம் நாட்டில் கல்விக்கூடங்களை விட அதிக அளவில் காளான்கள் போல் சிறிதும் பெரிதுமாக முளைத்துவிட்டன மருத்துவமனைகள்
லட்சக்கணக்காக சிலவு செய்து கொண்டிருக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில மருத்துவமனைகளே இருந்த நம் நாட்டில் கல்விக்கூடங்களை விட அதிக அளவில் காளான்கள் போல் சிறிதும் பெரிதுமாக முளைத்துவிட்டன மருத்துவமனைகள்
இன்று எங்கு பார்த்தாலும் மருத்துவ மனைகள். மக்களை பிடுங்கி தின்கின்றன.
இதில் பாதிக்குமேல் போலி மருத்துவர்கள் , அவர்கள் பயன்படுத்துவது போலி மருந்துகள் .போலி உபகரணங்கள்
இவர்களை தவிர மாந்திரீகர்கள்,ஜோசியர்கள், சாமியாடிகள், குறி சொல்பவர்கள், பேய் விரட்டுபவர்கள் ,இப்ப்ராடானந்தாக்கள்,லாட்ஜில் ரூம் போட்டு பணம் பறிக்கும் வைத்தியர்கள் ,தொலைகாட்சி பேட்டி வைத்தியர்கள், என மக்களிடமிருந்துய் பணம் பறிக்கும் கும்பல்கள் ஏராளம்ஏராளம்.
மக்கள் அவர்களிடம் மாறி மாறி சென்று ஏமாறுவதில் தாராளம்
இனியாவது மக்கள் திருந்தாவிடில் அவர்கள் இந்த உலகில் வாழும் காலம் முழுவதும் நோயாளி களாகத்தான் இருப்பார்கள். இந்த உலகில் இன்பமான வாழ்க்கை அமையாது
மேலுலகில் சென்றாலும் நரகத்தின் கதவுகள்தான் அவர்களை வரவேற்கும்.
இதை உணர்ந்து இனிமேலாவது நதிகளை மாசு படுத்தாதீர்கள்.
சிறப்பான பகிர்வு ஐயா... நன்றி...
பதிலளிநீக்கு/// அது ஆத்திகன் குளித்தாலும் நாத்திகன் குளித்தாலும், அவன் உடம்பில் உள்ள அழுக்கை நீக்குகிறது ///
மனதில் உள்ள அழுக்கை...?
அழுக்கை நீக்காவிடில்
பதிலளிநீக்குஅது அழுக்காறு ஆகி
உள்ளும் புறமும்
நாற்றமடிக்க ஆரம்பித்துவிடும்
அப்புறம் என்ன அழிவுதான்.