அந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -6)
அந்த காலத்தில் இப்போது இருப்பதுபோல்
மருத்துவ வசதிகள் கிடையாது
வாழ்வில் அன்றாடம் வரும் சிறு நோய்களுக்கு
வீட்டில் உள்ள பெரியவர்களே
அதற்குரிய காரணங்களை கண்டறிந்து
வீட்டில் உள்ளபொருட்களை கொண்டே
மருந்துகள் தயார் செய்து குணப்படுத்தி விடுவார்கள்.
இல்லை பட்டினி போடுவார்கள்
அடுத்தநாள் உடல்நிலை சரியாகிவிடும்
மாததிற்கொருமுறை பேதி மருந்து எடுத்துக் கொள்ளுவார்கள்
அது குடலில் தேங்கியுள்ள அனைத்து கழிவுகள்,
கிருமிகள் அனைத்தையும் முழுவதுமாக வெளியேற்றிவிடும்.
உடல் மிகவும் லேசாக ஆகிவிடும்
உடல் மீண்டும் புத்துணர்ச்சி பெற கஷாயம் வைத்து குடிப்பார்கள்.
உடல் நல்ல துடிப்புடன் மீண்டும் இயங்கதொடங்கிவிடும்.
மருத்துவரிடம் செல்வது என்பது மிகவும் அரிது.
உணவு என்று எடுத்துகொண்டால் உடலிற்கு தேவையான
ஆறு சுவைகளும் கொண்ட உணவாக தான் இருக்கும்.
உள்ளம் நன்றாக இருக்க ஆறுமுக பெருமானை வணங்குவார்கள்
உடல் நலம் நன்றாக இருக்க புளிப்பு, இனிப்பு,துவர்ப்பு,கசப்பு, கார்ப்பு,காரம்
போன்ற சத்துக்கள் சரிவிகிதமாக உணவில் சேர்த்துக் கொள்ளுவார்கள்
உணவை உண்பதற்கு முன் நம் உடலில் உள்ள
ஆறு பிராண சக்திகளை வணங்கி உண்ணும் உணவை
அர்பணித்த பிறகுதான் உணவு உட்கொள்ளுவார்கள்.
சுகாதாரமற்ற உணவுகளை உண்பது கிடையாது
கூழானாலும் குளித்து குடி என்ற
பழமொழியை உண்மையாக கடைபிடித்தார்கள்.
ஆனால் இக்காலத்திலோ விழித்திருக்கும்
நேரம் முழுவதும் மக்கள் ஏதாவது ஒரு நோயினால்
அவதிபட்டுகொண்டிருக்கிரார்கள்.
யாரும் முழும் உடல்நலத்துடன் இல்லை
அவர்களாகவே மாத்திரைகளை கடையிலிருந்து வாங்கி முழுங்குகிறார்கள்
அப்போதும் நோய்கள் தீருவதில்லை. சிலர் மருத்துவரிடம் செல்லாமலேயே மருந்துகடைக்கார்களிடம் கேடடு மருந்துகளை
வண்ண வண்ண நிறங்களில் வாங்கி விழுங்குகிறார்கள்.
அவர்களின் பர்சில் உள்ள காசுதான் காலியாகிறதே தவிர
அப்போதும் நோய்கள் குணமாவதில்லை
பிறகு நோய் முற்றிபோய் மருத்துவரிடம் சென்றால்
அவர் நம்மிடம் எல்லா விவரங்களையும் கேட்டுவிட்டு
அவருக்கு யார் அதிகமாக கமிஷன் தருகிறாரோ அந்த மருந்து கடைக்கும்
பரிசோதனை கூடங்களுக்கும் சீட்டு எழுதி தருகிறார்.
அப்படியும் நோய் குணமாகாமல் அவரை விட மேற்படிப்பு படித்த
மருத்துவரிடம் செல்ல நேர்கிறது. இப்படியே ஒவ்வொரு மருத்துவ மனையாக
படியேறி இந்த நோய் இனி குணமாகாது என்ற
இடி போன்ற செய்தியைத்தான் கேட்க நேரிடும்
இருக்கும் நோய் குணமாகாமல் நாளுக்கு நாள்
புதிய நோய்கள் உடலில் உற்பத்தியாகி. பெருமளவில் பாடுபட்டு சேமித்த காசனைத்தையும் இழந்து மன வேதனையுடன் மக்கள் மரணத்தை அடைகிறார்கள் அல்லது நோயை ஏற்றுக்கொண்டு அதனுடன் வாழ்வை மாத்திரைகள், உணவு கட்டுப்பாட்டுடன் நீட்டித்துக்கொண்டு அல்லல்படுகிறார்கள்.
இதுதான் இன்றைய மக்களின் அவல நிலைமை.
அக்கால மனிதர்களுக்கு வயதானால் மட்டும் தீர்க்க முடியாத சில நோய்கள் வரும்
பணம் படைத்தவர்கள் மட்டும் நகர்ப்புற மருத்துவ மனைகளுக்கு சென்று சிகிச்சை செய்து கொள்வார்கள். ஒரு கால கட்டத்தில் சிகிச்சையை நிறுத்திவிட்டு தன் இருப்பிடத்திற்கு திரும்பி இறைவனை நினைத்துகொண்டு தங்கள் மரணத்தை எதிர் கொள்வார்கள்.
இக்காலம் போல் உயிர் போய்விட்டாலும் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து பணம் பறிக்கும் மருத்துவர்களும் அக்காலத்தில் கிடையாது. கடைசி வரை முயன்று பார்ப்போம் என்று லட்சக்கணக்கில் பணத்தை வீணடிக்கும் போக்கும் அவர்களிடம் இல்லை
ஏழைகள் கடுமையாக நோயுற்றவரை கயிற்று கட்டிலில் வைத்து பல கிலோமீட்டர்கள் நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தூக்கி செல்வார்கள். போகும்வழியிலேயே பல உயிர்கள் போய்விடும். சிகிச்சை பெற்று பிழைத்து வருபவர்கள் மிக அரிது.
அந்த காலத்தில் மக்கள் மனதில் நல்ல எண்ணங்கள், இறை நம்பிக்கை, பெரியவர்களிடம் மதிப்பு மரியாதை,ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் விரதங்கள் இருப்பது, போன்ற நல்ல குணங்கள் இருந்தமையால் எந்த நோயும் அவர்களை அண்டியதில்லை.
வீட்டில் ஒருவொருக்கொருவர் உதவி செய்துகொண்டு வாழ்ந்தமையால்
அவர்களுக்கு எவ்வளவு வேலைகள் இருந்தாலும் வேலைப்பளு அவர்களை பாதித்ததில்லை.
அவர்களுடைய மனதில் அணுவளவிற்க்கும் அகந்தை கிடையாது. வீட்டில் இருக்கும் வேலைகளை அனைவரும் பகிர்ந்துகொண்டு இன்பமாக வாழ்ந்தார்கள்.
அவ்வப்போது சிறு உரசல் புரசலாக சிறு சிறு மோதல்கள் ஏற்ப்பட்டாலும் அது அவர்களின் அன்பான உறவுகளை என்றும் பாதித்தது கிடையாது.
ஆனால் இன்று ஒவ்வொருவர் மனதிலும் கருவிலிருந்தே பிறரை கருவறுக்கும் குணம்
உற்பத்தியாகி கூவம் ஆறு சாக்கடையாய் மாறி நாற்றமடிப்பதுபோல் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர்.கொடூரமான பார்வையாலும், சுடு சொற்களாலும் தாக்கி கொள்கின்றனர்.
தான் மட்டும் சுகமாக வாழ வேண்டும் என்பதற்காக அதற்க்கு தடையாய் இருக்கும் அனைவரையும் வெறுக்கின்றனர்.
இவ்வுலகம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு அன்புடன் இருப்பதை பகிர்ந்துகொண்டு இன்பமாக வாழ்வதற்குத்தான் இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறது என்ற உணர்வே இவர்களுக்கு கிடையாது.
இந்நிலை இன்று உலகம் முழுவதும் பரவி சொர்க்கமாக இருக்க வேண்டிய மனித வாழ்வு நரகமாகிவிட்டது (இன்னும் வரும்)
.
அருமையான, பயனுள்ள செய்திகள் அடங்கிய பதிவு.
பதிலளிநீக்குஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
நன்றி திரு.RN அவர்களே
பதிலளிநீக்கு