ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

அணுக்கள் -அணு சக்தி-அணு உலை -அணு குண்டு

அணுக்கள் -அணு சக்தி-அணு உலை -அணு குண்டு 

இந்த உலகத்தில் உள்ள 
அனைத்து பொருட்களும்
அணுக்களின் சேர்க்கையே 
அவைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் 
ஒரு சக்தி அவைகளை 
ஒன்றோடொன்று ஈர்த்து ஒரு வடிவமாக ஆகிறது 
பிறகு அந்த வடிவம் அவைகள் ஒன்றாக 
இருக்கும் வரை ஆட்டம் போடுகிறது 

அவைகளில் ஈர்ப்பு வலுவிழக்கும்போது 
அவைகள் பிரிந்து மீண்டும் அணுக்கலாகிவிடுகின்றன 
இதே விதிதான் அனைத்து நிகழ்வுகளுக்கும் 

அது உயிரினங்களாக  இருக்கலாம்
,உலோகமாக இருக்கலாம்,
விண்மீன்களாக இருக்கலாம்
அல்லது கோல்களாக இருக்கலாம்
 ஏன் வெறும் பாறைகளாக இருக்கலாம்.
இல்லை, நீர், நெருப்பு காற்று நீர் 
அனைத்திற்கும் இதே விதிதான்.
 
ஒன்று சேரும்போது வடிவம்
 பிரியும்போது இருந்த வடிவம் அழிந்துவிடுகிறது  
இப்படியே அண்டத்தில் இது போன்ற செயல்கள் தொடர்ந்து
தொய்வின்றி நடந்து கொண்டிருக்கிறது. 

அதுபோலதான் மனதில் எண்ண அணுக்கள் 
ஒன்றிணைத்தால் செயல்கள்.
ஒன்றிணையாவிட்டால் செயலற்ற  தன்மை. 
அவ்வளவுதான்.

இந்த ரகசியத்தை  ஒரு விஞ்ஞானி கண்டுகொண்டான். 
அணுக்கள்  சேர்வதும் பிரிவதும் இயற்கையாக நடைபெறுவதை 
நாம் செயற்கையாக  செய்து பார்த்தால் என்ன என்று முயற்சி செய்தான்,
அணுவை பிளந்தான். பார்த்தால் ஒவ்வொரு அணுவிற்குள்ளும் 
அதி பயங்கர சக்தி ஒளிந்து கொண்டிருப்பதை தெரிந்துகொண்டான்.

கத்தி  கண்டிபிடிக்கப்பட்டது. அது சமையலறையில் 
காய்கறிகளை வெட்டி துண்டாக்க பயன்படுகிறது
கசாப்பு  கடைக்காரன் கையில் பிராணிகளின் 
தலையை வெட்ட பயன்படுகிறது
போர் வீரனின் கையில் தன் சக மனிதர்களையே  எதிரிகளாக 
கண்டு அவன் உயிரை வாங்க பயன்படுகிறது
மருத்துவர் கையில் நோயாளியின் உயிரை காக்க 
அறுவை சிகிச்சை செய்ய பயன்படுகிறது.
எனவே பொருள் ஒன்றுதான் 
ஆனால் அது அதை உபயோகிப்பவர்களின் 
மன நிலையை பொருத்து அதன் செயல்பாடு மாறுகிறது 

அதைபோல்தான் இந்த அணுவை பிளந்த செயலும்
அது அமரிக்கர்களின் கையில் கிடைத்தவுடன் 
லட்சக்கணக்கான அப்பாவி ஜப்பானிய மக்களை
கொன்று குவிக்க பயன்பட்டது 

அணு விஞ்ஞானிகள் அதை அணு உலை நிறுவி 
மின் சக்தி உற்பத்தி செய்கின்றனர்.
மருத்துவத்தில் புற்றுநோய் சிகிச்சைக்கும்  பயன்படுத்தப்படுகிறது
உணவுகலை  பாதுகாக்கும் தொழில் நுட்பத்திற்கு பயன்படுகிறது. 
ஆகையால் அணுவின் மீது அணுவளவும் குற்றம் இல்லை 
அதை பயன்படுத்துபவர்களின் நோக்கத்தை  பொறுத்தே 
அது குற்றமாக கருதப்படவேண்டும். 

இன்று அதன் பயன்பாட்டை விட அது வெளியிடும்
கதிரியக்கம் மற்றும் ஆபத்தான கழிவுகளை பற்றிதான் 
ஒரு சாரார் பெரிது படுத்தி போராடுகிறார்கள்.

மனிதனுக்கு அழிவு என்பது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று 
போராடுபவர்களுக்கும் அந்த போராட்டத்தை 
ஏற்காதவர்களுக்கும் தெரியும்.  
ஒரு ஆபத்திலிருந்து தப்பினால் அது போல் கணக்கற்ற  
ஆபத்துக்கள் நம்மை கொண்டு செல்ல காத்து கொண்டு 
 நம் முன்னேயும் பின்னேயும்  மேலயும் நாம் நிற்கும் 
நிலத்திலேயும்  இவ்வுலகில் இருக்கின்றன என்பதை 
அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் 

இந்த பிரச்சினைக்கு அனைவரும் 
கூடி பேசி விவாதித்து விரைவில் 
ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும்
.

எதை எடுத்தாலும் தள்ளி போட்டுக்கொண்டே போவது 
பிரச்சினைகளை மேலும் சிக்கலாக தான் 
உதவும் சிக்கலை தீர்க்க உதவாது.
நம்முடைய அண்டை மாநிலங்களால்
நமக்கு ஏற்ப்படும் நதி நீர் பங்கீடு பிரச்சினைகள் போல   

4 கருத்துகள்:

 1. ஆகையால் அணுவின் மீது அணுவளவும் குற்றம் இல்லை
  அதை பயன்படுத்துபவர்களின் நோக்கத்தை பொறுத்தே
  அது குற்றமாக கருதப்படவேண்டும்.
  அருமையான பதிவு. நன்றி.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. /// அதுபோலதான் மனதில் எண்ண அணுக்கள்
  ஒன்றிணைத்தால் செயல்கள்.
  ஒன்றிணையாவிட்டால் செயலற்ற தன்மை.
  அவ்வளவுதான். ///

  அருமை... நன்றி ஐயா...

  பதிலளிநீக்கு
 3. அணுவுக்குள் அணுவாய் இருப்பவன்தான் இறைவன்
  அவனன்றி அந்த அணுவும் அசையாது
  அசையாதிருக்கும்போது அவனை சிவம் என்றும்
  அவனை அசையவைக்கும் சக்திக்கு பார்வதி
  என்ற நாமமிட்டு அழைக்கின்றோம்.
  இந்த உண்மையை உணர்வதர்க்குதான் மனித பிறவி.
  அதை விடுத்து இழி பிறவிகள் போல் இந்த உலகில்
  கிடைத்தற்க்கரிய மனித பிறவியின் நோக்கத்தை
  உணராதிருக்கிறோம்.

  பதிலளிநீக்கு