வியாழன், 6 செப்டம்பர், 2012

தங்கநகை மோகம்

தங்கநகை மோகம் 

இன்று மக்கள் பலவிதமான மோகங்களுக்கு
ஆட்பட்டு சோகங்களை அள்ளி குவிக்கிகிரார்கள் 

பாடுபட்டு சேமித்த காசை அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 
ஏமாற்றுபேர்வழிகளின் ஆசை வார்த்தைகளை நம்பி 
மொத்தமாக அவர்களிடம் அளித்துவிட்டு மொத்த  காசையும்
இழந்து ஒப்பாரி வைத்துகொண்டு திரிகிறார்கள். 

அதேபோல்தான் வாக்காள பெருமக்களும் இலவசங்களுக்கு ஆசைப்பட்டு 
ஆப்பசைத்த குரங்குகள்போல் ஒவ்வொரு தேர்தலிலும் ஊழல் பேர்வழிகளுக்கு 
நாட்டை கொள்ளைஅடிக்க அதிகாரம் வழங்கிவிட்டு விலைவாசி உயர்வுகளாலும், அடக்கு முறைகளாலும் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள் 

தங்கம் அங்கத்திற்கு அழகு சேர்த்தாலும் இன்று அது ஒரு
உயிர் கொல்லி என்பதை மக்கள் வசதியாக மறந்துவிடுகிறார்கள்

பாடுபட்டு சேர்த்த பணத்தை கொண்டு நகைகள் வாங்கினாலும் அதை 
பகிரங்கமாக கழுத்தில் அணிந்துகொண்டு மகிழ்ச்சியாக செல்ல இயலவில்லை
எந்த நேரத்தில் எந்த சங்கிலிகருப்பன் கழுத்தில் உள்ள சங்கிலியை அறுத்து செல்வான் என்று யாருக்கும் தெரியாது.

வீட்டில் வயதான் முதியவர்கள் தங்க சங்கிலியை அணிந்து  காட்சி தந்தால் அவர் உயிர் எப்போது யாரால் எந்த ரூபத்தில் வந்து பறிக்கப்படும் என்று யாருக்கும் தெரியாது. 

தங்கநகை அணித்து குழந்தைகள் பள்ளிக்கோ அல்லது வெளியிலோ சென்றால் அவர்கள் யாரால் கடத்த படுவார்கள் அல்லது  கடத்தி சென்று கொல்லப்படுவார்கள் என்று யாருக்கும் தெரியாது  

நகையை வாங்கி வந்து வீட்டில் லாக்கரில் வைத்தால் அன்றே அது கொள்ளை போவது நிச்சயம். வீடு பூட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் மனிதர்கள் இருக்கும்போதே திருடுவதில் வல்லவர்கள் தமிழ் நாட்டில் உண்டு. எதிர்த்தவர்களை கொலை செய்யவும் தயங்காத அஞ்சா நெஞ்சர்களும் அந்த கூட்டத்தில் உண்டு.

நகை கடை நடத்தும் நிறுவனங்கள் மீண்டும் அந்த நகைகளை கடன் வழங்குகிறோம் என்று நகை வாங்கியவர்களிடம்.மீண்டும் பறித்துகொண்டு வட்டிக்கு  கடன்கொடுத்து கொழுக்கும் அண்டை மாநில நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் பெருகிவிட்டன

இதனால் மக்கள் கஷ்டப்பட்டு உழைத்தாலும் அதை கொண்டு மகிழ்ச்சியாக வாழாமல் பொருட்களை கடனுக்கு வாங்கியும், நகைகளை,பொருட்களை அடகு வைத்தும்  சாகும்வரை கடனாளியாகவே துன்பப்படுகின்றனர். 

இருப்பதைக்கொண்டு கடன் வாங்காமல் திருப்தியாக மகிழ்ச்சியாக வாழும் கலையை மக்கள் அறவே மறந்து விட்டனர். 

2 கருத்துகள்:

  1. இந்த மோகங்கள் எப்போது தீரும் என்று தெரியவில்லை...

    முடிவில் நீங்கள் சொன்னதே உண்மை சார்...

    /// திருப்தியாக மகிழ்ச்சியாக வாழும் கலையை மக்கள் அறவே மறந்து விட்டனர். ///

    பதிலளிநீக்கு
  2. மோகங்கள் எப்போது தீரும்?
    மோகத்தினால் விவேகத்தை இழந்து வேகமாக சென்று எதன் மீதாவது மோதி அடிபட்டு விழுந்து சோகத்தில் துடிக்கும்போதுதான் மோகம் போகும்.
    போகத்தின் மீது மோகம் கொண்டவர்களின் கதியும் அதே நிலைமைதான்.
    விழித்து கொண்டால் பிழைத்து கொள்ளலாம்.இல்லையேல் பள்ளத்தில் விழுந்து சேற்றில் சிக்கிய யானையின் கதிதான்

    பதிலளிநீக்கு