செவ்வாய், 18 செப்டம்பர், 2012

எதிர்ப்பவர்களும் எதிர்கொள்பவர்களும்

எதிர்ப்பவர்களும் 
எதிர்கொள்பவர்களும்


இந்த உலகத்தில் இரண்டு பிரிவினர்கள் இருக்கிறார்கள்
ஒரு பிரிவினர் எதை சொன்னாலும் 
அது சரியோ அல்லது தவறோ என்று ஆராயாமல் எதிர்ப்பது  

ஒருசிலர் தவறென்று தெரிந்து கொண்டு அதை எதிர்ப்பது 

ஒரு சிலர் எந்த காரணமில்லாமல் 
எதிர்ப்பதையே தங்கள்
கொள்கையாக கொள்வது 

சிலர் மட்டும் நேருக்கு நேர் எதிர்க்க மாட்டார்கள் 
அப்போது ஆமாம் போட்டுவிட்டு மறைமுகமாக 
அவர்கள் வேலையை காட்டுவார்கள். 

ஒரு சிலர் மட்டும் எந்த பிரச்சினையும் 
தைரியமாக எதிர் கொள்ளுவார்கள். 

எல்லாவற்றையும் காரணமின்றி எதிர்ப்பவன் 
எந்த காலத்திலும் வாழ்வில் முன்னேற முடியாது. 

அவன் எப்போதும் பிறர் மீது குறை கூறியே 
தன்னுடைய குறைகளை மறைக்க முயன்று 
தானே சென்று படு குழியில் வீழ்வான். 

பிறரிடம் குறைகளை மட்டுமே எப்போதும் காண்பவன்
அனைவராலும் வெறுக்க படுகிறான்.

பிறரின் குறைகளை பெரிது படுத்தாது 
அவர்களின் நிறைகளை
மட்டும் பாராட்டி மற்றவர்களை 
ஊக்கப்படுத்துபவன்  
சிறந்த வெற்றிகரமான 
நிர்வாகியாகிறான்.
 
பிரச்சினைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்பவன் 
அனுபவங்களை பெறுகிறான். அனுபவங்கள் 
அவனுக்கு நம்பிக்கையையும்
வாழ்வில் வெற்றியையும் தரும்.
 
நிறைவே காணும் மனம் வேண்டும்  
இறைவா அதை நீ தர வேண்டும் என்று 
பிரார்த்திப்போம். 


2 கருத்துகள்:

  1. விரும்பிப் படித்தேன்... உண்மையான கருத்துக்கள்... பாராட்டும் குணம் தான் மனிதனுக்கு முதல் குணமாக இருக்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  2. பாராட்டும் குணம் இளம் வயதிலேயே
    பெற்றோரால் குழந்தைகளுக்கு
    கற்பிக்கப்படவேண்டும்
    ஆனால் இன்று அது பெற்றோர்களிடமும் இல்லை
    மற்றோரிடமும் இல்லை
    எங்கும் போட்டி, பொறாமை, சுயநலம்
    அதனால்தான் இன்று உலகம்சுருங்கியதுபோல்
    உள்ளமும் சுருங்கிவிட்டது

    பதிலளிநீக்கு