வியாழன், 20 செப்டம்பர், 2012

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

மூளையும் களிமண்ணும் 

மூளைக்கும் களிமண்ணுக்கும்
தொடர்பு இருக்கிறதா?
இருக்கிறது போல்தான் தெரிகிறது

ஒரு ஆசிரியர் தன் மாணவனை தான் போதித்ததை 
புரிந்து கொள்ளாமல் அவர் கேட்ட கேள்விக்கு பதில் தராமல்
நின்று கொண்டிருந்தால் "என்ன உன் மண்டையில் 
களிமண்ணா இருக்கிறது ? என்று கேட்கிறார்

உண்மையில்  மாணவன் புரிந்து கொள்ளும் 
அளவிற்கு தெளிவாக போதிக்காதது ஆசிரியனின் 
தவறே அன்றி மாணவனின் தவறு அல்ல.
ஒவ்வொரு மாணவனின் அறிந்துகொள்ளும் 
புரிந்து கொள்ளும் அறிவு வெவ்வேறு நிலைகளில் இருக்கும் 
என்பதை புரிந்து கொள்ளாத அந்த ஆசிரியரின் 
போதனயில்தான் குறைபாடு உள்ளது என்பது 
தெளிவாக சிந்திப்பார்க்கு விளங்கும் 

ஆசிரியர்கள் இலவசமாக ஒன்றும் கல்வி போதிப்பதில்லை.
அதை தொழிலாகத்தான் செய்கிறார்கள்.அதற்க்கு ஊதியம் பெறுகிறார்கள். 
எனவே அவர்களிடம் கல்விகற்க வரும் ஒவ்வொரு மாணவனையும்
அறிவுடையவனாக  மாற்றுவது அவர்கள் பொறுப்பு என்பதை மறுக்கமுடியாது. 
 .
ஆசிரியர் கூற்றுப்படி மாணவன் மண்டையில் களிமண் இருக்கிறது 
 களிமண் கெட்டியாக இருப்பதால் ஆசிரியர் புகட்டும் அறிவு 
அவன் மூளையில் புகவில்லை அது அவன் மூளைக்குள் சென்றிருந்தால் 
அவன் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு விடை அளித்திருப்பான். 

அதைபோல்தான் ஒரு மனிதன் தவறு செய்தால்
 மற்றவர்கள் அவனை பார்த்து "உனக்கு மூளை இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.
எல்லோருக்கும் மூளை இருக்கிறது அது சரிவர செயல்பட்டால் 
எல்லாம் சரியாக நடக்கிறது. அவனும் சரியாக நடக்கிறான்.
பல்வேறு காரணங்களினால் மூளை செயல்படாமல் போகும் போது
அவனால் இந்த உலகத்தில் சரியாக செயல்பட முடியவில்லை. 

இந்த குறைபாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்காமல்
பெரும்பாலான பெற்றோர்களும், ஆசிரியர்களும்,
மற்றவர்களும் அவர்களை கண்டவாறு திட்டி,துன்புறுத்தி,அவர்கள் 
மனம் நோகும்படி பேசி , இழித்து, பழித்து அவர்களின் மனதை சிதறடித்து 
அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப வர முடியாமல் செய்து
அவர்களை நிரந்தர மன நோயாளிகளாக ஆக்கி விடுகிறார்கள்
பலர் மனநல காப்பகத்திற்கு  சென்று சிகிச்சை பெற்று வந்தாலும் 
அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவர்கள் அம்மனிதர்களின் 
கடந்த கால நிகழ்வுகளை நினைவுபடுத்தியும், 
அவர்களை பல பேர் முன்னிலையில்
அவமானபடுத்தியும் தனிமைப்படுத்தியும். செய்து 
அவர்களை மீண்டும் மன நோயாளிகளாக்கிவிடுகிரார்கள்

சில புண்ணியவான்கள் அவர்களை வீட்டை விட்டே
விரட்டிவிடுகிறார்கள். இன்று ஒவ்வொரு நகரத்திலும் 
இது போன்று மன நிலை பாதிக்கப்பட்ட மனிதர்கள்.சுற்றி 
திரிந்துகொண்டிருக்கிறார்கள். அதில் குழந்தைகளும்,
பெண்களும் அடங்குவர் 
குழந்தைகளும், பெண்களும் இரக்கமற்ற அரக்க மனம் 
கொண்ட சமூக விரோதிகளிடம் சிக்கி துன்பப்பட்டுகொண்டிருக்கிரார்கள். 

அவர்கள் மனநிலை பாதிக்கபட்டு தான் யார், எங்கிருக்கிறோம், என்ன செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் சுற்றிகொண்டிருக்கிரார்கள். அவர்களை திருடர்கள் என்றும், தீவிரவாதிகள் என்றும்  குழந்தை கடத்துபவர்கள் என்றும் பொதுமக்கள் அவர்களை அடித்து துன்புறுத்துவதும் சிலநேரங்களில் கொன்று விடுவதும் அவ்வப்போது நடைபெறும் சம்பவம். 

சிறிய குழந்தையை பச்சை மண் என்பார்கள். பச்சை களிமண் எப்படி வேண்டுமானாலும் வளைந்து கொடுக்கும் அதில் ஈரம் இருக்கும்போதே அதை அழகிய சிலைகளாக வடிக்கலாம். அது உலர்ந்து போனாலும் மீண்டும் நீர் சேர்த்து அதை இளக வைத்து பயன்படுத்தலாம். ஆனால் அது நெருப்பில் சுடப்பட்டுவிட்டால் அதை ஒன்றும் செய்ய முடியாது.
அதுபோல் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களை ஒன்றும் செய்யமுடியாது  

அதைபோல்தான் குழந்தைகளும் நல்ல எண்ணகளோடும் நல்ல பண்புகளோடும் , ஒழுக்கத்தோடும் பெற்றோர்களால் வளர்க்கப்படவேண்டும். அதற்க்கு பெற்றோர்களும் ஒழுக்கமாக நேர்மையாக இருக்கவேண்டியது  அவசியம். இல்லையேல் குழந்தைகள் எதிர்காலம் மட்டுமல்ல அந்த குழந்தைகளின் பெற்றோர்களின் எதிர்காலமும் கேள்விக்குரியதாகிவிடும். 

நன்றாக வளர்க்கப்படாத குழந்தைகளால் ஒரு நாட்டின் 
எதிர்காலமும்  நாசமாகிபோய் விடும் என்பதை 
அனைவரும் உணரவேண்டும்.  

ஒரு மனிதனுக்கு எந்த நேரத்தில் என்ன நேரும் 
என்பதை யாரும் கணிக்கமுடியாது.
மனநோய் யாரை வேண்டுமானாலும் 
எப்போது வேண்டுமானாலும் மரணத்தை போல் எதிர்பாராது தாக்கலாம்.
மரணம் வந்துவிட்டால் நல்லது. பிரச்சினைகள் அப்போது முடிந்துவிடும்
ஆனால் . மனநோய் தாக்கப்பட்டால் மரணம்  வரும்வரை 
சொல்லொணா துன்பங்களை அனுபவிக்க வேண்டும்.
அது மரணத்தை  விட கொடியது.

எனவே மனிதர்களே மனநோய் பாதித்தவர்களுக்கு
முடிந்தால் உதவுங்கள் 
இல்லையேல் மெளனமாக இருங்கள்.
அவர்களை துன்புறுத்தாதீர்கள்.
துன்புறுத்தவும் விடாதீர்கள்.

ஏனென்றால் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது சத்தியம்
சத்தியத்திடம் இரக்கம்   எதிபார்க்கமுடியாது. 
அது  யாரை வேண்டுமானாலும் தண்டிக்கும் சர்வ வல்லமை உடையது 
என்பதை அனைவரும் மனதில் கொள்ளவேண்டும்  

1 கருத்து:

  1. நீங்கள் சொல்வது போல் குழந்தைகளிடமும், மற்றவர்களிடமும்...

    தன் மீது உள்ள தவறை அறிவதில்லை... பிறர் உண்மையிலே தெரிந்தோ, தெரியாமலோ, தவறு செய்தாலும், "அந்த நிலையில் நாம் இருந்தால் என்ன செய்திருப்போம்...?" என்றும் நினைப்பதில்லை....

    பதிலளிநீக்கு