புதன், 26 செப்டம்பர், 2012

அந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -7)


அந்த  நாள்  ஞாபகம்  வந்ததே (பகுதி -7)

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா 
என்று ஒரு கவிஞன் பாடினான் 
பாடியவன் ஒன்றும் செல்வ செழுப்பில் மிதந்துகொண்டு
வாழ்வில் அனைத்து வளங்களையும் அனுபவித்துக்கொண்டு 
பாடியவன் இல்லை. 
ஒவ்வொரு நாளும் ஏன்  ஒவ்வொரு கணமும் 
வறுமையில் வாடியபோதும் மனம் கலங்காமல்
வெள்ளையரிடமிருந்து  நாட்டின் விடுதலை வேண்டி 
பாடிய மஹாகவி பாரதிதான் அவன் என்று எத்தனை 
தமிழர்களுக்கு தெரியும்?
நாடு விடுதலை பெற வேண்டுமென்றால் மக்கள்
விழிப்புணர்வு அடைய வேண்டும் என்று எத்தனையோ
புரட்சி கருத்துக்களை சொன்னான் சிலவற்றை
செய்தும் காட்டினான்.

இப்போது இருப்பதுபோல் பலவிதமான
தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவும் இல்லாத
காலத்திலேயே பாரதியின் கருத்துக்கள்  நாடு முழுவதும் பரவின.  

நம் நாட்டில் இல்லாத வளங்கள் இல்லை 
நாம் நாட்டில் உலகில் உள்ள அனைத்து 
நாட்டு தட்ப வெட்பங்களும்  உள்ளன
அனைத்து விதமான பயிர்களும் 
இங்கு பயிரிடப்பட்டு வருகின்றன 
வற்றாத ஜீவ நதிகள் உள்ளன .
விரிந்து பரந்த கடல் வளம் உள்ளது 
உயர்ந்த மலைகள், காடுகள்,
 இயற்கை வளம்,பால் வளம் 
என இல்லாதது எதுவுமே கிடையாது.
கல்வி கூடங்கள் ஏராளம்,
கற்றறிந்த அறிஞர்கள் ஏராளம். ஏராளம்

மற்ற நாடுகளில் இல்லாத தொன்மையான, 
வற்றாத பண்பாட்டு சுரங்கம் 
நீதி நூல்கள், ஏராளம். தொன்மையான் கோயில்கள் 
என பெருமை கொண்ட
நம் பாரத பூமி ,பல நூற்றாண்டுகளாக 
அன்னியர் படையெடுப்பால் 
நம் கலாசாரம் அழிக்கப்பட்டு தற்ப்போது 
மீண்டும் உயிர் பெற்று வரும் வேளையில் 
சுயநல பிசாசுகள் நம் நாட்டை திட்டமிட்டு 
அழித்து வருவதுடன், இங்கிருக்கும் சிலர் 
மேலைநாட்டு தீய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு
நம் தொன்மையான பண்பட்ட காலாசாரத்தை 
சீரழிக்கும் வேலையில்  ஈடுபட்டு வருகின்றனர் 

நம் இளைய தலைமுறை அதற்க்கு சிவப்பு கம்பள 
வரவேற்ப்பு கொடுத்து வருகிறது. 

ஆனால் எவ்வளவு  இன்னல்கள் வந்திடினும் 
நம்முடைய ரத்தத்தில் நம்முடைய பண்பாடுகளும் 
வழிபாட்டு முறைகளும், இறை நம்பிக்கையும் 
நீறு பூத்த நெருப்பு போல்  என்றும் அழியாது. 

நமது தாய்க்குலமும்  வெளியே எவ்வளவு நாகரீகமான 
வாழ்க்கை நடத்தினாலும் நம்முடைய  கலாசாரத்தின் 
மாண்புகளை விடாமல் இன்றும் காப்பாற்றி
வருவது ஆறுதலளிக்கிறது (இன்னும் வரும்).

3 கருத்துகள்: