செவ்வாய், 11 செப்டம்பர், 2012

மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

மக்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்


அவர்களில் பெரும்பாலான மக்கள் 
சுயமாக சிந்திக்கும் ஆற்றலை 
அறவே மறந்துவிட்டார்கள் 
யார் எதை சொன்னாலும் 
அப்படியே நம்பிவிடுவது

ஒரு ஏமாற்றுக்காரன் ,அவனுக்கென்று எந்த சொத்துக்களோ 
அல்லது ஏதாவது வருவாய் ஈட்டும் தொழிலோ 
,ஏன் இருப்பதற்கு ஒரு இடம் கூட இல்லாதவனோ, 
ஊடகங்கள்  மூலம் பொய்களை பரப்பி 
பொய்யான கவர்ச்சியான வாக்குறுதிகளை அளிக்கிறான். 
உடனே அதை நம்பி ஒன்றுமே விசாரிக்காமல் 
விளக்கில் விழுந்து மாயும் விட்டில் பூச்சிகள் போல்
தங்களிடம் உள்ள அனைத்து காசையும் அவனிடம் 
ஒப்படைத்து விட்டு அவன் தருவதாக 
சொல்லிய காசை மனதில் நினைத்து 
மனக்கோட்டை கட்டதொடங்கி விடுகின்றனர். 
அவனிடம் எதுவும்  இல்லையே,
அவன் எப்படி தங்களுடைய மூலதனத்தை ரெட்டிப்பாக 
அல்லது பல மடங்கு அதிகரித்து  தருவான் 
என்று ஒருவரும் ஒரு கணம் கூட நினைத்து  பார்ப்பதில்லை
 
அந்த புரட்டனும் ஓரிரண்டு மாதங்களுக்கு
ஒழுங்காக காசை தருகிறான். பிறகு மொத்த
பணத்தையும் சுருட்டிக்கொண்டு இரவோடு 
இரவாக ஊரை விட்டு ஓடிவிடுகிறான். 
பிறகுதான் விழித்து கொள்கிறது 
மூளையில்லா முட்டாள் கூட்டம். 
காவல் துறை, நீதி துறை என்று 
அழுது புலம்பி திரியும் அவல காட்சிகள். 

தினந்தோறும் தமிழ் நாட்டில் அரங்கேறும் காட்சி இது.
ஒவ்வொரு நாளும் ஒரு புரட்டன்
வலை விரிக்கிறான் புதிய கண்டுபிடிப்புகளோடு.
அவன் விரித்த வலையில் சிறிய மீன்களும், 
பெரிய திமிங்கிலம்,சுறா போன்ற மீன்களும் சிக்குகின்றன
திரும்பவும் அதே கதைதான். 
அதே புலம்பல் ,ஒப்பாரி காட்சிகள். 

மக்கள் திருந்தவே மாட்டார்களா?ஏன் ?
அவர்கள் நேர்வழியில் காசு சம்பாதிக்கும் கலையில் நம்பிக்கை இல்லை
குறுக்கு வழியில் ,அரசை ஏமாற்றி, மற்றவர்களை ஏமாற்றி குறுகிய காலத்தில் பணக்காரகளாகி சொகுசாக வாழ் வேண்டும் என்று பேராசைதான் காரணம்

இதைபோல்தான் மக்களுடைய சோம்பேறித்தனத்தையும் , அறியாமையும் பயன்படுத்தி வீடு கட்டி தருகிறோம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருகிறோம், அரசு வேலை, வாங்கி  தருகிறோம், கோடிகணக்கில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருகிறோம், பரிகார பூஜை செய்கிறேன் என்று லட்சக்கணக்கில் பணம் கறக்கும் போலி சாமியார்கள், தீர்வே காணாத நோய்களை தீர்த்து விடுகிறேன் என்று தொலைகாட்சியில் தோன்றி பெட்டி அளிக்கும் போலி மருத்துவர்கள், என்று பலவிதமாக ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல்கள் தமிழ்நாடு  முழுவதும் தங்கள் கடைகளை விரித்து மக்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கின்றன.

மக்களும் ஏமாந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.
யாரும் திருந்துவதாக இல்லை. 
கண்ணால் காண்பதும் பொய்,காதால் கேட்பதும்  பொய், தீர விசாரிப்பதே மெய் என்ற பழமொழியில் மூன்றாவதான தீர விசாரிப்பதே மெய் என்ற மொழியை மக்கள் சிந்திக்காதாவரை நாட்டு கோழிகளும், ஈமு கோழிகளும் ,போலி சாமியார்களும் அவர்களை ஏமாற்றி கொழுத்து கொண்டு தமிழ்நாட்டில் வலம் வந்து கொண்டுதான் இருக்கும். 

2 கருத்துகள்:

 1. இதை சுயநலம் என்று சொல்வதா...? அறியாமை என்பதா...? பேராசை ஆட்டுவிக்கிறதா...? etc., etc.,.......

  ஒண்ணும் புரியலை சார்...

  பதிலளிநீக்கு
 2. ஆசை அறிவை தூண்டும்
  பேராசை அதை மங்க செய்து
  படுகுழியில் தள்ளிவிடும்

  பதிலளிநீக்கு