வியாழன், 27 செப்டம்பர், 2012

அந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -8)


அந்த  நாள்  ஞாபகம்  வந்ததே (பகுதி -8)

நம் நாட்டின் ஆன்மீக பாரம்பரியம்
பல யுகங்களை கடந்தது

பல நூற்றாண்டுகளை கடந்து ஒழுங்குபடுத்தப்பட்டு
முறைப்படுத்தப்பட்ட வாழ்க்கை நெறி 
நம்முடைய வாழ்க்கை முறை. 

நம்முடைய வாழ்க்கை முறை 
தர்மத்தை அடித்தளமாக கொண்டு 
அமைக்கப்பட்டது.
இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு பிரிவினருக்கும் 
அவரவர் வாழும் அக்கால வாழ்க்கைமுறையை 
அனுசரித்து வாழும் முறை நிர்ணயிக்கப்பட்டது.

ஒருவர் வாழும் வாழ்க்கை முறையில் 
மற்றொருவர் நுழைந்து தொல்லை 
கொடுக்க இயலாதபடி. வாழ்விடங்கள் அமைக்கப்பட்டு,
அதே நேரத்தில் ஒருவொருக்கொருவர் மோதல் நேராதபடி
ஒருவொருக்கொருவர் உதவி செய்து கொண்டு 
அமைதியாக வாழ்ந்து வந்தது நம் சமுதாயம். 
ஒருவரை பார்த்து ஒருவர் 
பொறாமை கொண்டது கிடையாது 
போட்டி கிடையாது.தகுதியுடையவர்கள்தான் போட்டி போடலாம்.

வெவ்வேறு சமூகத்தினிடையே மோதல்களை 
தவிர்க்கும் பொருட்டு அவரவர் வாழும் 
வட்டத்திலேயே போட்டிகள் நடத்தப்பட்டன

உதாரணமாக தச்சு வேலை செய்பவன் அரசன் நடத்தும் 
சுயம்வரத்தில் கலந்து கொள்ள வரமாட்டான்
அவன் வாழும் வாழ்க்கை முறை வேறு தகுதி வேறு. 
அங்கு அவன் பார்வையாளனாக மட்டும் தன்னை 
கருதிக்கொள்வான் திரைப்படத்தை காண்பது போல 

ஆனால் இன்று எல்லோரும் எல்லாமாக 
ஆகிவிடவேண்டுமேன்று ஆசைப்படுகின்றனர் 
தான் வயிறு நிறைவதற்க்கே வக்கில்லாதவன் 
ஒரு கோடீஸ்வரரின் மகளை மணக்க நினைக்கிறான்
படிப்பறிவில்லாதவன் ,ஒழுக்கமில்லாதவன் நன்றாக
படித்துவிட்டு காசு சம்பாதிக்கும் பெண்தான் 
வேண்டுமென்று விரும்புகிறான்.
கேட்டால் காதலுக்கு கண் இல்லை என்கிறார்கள்

இன்னும் கேட்டால் எல்லோரும் ஒரே குலம்
,எல்லோரும் ஒரே இனம் என்கிறார்கள்.
எதற்கும் ஒரு தகுதி வேண்டும் 
கல்வியறிவு பெற்றுவிட்டேன் என்று யாரும் 
மற்றவர்களிடம் மதிப்பையோ மரியாதையையோ 
எதிர்பார்த்தால் ஏமாந்துதான் போவார்கள்
கடந்த காலத்தில் அவ்வாறு எதிர்பார்த்தமையால்தான் 
சமுதாயம் பலவாறு பிரிந்து முரண்பட்டு நிற்கிறது

மதிப்பும் மரியாதையும் நேர்மையாக வாழ்பவர்க்கும்,
ஒழுக்கமாக வாழ்பவர்களை தானே தேடி வரும். 
அதை கேட்டு பெற வேண்டிய அவசியமில்லை
மரியாதையை எதிர்பார்ப்பது அகந்தையின்பாற்பட்டது.
மன உளைச்சலை தருவது 

புகழ்ச்சியை நாடுவோர் இகழ்ச்சியையும்
 ஏற்க்க தயாராக இருக்க வேண்டும் 
ஆனால் அதற்க்கு யாரும் தாயாரில்லை. 
மதிக்காவிட்டால் மிதிப்பேன் என்கிறார்கள். 
கூண்டோடு அழிப்பேன் என்று சவால் விடுகிறாகள்.
இதுதான் இன்றைய கலாசாரம் அனைத்து பிரிவினரும் கையாள்வது. .

கல்வியறிவு மக்களிடையே ஒற்றுமையை  உண்டாக்கவில்லை
மாறாக சமுதாயம் கண்ணாடி சில்லுகல்போல் உடைந்து நொறுங்கி கிடக்கிறது.
எந்த பிரிவை சேர்ந்தவராயினும் ஒருவரை ஒருவர்  மதிக்கவேண்டும் 
அதே நேரத்தில் அவரவர் அவர்களுக்கு பிடித்த வாழ்க்கை வாழும்போது 
அதன் இடையில் புகுந்து குழப்பம் உண்டாக்ககூடாது.  
பயிர் தொழில் செய்யும் விவசாயி அவன் விடியற்காலையிலேயே 
விவசாய பணிகளை செய்ய வேண்டியிருப்பதால் 
அவன் பயிர் செய்யும் நிலங்களுக்கு அருகே வசித்து 
அவன் கடமைகளை செய்தான்.

அவனுக்கு வேண்டிய கருவிகளை செய்து தருவதற்காக
தச்சர்களும், கொல்லர்களும் அவன் அருகே தங்கள் வாழ்விடங்களை   அமைத்துக் கொண்டனர். பயிர்த்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் அவர்களுக்கு அருகருகே குடிசைகளை அமைத்துக்கொண்டு. திருப்தியாக இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்தனர். 

சிறிது தூரத்தில் பொருட்களை விற்கும்  வியாபாரிகள் தங்கள் வாழ்விடங்களையும் கடைகளையும் அமைத்துக்கொண்டு அவர்கள் தொழிலை செய்தனர்

ஊருக்கு வெளிப்புறத்தில்  ஆவினங்களையும்,ஆடுகளையும் கொட்டடியில் கட்டி வைத்து மாடு மேய்க்கும் தொழிலை இடையர்கள் செய்து வந்தனர். 

சாத்திரங்களை ஓதுவதும், தர்ம நெறிகளை எடுத்துரைப்பதும் 
போன்ற பணிகளை அந்தணர்கள் செய்து வந்தனர். 
சுத்தமாக வாழவும், மனம் தெளிவாக சிந்திக்கவும் 
அவர்கள் பல கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு 
அமைதியாக வாழ்ந்துவந்தனர்

அவரவர் விருப்பப்படி பாரம்பரியப்படி கோயில்களை 
அவரவர் இடங்களில் நிறுவி இறை வழி பாடுகள் செய்து வந்தனர்.
பலர் இயற்கை சக்திகளை வணங்கி  வந்தனர்
இப்படியாக அமைதியாக போய்கொண்டிருந்ததுதான்
நம் நாட்டு மக்கள் வாழ்வு. 

போட்டியும்கிடையாது,பொறாமையும் கிடையாது 
ஒருவர் சுதந்திரத்திலே ஒருவர் தலையிடுவது கிடையாது.
எப்போதாவது வேண்டுமென்றே வெளியிலிருந்து வந்து குழப்பம் விளைவித்தால் மட்டுமே பிரச்சினை  உண்டாகும். பிறகு சகஜ நிலைமை திரும்பிவிடும். 

அதிகாரம் ஒரு காலத்தில் அரசனிடம் இருந்தது.
அடுத்த கால கட்டம் அயோக்கியர்களிடம் போயிற்று.
அடுத்த கால கட்டம் சுயனலக்காரர்களிடம் போயிற்று. 

அந்நியர்கள் நம் நாட்டின் மீது படையெடுத்து வந்து
 நாம் நாட்டு வளங்களை கொள்ளையடித்தனர். 
அத்துடன் திருப்தியடையவில்லை.
நம் கலாச்சாரங்களை திட்டமிட்டு அழித்தனர்
நம்முடைய நீதி நூல்கள் மக்களிடையே
மோதல் போக்கை உருவாக்கும் 
வகையில் மாற்றி எழுதி பரப்பினர்.

நாம் நமக்குள்ளே சண்டையிட்டுகொண்டோம்
நாசமாக போனோம். அடிமைகளானோம் 
ஆயிரக்கணக்கான தியாகிகளின்
உயிரை பலி கொடுத்து சுதந்திரம் பெற்றோம். 

இன்று நம்மை ஆளுபவர்கள் நம்மிடமே கொள்ளையடிக்கிறார்கள் 
யாரிடம் புகார் செய்ய?   இன்னும் பலவிதங்களில் பல வகையில்
 நாம் ஏமாற்றப்படுவதுடன் வாய் மூடி மெளனமாக 
அடிமைகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். (இன்னும் வரும்).

2 கருத்துகள்:

 1. உண்மைகள்
  உண்மைகள்தான்
  அது என்றும் மாறாது
  அது ஆழ்கடலில்
  பூமிக்கடியில்
  பரந்து கிடக்கும் வானத்தில்
  நல்லவர்களின் உள்ளங்களில்
  என்றும் பத்திரமாக இருக்கும்

  பொய்யர்களும் புரட்டர்களும்
  உண்மைகளை தந்திரமாக
  சில காலம் மறைக்கலாம்.

  உணர்ச்சிகளை தூண்டி
  பிழைப்பு நடத்தலாம்

  உணர்ச்சிகள் தோன்றிய வேகத்திலேயே
  மடிந்து போகும் மழை காலத்தில் முளைத்த காளான்கள்

  காளான்களில் விஷ தன்மை கொண்டவைகள்தான் ஏராளம்.

  இந்த சமூகம் விஷம் கொண்ட காளான்களை
  தான் அதிக அளவில் உணவாக
  உட்கொண்டு மாண்டு போகின்றன

  உழைப்பவர்கள் தங்களை
  தன் பேச்சால் ஏமாற்றி சுரண்டி
  சுகபோக வாழ்கை நடத்தும்
  அரசியல்வாதிகளை என்றுதான்
  இனம் காண போகிறார்களோ
  அன்றுதான் அவர்களின்
  துன்பங்களுக்கு விடிவுகாலம்

  அதுவரைஅவர்களுக்கு விமோசனம்
  என்பது கானல் நீர்.

  ஆனால் காலம் எல்லாவற்றையும்
  காலனை கொண்டு
  விழுங்கிவிடும் என்பது
  மாறாத உண்மை.

  பதிலளிநீக்கு