இன்பமும் துன்பமும்
இயற்கையின் நியதி
இதை உணர்ந்தவன் உள்ளத்தில்
என்றும் அடைவான் அமைதி
அவன் என்றும் படமாட்டான் அவதி
உறவும் பிரிவும் மனிதர்களின் இயல்பு
உறவினால் இன்பமும் வரலாம் துன்பமும் வரலாம்
பிரிவும் துன்பத்தை முதலில் தந்தாலும்
இன்பத்தை பின்னாளில் அது நிச்சயம் தரும்
பெண்ணை பெற்ற தந்தை
திருமணத்தின்போது
மகளை பிரியலாம்
பிரிந்த பெண் தன் கணவனோடு மகிழ்சியாக
வாழ்வதை கண்டால் உண்டாகும் இன்பம்
அதே நேரத்தில் பெண்ணை திருமணம்
செய்யாது வீட்டில் வைத்திருந்தால்
காலமெல்லாம் துன்பம்
பொருட்கள் மீதும் மனிதர்கள்மீதும்
பற்று வைத்தால் என்றும் துன்பம்தான்
ஏனென்றால் என்றாவது ஒருநாள்
அவைகள் நம்மை விட்டு விலகும்
இல்லையேல் நாம் அவற்றை
விட்டு விலக நேரிடும்.
இரண்டு நிலையிலும் துன்பம்தான்.
எனவே பற்றற்று இருப்போம்
ஆனால் பாசமுடனும் இருப்போம்
அவைகள் நம்முடன் இருக்கும்வரை
அதே சமயம் மகிழ்ச்சியோடு
விடை கொடுக்க கற்றுகொள்ளுவோம்.
அவைகள் நம்மை விட்டு விலகும்போது.
அருமையான கருத்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி...