புதன், 12 செப்டம்பர், 2012

இன்றைய மனிதர்கள்


இன்றைய மனிதர்கள்

இன்றைய மனிதர்கள் எப்படி இருக்கிறார்கள்?

எப்போதும் தன்னை தவிர பிற மனிதர்களின் 
அந்தரங்கங்களை அறிவதிலேயே காலத்தை கழிக்கிறார்கள்

தன் மனதில் என்ன இருக்கிறது என்பதை  அவர்கள் அறிய மாட்டார்கள்
பிறர் மீது குறைகள் காண்பதில் அவர்கள் காட்டும் ஆர்வம் 
தங்கள் மீதுள்ள குறைகளை பிறர்  சுட்டி காட்டினாலும் 
ஏற்றுக்கொண்டு தன்னை திருத்தி கொள்ள விரும்புவதில்லை 

தனக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத செய்திகளை படிப்பதும், 
அதை மற்றவர்களோடு சேர்ந்து கொண்டு விவாதித்து 
நேரத்தை வீணடிப்பதும் 
அவர்களுக்கு கை வந்த கலை

காலை முதல் இரவு படுக்க செல்லும் வரை 
தனக்கு தேவையற்ற செய்திகளை மீண்டும் மீண்டும் கேட்பதும்
, மீண்டும் மீண்டும் பார்த்த திரைப்படங்களையே 
சலிக்காமல் பார்த்து நேரத்தை வீணாக்குவதும் 
மின்சாரத்தை வீணாக்குவதும்
இன்றைய மக்களின் அன்றாட  
கடமைகளின் ஒன்றாகிவிட்டது. 

அரசியல்வாதிகள் மக்களுக்காக போராடுவதாக கூறி 
தினமும், வேலை நிறுத்தம், ஊர்வலம், 
என மக்களின் அன்றாட வாழ்வை துன்பதிற்க்குள்ளாக்க்குவது.  
அவர்களின் தினசரி கடமையாகி விட்டது.

ஒவ்வொரு பிரச்சினையும் பெரிதாக்கி 
மக்களை தூண்டி வன்முறையில் ஈடுபடவைப்பதும் 
அவர்கள் செய்யும் தினசரி வாடிக்கையாகிவிட்டது. 
அவர்களின் போராட்டத்தினால் எந்த காலத்திலும் ஏறிய 
விலைவாசிகள் குறைந்ததாக சரித்திரம் இல்லை.
 மாறாக ஆளும் கட்சிகள் நாளுக்கு நாள் 
எல்லாவற்றின் மீதும் வரிகளை விதித்து, 
கட்டணங்களை உயர்த்தி மக்களை துன்பத்திற்கு 
உள்ளாகுவது எந்த காரணம் கொண்டும் நிற்ப்பதில்லை. 
இதை மக்கள் உணராமையால்தான்
 இன்னும் அரசியல் கட்சிகள் மக்களை 
தங்கள் கட்டுபாட்டில் வைத்துகொண்டு 
பிழைப்பை நடத்தி வருகின்றன. 

யாரிடமும் நேர்மை இல்லை .ஆனால் ஊழல் ஊழல் 
என்று திருடனை துரத்தும்  கூட்டத்தோடு 
திருடனும் சேர்ந்து நின்று கொண்டு திருடன், திருடன் 
என்று கூக்குரல் போடுவதுபோல் 
எல்லோரும் ஒன்றாக கூச்சலிடுகிறார்கள். 

பாதிக்கப்படும் பாமர மக்கள் ஒன்று செய்வதறியாது 
திகைத்து போய் நிற்கிறார்கள்

இந்நிலை என்று மாறும்? 

1 கருத்து:

  1. நடக்கும் உண்மைகளை சொல்லி விட்டீர்கள்... ஜால்ரா கோஷ்டிகள் நிறைய உள்ளன(ர்) ... என்ன செய்வது... யாரை வேண்டுமானாலும் ஓரளவு மாற்றி விடலாம் / மாறி விடலாம்... இந்த ஜால்ரா கோஷ்டிகள் ...ம்ஹீம்... நோ சான்ஸ்...

    பதிலளிநீக்கு