புதன், 19 செப்டம்பர், 2012

பேயும் மதமும்

பேயும் மதமும் 
பேய்க்கும் மதத்திற்கும் 
என்ன சம்பந்தம்?

வள்ளலார் மதமான 
பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார்

வள்ளலார் ஏன் மதம் என்னும் 
பேய் பிடியாதிருக்க வேண்டும் 
என்று சொல்லவில்லை?

அவர் பேய்தான் மதம் ஆகிவிட்டது 
என்பதை புரிந்து கொண்டு விட்டதால் 
அவ்வாறு கூறியிருக்கக்கூடும் 

பேய் என்ன செய்யும்? 
யாரையாவது பிடித்து கொள்ளும்
பிறகு அவரை தன்  கட்டுப்பாட்டில்
வைத்துகொண்டு 
அவர்களை ஆட்டி படைக்கும் 

எல்லோரையும் பிடித்து கொள்ளுமா? 

எல்லோரையும் பிடிக்காது. 
யார் தன் சுய அறிவை நம்பாது பிறர் சொல்வதை கேடடு 
அதை ஆராயாமல் அப்படியே நம்புகிறார்களோ 
அவர்களை மட்டும் நிச்சயம் பிடித்துகொள்ளும்.
 சில நேரங்கள் பிடித்த மனிதர்களை கொன்றும் விடும்

பேய் பிடித்தால் என்ன நடக்கும் ,
அவர்கள் என்ன செய்வார்கள், எப்படி நடந்து கொள்வார்கள். 
அதன் முழு விவரங்கள் பல திரைப்படங்களிலும், தொலைகாட்சி தொடர்களிலும் விலாவாரியாக விலக்கப்பட்டு விட்டன. அந்த 
சப் ப்ஜெக்ட்டை வைத்து கோடிகணக்கில் காசும் பார்த்துவிட்டார்கள்
 பட தயாரிப்பாளர்கள்

ஆனால் இன்னும் பேய் கதைகள் மக்களை 
ஆட்டி படைக்கின்றன 
சாமியாடிகளும், மன நல மருத்துவர்களும்,
மாந்திரீகர்களும் லட்சக்கணக்கில் 
காசு சம்பாதித்துக்கொண்டிருக்கிரார்கள் .
எல்லா மதங்களிலும் மக்களை பிடித்த பேய்களை ஓட்டுவதற்கு என்று தனி  டிபார்ட் மெண்டே இருக்கிறது 
அதற்கென யூனிபார்ம் போட்டுக்கொண்டு ஆட்கள் கையில் மயில் தோகை , வேப்பிலை, சாட்டை என பலவிதமான ஆயுதங்களுடன் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அங்கு பேய் பிடித்து வரும் மனிதர்களை அடித்து, மிரட்டி, துன்புறுத்தி பேய்களை விரட்ட முயற்சி செய்கிறார்கள். பேய் பிடித்தவர்களால் குடும்பத்தினர் படும் துன்பம் அதிகமாக இருப்பதால் மக்களும் அந்த சித்திர  வதையை பார்த்துகொண்டு வாய்மூடி மௌனியாக இருக்கிறார்கள் 

இருந்தாலும் மக்களை விட்டு பேய்கள் ஓடுவதாக தெரியவில்லை. நாளுக்கு நாள் பேய் பிடித்தவர்கள் கூட்டம் பெருகி கொண்டே போகிறது. விஞ்ஞானத்தில் வளர்ந்த நாடுகளே பேய்கள் இருப்பதாக ஒப்புக்கொண்டு ஆராய்சிகள் செய்து கொண்டு ,அதை விரட்டுவதாக தொலைகாட்சி தொடர்கள்  எடுத்து கோடிகணக்கில் பணம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் 

அது சரி மதங்களும் பேய்க்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி?

மனிதர்களை மத வெறி என்னும் பேய் பிடிக்காதவரை அன்போடு ஒருவருக்கொருவர் உதவி செய்துகொண்டு அமைதியாக வாழ்கிறார்கள் மதவெறி என்னும் பேய் பிடித்தவுடன் அனைத்தும் தலைகீழாக மாறிவிடுகிறது ஒரு மனிதன் பேய் பிடித்தால் என்ன வெல்லாம் செய்வானோ அதையேதான் மத வெறி பிடித்தவனும் செய்கின்றான். அவன் அழிவு செயல்களில் ஈடுபடுகின்றான். மற்ற மதத்தினரை வெறுக்கின்றான்.
ஆனால் உண்மை என்ன ?

மதம் என்பது இறைவனை உணர்ந்துகொள்ள உருவாக்கப்பட்ட 
ஒரு மார்க்கம் அதாவது வழி 
மனிதர்களுக்கு  எந்த வழி பிடித்திருக்கிறதோ 
அந்த வழியில் அவர்கள் செல்கின்றனர் . 
ஆனால் மனிதர்கள் இன்று வழி தவறிவிட்டார்கள்
மனதிற்கு அமைதியை தரவேண்டிய மத கோட்பாடுகள் 
வெறும் கூப்பாடுகளாகிவிட்டது. சாப்பாட்டு கூடங்கலாகிவிட்டது 

அன்பினால் பெறப்படும் இறைவனை வெறுப்பினால் ஆராதிக்க தொடங்கிவிட்டனர். அதனால் இறைவன் எங்கோ சென்று ஒளிந்துகொண்டுவிட்டான்

2 கருத்துகள்:

 1. யோசித்து மக்கள் திருந்த வேண்டும்
  மக்களின் அறியாமை விலகி
  அயோக்கியர்களின் பிடியிலிருந்து
  மக்கள் விடுபட்டு மகிழ்வோடு
  அமைதியோடு வாழ வேண்டும்
  என்பதே என் விருப்பம்.

  பதிலளிநீக்கு