வியாழன், 27 செப்டம்பர், 2012

அந்த நாள் ஞாபகம் வந்ததே (பகுதி -9)


அந்த  நாள்  ஞாபகம்  வந்ததே (பகுதி -9)

அந்த  காலத்தில் குடும்பத்தில் பெண்கள்  கருவுற்றாள் என்றால் 
குடும்பத்தில் அவளை அனைவரும் மகிழ்சியாக வைத்து கொள்ளுவார்கள்.

அதற்காக அந்த பெண்ணும் எந்த வேலை 
செய்யாமல் சோம்பி திரிந்தது கிடையாது 
பிள்ளை பெறும்வரை வீட்டில் அனைத்து 
வேலைகளும் செய்து வந்ததால் 
அதனால் உடல் பிள்ளை பெறுவதற்கு
 சாதகமாக நிலையில் இருந்தது

ஒவ்வொரு பிரசவமும் வீட்டில்தான் நடக்கும் 
அதுவும் சுக பிரசவமாகதான் இருக்கும் 
எப்போதாவது ஒரு சூழ்நிலையில்தான் மரணம் நிகழும் 
ஒரு பெண் பல குழந்தைகளை அந்த காலத்தில் 
அனாயாசமாக ஈன்றெடுத்தாள்
அவைகளை நல்ல பண்புள்ள 
மக்களாக பாசமுடன் வளர்த்தாள்.
ஒருவரை ஒருவர் மட்டம் 
தட்டி பேசுவது கிடையாது 
அனைவரையும் ஒன்றாகத்தான் பார்த்தாள்.  

ஆனால் இன்றைய நிலை என்ன?
பெண் கருவுற்றாள் என்று தெரிந்ததிலிருந்தே 
பரிசோதனைகள் என்ற பெயரில்
பெண்ணுக்கும் கணவனுக்கும் சோதனைகளும் 
வேதனைகளும் ஆரம்பமாகிவிடுகின்றன 
சில ஆயிரங்களிலிருந்து பல லட்சம் வரை
காசு கரைந்து போகின்றது 

இக்கால பெண்கள் கருவுற்றவுடனே மருத்துவர்கள் 
அவள் எந்த வேலையும் செய்யக்கூடாது 
வேலை செய்தால் கரு கலைந்துவிடும் என்று பயமுறுத்தியே
அவர்களை மன நோயாளிகளாக்கி விடுகிறார்கள். 
வேலை எதுவும் செய்யாமையால் உடல் எடை அதிகமாவதும்
நீரிழிவு நோய் தாக்குவதும் ,ரத்த சோகை நோய் பிடிப்பதும் 
அதற்க்கு சிகிச்சை செய்வதும், 
நோய் நிலையை பரிசோதிப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
அந்த காலத்தில் பல பிள்ளைகளை பெற்றும் 
முதுமைகாலத்திலும் சுறுசுறுப்பாக இருக்கும்
பெண்கள் இன்றும் இருக்கிறார்கள். 
ஆனால் இக்காலத்தில் ஒரு  பிள்ளை பெறுவதற்குள் 
அவர்கள் முதுமைஅடைய துவங்கிவிடுகிறார்கள் 
ஏனெனில் அவர்களை வளர்த்து ஆளாக்குவது பெரும்பாடு 

இக்காலத்தில் பல குடும்பங்களில் பிறக்க போவது 
பெண் குழந்தைகள் என்றால் இரக்கமின்றி கொன்றே விடுகிறார்கள் 

குழந்தைகளை வளர்க்கும் முறையும் இக்காலத்தில் சரியில்லை
அனைவரும் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கிறார்கள் 
அல்லது அவர்களை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள்
தங்கள் குழந்தையின் திறமையை கண்டறிந்து அந்த துறையில் அவனை கொண்டு செல்லும் பெற்றோர்கள் மிக குறைவு. 
பிறரோடு ஒப்பிட்டு பார்த்து தன் குழந்தை அவர்களைபோல்
வரவில்லையே என்று கொடுமைபடுத்தும்
பெற்றோர்கள்தான் இன்று அதிகம். 
 
இந்த இரண்டு செயல்களும் பிற்காலத்தில் அவர்களுக்கு 
தீர்க்க முடியாத தலைவலிகலாக உருவெடுக்கின்றன. (இன்னும் வரும்).

1 கருத்து:

  1. ஆஹா. அருமையான பதிவு.
    எல்லோரும் எழுத தயங்கும் விஷயம். நன்றாக அலசியிருக்கிறீர்கள்.
    எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு