அந்த நாள் நினைவில் வந்ததே(பகுதி-14)
இன்று வளி மண்டலத்தில்
ஓசோன் நிறைந்துள்ள பகுதியில்
ஓட்டை விழுந்துவிட்டது என்று
மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறது
மேலைநாட்டு புளுகு கூட்டம்
அதற்க்கு யார் காரணம்?
கடந்த ஒரு நூற்றாண்டிற்குள்
அவர்கள் இந்தஉலகை நாசமாக்கிய
விஷத்தை கக்கிய, அணுகுண்டுகள்,
ரசாயன குண்டுகள்,மற்றும்
பலவிதமான நச்சு வாயுக்களை வெளிவிடும்,
அவர்கள் நிறுவிய
தொழிற்சாலைகள்தான் காரணம்.
பல்லாயிரம் ராக்கட்டுகளை வானில் வெடித்து
விண்வெளியில் செலுத்தி
அது வெளியிட்ட புகையும் விஷ வாயுக்களும்
வான் வெளியை ஒன்றுமே செய்யவில்லையாம்
அவர்கள் கடந்த நூறு ஆண்டுகளாக நிறுவிய
அணுஉலைகளிலிருந்து வெளியிட்ட கதிர்வீசுகளால்
உலகம் பாதிக்கப்படவில்லையாம்
அணுஉலைகழிவுகள் பல ஆயிரம் ஆண்டுகள்
ஆனாலும் அபாயகரமானவை. அதை அவர்கள்.கடலில்
கொண்டு யாருக்கும் தெரியாமல் கொட்டிகொண்டிருக்கிரார்கள்.
இன்னும் பூமியில் எங்கெல்லாம் புதைத்து வைத்திருக்கிறார்கள்
என்பது யாருக்கும் தெரியாது
இவர்கள் செய்த அக்கிரமங்களால் வான் வெளியில்
ஓட்டை ஏற்பட்டதே தவிர மற்ற நாடுகளால் அல்ல
என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்.அதை மறைப்பதற்காக
புதிது புதிதாக கரடி விட்டு கொண்டிருக்கிறார்கள்
இன்று குண்டு பல்பு எரிவதால் பூமியே சூடாகிவிடுகிறதாம்
காதில் பூ சுற்றுகிறார்கள். ,குளிர்சாதன பெட்டியிலிருந்து
வாயு வெளியேறி வளி மண்டலத்தில் ஓட்டையாகிறது
என்று கொண்டையில் மேலும் பூ சுற்றுகிறார்கள்
நாங்கள் மண்பானையில் எந்த சிலவும் இல்லாமல் சில்லென்று
வெட்டிவேர் போட்டு சுவையான உடலுக்கு கேடு விளைவிக்காத
தண்ணீரை குடித்து கொண்டிருந்தோம் அந்த காலத்தில்.
நீங்கள் உருவாக்கிய குளிர்சாதன பெட்டிகளை எங்கள் தலையில் கட்டி
எங்களை அந்த மின்சார குப்பை தொட்டிக்குள் மீண்டும் எழமுடியாமல் தள்ளியதே மேலைநாட்டினர்தான்
ஆர்டிக் பிரதேசத்தில் பனி உருகுகிறது,உலகம்மூழ்கிவிடும்
என்றெல்லாம் கதை விட்டு கொண்டிருக்கிரார்கள்.
விதவிதமான நச்சு தன்மைகளை கொண்ட கண்டுபிடுப்புகளை நிகழ்த்தி இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மக்களை மாற்றி பூவுலகை புண்ணாக்கிய அவர்களின் கண்டுபிடிப்புகள்தான் மனித குலத்தின் துன்பத்திற்கு காரணம்.
பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி உடல்நல்திர்க்கு கேடுவிளைவிக்காமல் உணவு உற்பத்திசெய்து நலமாக வாழ்ந்து வந்த மக்களை நச்சுத்தன்மை கொண்ட ரசாயன உரங்களையும்,பூச்சி கொல்லி மருந்துகளையும் தலையில் கட்டி விவசாயிகளை கடன்காரர்களாக்கியும் , நல்ல நிலங்களை பழாக்கியும் ,மக்களை நிரந்தர நோயாளிகளாக்கிய அந்த கும்பல்தான் இன்று ரசாயன உரங்களை,பூச்சிமருந்துகளை உபயோகிக்காதீர்கள் என்று போதனை செய்கிறது
இரண்டு உலக போர்களைநடத்தி கோடிகணக்கான மக்களை கொன்றும் இன்னும் உலகம் முழுவதும் வன்முறைகளை தூண்டிக் கொண்டும் போர்களை நடத்திக்கொண்டும் டன் கணக்கில் வெடிமருந்துகளை வெடித்தும், விஷ வாயுகுண்டுக்ளை செலுத்தியும் இயற்க்கை வளங்களை அழித்து கொண்டிருக்கும் இந்த நாச கார கும்பல்கள் இந்த உலக மக்களுக்கு செய்துள்ள அராஜகம் எழுத்தில் அடங்காது.
ஒவ்வொரு நாட்டின் மீது படையெடுத்து அந்த நாட்டின் பழங்குடிகளை கோடிகணக்கில் அழித்து, உயிரோடு அடிமைபடுத்தி விலங்கிலும் கேவலமாக இரும்பு சங்கிலியால் கட்டிகொடுமைபடுத்தியதை இன்றைய தலைமுறைக்கு வேண்டுமானாலும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் கொடுமைபடுத்தப்பட்டு மாண்டு போன அந்த ஆன்மாக்கள் இந்த அயோக்கியர்களை என்றும் மன்னிக்காது.
நம் நாட்டில் அந்த காலத்தில் ஏது பிளாஸ்டிக்?
பயன்படுத்தியது எல்லாம் இயற்கையான் பொருட்களே
சாப்பிடுவதற்கு வாழை இல்லை
சாப்பிட்டுவிட்டு போட்டால். மாடுகள் தின்றுவிடும், ஜீரணித்து சாணமாக மாற்றி அருமையான உரமாக மாற்றி நமக்கே தந்துவிடும். பாதா மரத்தின் இலை, , மந்தார இலை ஆல மர இலை போன்றவற்றில்தான் உணவு உண்டோம் .பிளாஸ்டி தட்டுகளிலா உணவு உட்கொண்டோம்?
அனைத்திற்கும் உடலுக்கு நன்மை பயக்கும் சுற்று சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்டங்களை பயன்படுத்தி நல்ல உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தோம்.
ஆலகால் விஷம்போல் என்றும் அழியாத பிளாஸ்டிக்கை நம் தலை மீது கட்டி அதை அனைத்து வகையில் பயன்படுத்தும் படுபாதக நிலைக்கு நம்மைதள்ளியதே மேலை நாட்டினர்கள்தான்
இன்று பிளாஸ்டிக்கை பயன்படுத்தாதீர்கள். அதனால் புற்றுநோய் வரும் என்று அறிவுரை வேறு சொல்கிறார்கள். சாத்தான் வேதம் ஒதுவதைபோல
(இன்னும் வரும்)
விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
பதிலளிநீக்குகுடி,பீடி,சிகரெட்டு,கஞ்சா,பான்பராக், சினிமா மோகம், அரசியல் மோஹம், மதவெறி, மொழிவெறி, ஜாதி வெறி, இன வெறி, சுயநலம், பேராசை, பொறாமை, போட்டி ,மூடநம்பிக்கைகள் ,சிந்திக்கும் திறனின்மை ,தொலை காட்சிமோகம் கைபேசி,வலைத்தளம் பயன்பாடுகள் வெளிநாட்டு மோகம் ,பொய், பித்தலாட்டம்,ஆன்மீக புரட்டர்களின் பொய்யான வாதங்கள். , என பலவிதமான நோய்களுக்கு ஆட்பட்டு குழம்பி போய் கிடக்கும் இந்த மனித குலம் ஒரு கலங்கிய குளம்
பதிலளிநீக்குஅதில் அயோக்கியர்கள் மீன் பிடித்து தின்று கொண்டிருக்கிரார்கள்
குளத்தில் நீர் எப்போது தெளியும் ?
மக்கள் மனதில் எப்போது தெளிவு பிறக்கும் ?
கேள்விக்குறியே