வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஜன நாயகம் என்னும் கேலி கூத்து?

ஜன நாயகம் என்னும் கேலி கூத்து?

ஜனங்களுக்கு ஜனங்களால்

தனக்கு தானே வைத்து கொண்ட ஆப்பு

ஜன நாயகம் என்றால் மக்களுக்காக மக்களால்

மக்களை ஆட்சி செய்யும் முறை என்று விளக்கம் தரப்படுகிறது

ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது?

சர்வதிகாரிகளின் கொடுங்கோல் ஆட்சியைவிட  மோசமாக மக்கள் நடத்த படுவதும் கொடுமைபடுத்தபடுவதும், சுறண்டபடுவதும்,ஏமாற்றபடுவதும், நிர்வாகம் என்ற பெயரில் மக்களின் சுதந்திரம் பறிக்கபடுவதும் ,காவல் துறையினரால் மக்கள் தினமும் துன்புறுத்த படுவதும்,  அரசுகளே மக்கள் மீது தினம் தினம் வரிகளை விதித்து விலைவாசியை உயர்த்தி மக்களை வதைப்பதும் அன்றாட நிகழ்வுகளாகி போய்விட்டன

தேர்தல் என்ற மாய வலையின் மூலம் அரசு நிர்வாகத்தில் நுழையும் சில அயோக்கியர்கள் மக்களை ஏமாற்றி,கொழுக்கின்றனர்
தொடர்ந்து இந்த நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டு வருகிறது

மக்கள் என்னசெய்வதென்றறியாது ஆப்பசைத்த குரங்கு போல் 

மாட்டி கொண்டு நரக வேதனை படுகின்றனர்

இந்த துர்பாக்கிய நிலைமையை அடைவதர்காகாவா 

நாம் அன்னியரிடமிருந்து பல உயிர் தியாகங்கள் செய்து சுதந்திரம் பெற்றோம்?

இந்த சுதந்திரம் நம்மை தந்திரமாக பல வழிகளில் ஏமாற்றி ஒரு சிலரே அனுபவித்து கொழுக்கவா இந்த சுதந்திரம் பயன்படுகிறது?

எங்கு பார்த்தாலும்  லஞ்சம், எதிலும் லஞ்சம் அடிப்படை உரிமைகளை பெற கூட 

லஞ்சம் கொடுக்கவேண்டியதை கொடுத்தால்தான் கிடைக்க வேண்டியது கிடைக்கும்

கடமையை செய்ய லஞ்சம் கேட்கும் இந்த ஈன பிறவிகளை யார் தண்டிப்பது?

இந்த அசிங்கமான மனநிலையை மக்களிடம் ஏற்படுத்தியது யார்?
தவறு செய்வதற்கு அஞ்சாமல் தவறு செய்தால் தண்டனை உண்டு என்று தெரிந்தும் தவறு செய்யும் மனிதர்களுக்கு இந்த தைரியத்தை அளித்தது யார் ?

கையாலாகாத சட்டங்களும்,ஊழல்  நிறைந்த அதிகாரிகளும் காலம் தாழ்த்தி நீதி வழங்கும் நீதி துறையும்தான்


இன்று நாட்டில்,உண்மை இல்லை ,தர்மம் இல்லை, நேர்மையில்லை, பாதுகாப்பில்லை மக்கள் தொகையில் பெரும்பாலான மக்களுக்குவயிறார உண்ண 
உணவில்லை, உடுக்க உடைஇல்லை  இருக்க இடமில்லை,கல்வியில்லை சமூக விரோதிகளிடமிருந்து எந்த பாதுகாப்பும் இல்லை

உலக மக்கள் உயிர் வாழ உணவு வழங்கும் விவசாயிகளுக்கு உண்ண உணவில்லை.அவர்கள் பயிர் செய்ய வாங்கிய கடனை திருப்பிசெலுத்த வழியில்லாமல்.தற்கொலை செய்யும் நிலையை அரசுகள் உருவாகிவிட்டன

ஆனால் அவர்களை ஏமாற்றி அவர்களிடம் பொருட்களை வாங்கி பதுக்கி வைத்து அவர்களிடமே அதிக விலையில் பொருட்களை விற்று கொழுக்கும் தரகர்கள், வணிகர்கள் இன்று புற்றீசல்கள் போலி பெருகி நம் நாட்டு மக்களை அரித்து தின்றுகொண்டிருக்கிரார்கள்

பன்னாட்டு வணிக கொள்ளையர்கள்நமக்கு தேவையற்ற நமக்குகெடுதல் விளைவிக்கும் பொருட்களை கொள்ளை விலையில் விற்று நம் நாட்டு செல்வத்தை கொள்ளையடித்து  செல்கின்றனர். இதற்க்கு நம்மை ஆளும் அரசுகளே அவர்களுக்கு பாதுகாப்பாக செயல்படுவது வேதனைக்குரியது 
.
இதையெல்லாம் கேட்க நாதியில்லை

எடுத்து சொன்னாலும் மக்களுக்கு புரிந்துகொள்ளும் சக்தியும் இல்லை

இதை அரசுகள் கண்டுகொள்ளாமல் வெறும் கண்துடைப்பு நாடகங்களை
நடத்திக்கொண்டு வருகின்றன

அரசுகள் அறிவிக்கும் எந்த சலுகளைகளும்

 பயனாளிகளுக்கு போய் சேருவதே கிடையாது

இடையில் உள்ள பலர் அதை பறித்து கொள்கின்றனர்

இதற்கெல்லாம் எப்போது தீர்வு?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக