செவ்வாய், 18 செப்டம்பர், 2012

சண்டைக் கோழிகள்.


சண்டைக் கோழிகள். 









இந்த உலகத்தில் சிலர் எப்போதும் மற்றவர்களோடு 
சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள்

காலையில் கண் விழித்தது முதல் இரவு உறங்க செல்லும் வரை 
யாருடனாவது பிரச்சினை பண்ணி கொண்டே இருப்பார்கள். 

அதனால் அனைவரிடமும் அவர்களுக்கு 
கெட்ட பெயர்தான் கிடைக்கும்
அவர்கள் இறுதி வரை திருந்துவதே இல்லை

அவர்களுக்கு நண்பர்கள் என்று எவரும் இருப்பதில்லை
பலரும் அவரை விட்டு ஒதுங்கி செல்லவே விரும்புவர்

அதனால் அவர்கள் மனம் பாதிக்கபட்டு. மருத்துவ மனைகளில் 
தஞ்சம் புக நேரிடும். அவர்களுக்கு நரம்பு தளர்ச்சி நோய்களும் 
இதய நோய்களும், வயிற்றில்  பலவிதமான நோய்களும் 
அவர்களை தாக்கி அவர்களை மேலும் துன்புறுத்தும்.
 
குடுபத்திலும் அவர்களுக்கு நல்ல பெயர் கிடையாது
வெளியுலகிலும் நல்ல பெயர் கிடையாது

அவரை சந்திப்பவர்கள் அவரிடம் ஏதாவது 
வேலை நடைபெறவேண்டும் என்றால்
அவர்களுக்கு சாதகமாக நடப்பது பேசி 
தங்கள் வேலைகளை முடித்து கொள்ளுவார்கள்.
அதனால் அவர்கள் பிறரிடம் 
மிக சுலபமாக ஏமாந்து போவார்கள். 

பிறரோடு போராடும் குணம் இவர்களுக்கு
 பிறவிக்குணமாக அமைந்து இருக்கும்
அவர்களுக்கு பிறரை அனுசரித்து வாழ தெரியாது. 
எங்கு சென்றாலும் பிரச்சினையை
 உண்டாக்கி கொண்டு பிறரின் மனதை
நோகடிப்பதுடன் அவர்களும் 
மன நிம்மதியில்லாமல் தவிப்பார்கள்
அவர்கள் குடும்பமும் அது போலதான்.
 வேறு வழியில்லாது அவரின்
தொல்லைகளை தாங்கி கொண்டு
 வாழ பழக தொடங்கும்.

ஒரு கால கட்டத்தில் அவர்கள் மற்றவர்களால் 
வெறுத்து ஒதுக்க படுவார்கள்
அப்போதுதான் அவர்கள் தங்களின்
 தவறுகளை உணர தலைப்படுவார்கள்
ஆனால் அப்போது காலம்
 கடந்து போய் விட்டிருக்கும்.

எனவே இதை போன்ற குணமுடையவர்கள் இந்த போக்கை 
தங்களை இளமையிலேயே திருத்திக்கொண்டால் 
அவர்கள் வாழ்க்கை மற்றவர்கள் போல் வெற்றி பாதையில் செல்லும். 


3 கருத்துகள்:

  1. மிகச் சரியான கருத்து
    விரிவாக தெளிவாக அருமையாக பதிவு
    செய்துள்ளீர்கள்
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. /// தங்களை இளமையிலேயே திருத்திக்கொண்டால்... ///

    அது தான் முக்கியம்...

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    திரு. ரமணி மற்றும் DD அவர்களே

    பதிலளிநீக்கு